சூரியவெவ - வெவேகம பகுதியில் இன்று மதியம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மதியம் சந்தேகநபர்கள் சிலரை கைது செய்வதற்கு சென்றிருந்த போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் 5 பொலிஸார் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment