டெல்டா தொற்று மற்றும் திரிபடைந்த தொற்றுக்கள் ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாஸ இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
உலக சுகாதார ஸ்தாபனம் மட்டுமல்ல, உள்நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவ நிபுணர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவச்சபை என பலரும், நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்கம் செய்யும்படி கேட்கின்றனர்.
ஏன் அப்படி சொல்கின்றனர்? யார் என்ன சொன்னாலும் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்தால் முழு நாடும் ஆபத்தில் சிக்கிவிடும்.
நான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தபோது மரண பயம் பற்றிப்பிடித்தது. அதே மரண பயம்தான் இன்று நாடு முழுவதிலும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கொள்கலன் லொறிகளில்தான் இன்று கொவிட் உடல்கள் அடக்கம் செய்ய கொண்டுசெல்லப்படுகின்றன.
இன்று சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தேசிய பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு வாரங்களுக்கு நாட்டில் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அரச தலைவருக்கு கோரிக்கையை முன்வைப்போம்.
அரசாங்கம் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்களே தங்களது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment