காபூலில் இரு தற்கொலைத் தாக்குதலில் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
ஐஎஸ் அமைப்பு இதற்கு உரிமை கோரியிருக்கிறது. தலிபான் இதைக் கண்டித்திருக்கிறது.
இனி என்ன? தினமும் இப்படி ஏதாவது செய்தி வந்து கொண்டேயிருக்கும்.
தலிபான்களைப் 'பயங்கரவாதிகள்' என்ற அரசுகள் இனி ஐஸ் இயக்கத்தை ஒழிக்க
அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுப்பார்கள். ஏன் அமெரிக்கா கொடுத்தாலும் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால்
வரலாறு அப்படித்தான் இருக்கிறது.
இதுதான் தருணம் என்று சீனாவோ/ ரஸ்யாவோ தங்கள் படைத் தளங்களை அங்கு நிறுவலாம்.
எதுவும் நடக்கலாம். ஆனால் அந்த மண்ணில் அமைதி என்பது மட்டும் இருக்கப் போவதில்லை. அதுதான் உண்மை.
அந்நிய சக்திகளிடம் இறைமையை அடகு வைத்த தேசங்களின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.
எமக்கு எழுதி எழுதி கை வலித்து விட்டது. இனியாவது தலைவர் இந்தியப் படைகளுடன் சேர்ந்து மாகாண சபை ஆட்சியை ஏன் அமைக்கவில்லை?/ அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்படவில்லை? என்பதை புரிந்து கொள்ள எத்தனியுங்கள்..
தமக்கான சுய நிர்ணய உரிமையுடன் இரு தேசமும் தீவில் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்
விரும்பினார். குறுக்கு வழியில் சிங்கள மக்களைப்
பலி கொடுத்து அவர்களின் இறைமையைச் சிதைத்து விடுதலையை அடைய அவர் விரும்பவேயில்லை.
அதற்கு பெயர் விடுதலை இல்லை என்பதும் அவருக்கு தெரியும்.
இல்லையேல் 1987 இலும், 2009 இலும் வேறு வரலாற்றை எழுதியிருப்பார். தீவு சுடுகாடாயிருக்கும்.
இதையெல்லாம் சிங்கள மக்களுக்குச் சொல்ல வேண்டிய தமிழ் அரசியல்வாதிகளும்/ மெத்தப் படித்த மேதாவிகளும்,
தமிழினத்தை அழித்தது மட்டுமல்ல சிங்கள இறைமையையும் அந்நிய சக்திகளுக்கு அடகு வைக்கத் துணிந்த
சிங்கள அரசியல்வாதிகளின் சாவுக்கு மூக்கு முட்ட குடித்து விட்டு'நெஞ்சார' குப்புற விழுந்து கிடக்கிறார்கள்.
ஆனால் வரலாறு தமிழீழத்தை மட்டுமல்ல வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சேர்த்து விடுவிக்கும்.
அப்போது சிங்கள தேசத்தில் பிரபாகரன் வழிபாட்டுக்குரிய ஒருவராக மாறியிருப்பார்.
இப்போது
'நெஞ்சார'
விழுந்து கிடப்பவர்கள் அப்போது வரலாற்றில் குப்புறக் கிடப்பார்கள்.
Parani Krisna Rajani (faceboook)
Post a Comment