ராகவன் என்றழைக்கப்படும்
சின்னையா சிவகுமார் தமிழீழ ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தையும் , தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சுமார் 35 ஆயிரம் மாவீரர்களையும்
அதன் போராளிகளையும் கேவலமாக கொச்சைப்படுத்தி
அண்மையில் ஓடியோ பதில் வெளியிட்டிருந்தார் . இவரது கருத்துத் தொடர்பான உண்மை நிலவரங்களை
சுழியோடி தருகிறார் .
துணிச்சலுக்கும் ரௌடியிசத்துக்கும்
வித்தியாசம் தெரியத ராகவன்!
சுழியோடி
மார்க்ஸிய
வாதிகள் - சோஷலிசவாதிகள் என்ற பெயரில் தத்துவங்களைப்
பொழிய நினைப்பவர்களிடம் ஒரு பெரிய குறைபாடு
உண்டு.எலிக்கும் புலிக்கும் ஒரேயளவிலான சட்டை
போட்டுப் பார்க்க நினைப்பது; இலங்கை நிலைமையும் இந்திய நிலைமையும் ஒன்றுதான் என்ற நினைப்பில் இவர்களது
அடிமட்டத்தால் எல்லாவற்றையும் அளக்க முனைவது. உண்மையில் மொழியின் பெயரால் ஏற்பட்ட உணர்வுகளே இந்தியத் தமிழரையும் இலங்கைத் தமிழரையும் ஒன்றிணைத்தன. பழக்க வழக்கங்கள் என்று பார்த்தால் தமிழகத்தை விட கேரளாவின் நடைமுறைகளே
இலங்கையருடன் ஒத்துப் போகிறது. உதாரணத்துக்கு ஒரு நோய்க்கு மருந்து
எடுத்தபின் தாக்கம் குறையும் போது இரண்டு இட்லி
கொடுத்துப் பாருங்க என்று தமிழக வைத்தியர் நோயாளியைப் பாராமரிப்பவரிடம் கூறுவார். இலங்கை வைத்தியர் ஒரு போதும் இட்லியை
சிபாரிசு செய்யமாட்டார்.
தற்போது
ஒரே அடிமட்டத்துடன்புறப்பட்டிருப்பவர்
ராகவன் என அறியப்பட்ட சின்னையா
சிவகுமார் (Rajeskumar)
. இலங்கை இடது சாரிகள் தமிழ்
மக்கள் மனதில் ஆழமாகப் பதிய முடியாமற் போனதற்கு
நீண்ட வரலாறு உண்டு. (ஆலயப் பிரவேசம்
போன்ற ஒரு சில விடயங்களைத்
தவிர) சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது "ஒரே மொழியெனில் இரு
நாடு; இருமொழியெனில் ஒரு நாடு" என்று
சுட்டிக்காட்டியவர் இடது சாரியான கொல்வின்
ஆர்.டி சில்வா. இவர்தான்
பின்னர் 1972 ல் தமிழரை இரண்டாம்
தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கியவர்.
அச்
சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வைத்தியலிங்கம் தலைமையிலான இடதுசாரிகள் குழுவொன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் சில திருத்தங்களைச் செய்யவேண்டுமென்று
மன்றாடியபோதும் கொல்வின் இறங்கிவரவில்லை.இடது சாரியாக இருப்பதைவிட
சிங்களவராகத் தன்னை
அடையாளப் படுத்தினால்தான் அரசியலில் தான் நீடித்து நிற்கலாம்
என்பது அப்போதைய அவரது தீர்மானம்.இடது சாரிகள் சேர்ந்து
அமைத்த ஆட்சிதான்
இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது.
ராகவன்
பெயர் மறந்துபோன புத்தகத்தின் பெயர் `சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி---- ` இதன் பின் இணைப்பாக
ரோகண விஜய வீரவின் கருத்துக்கள்
இடம்பெற்றுள்ளன. இவர் தோட்டத்தொழிலாளர்கள் இந்தியாவின் ஏஜெண்டுகள்
என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்.
காலிமுகத்திடலிலும்,யாழ்பாணக் கச்சேரி முன்பாகவும் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்கள் சிங்களப் பொலீசார்,குண்டர்களால் ஆயுதமுனையிலேயே வன்முறைமூலம் அடக்கப்பட்டன.அன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட இராஜலட்சுமியின் மகன்
தான் பின்னாளில் சாதனைகள் பல புரிந்த கிட்டு.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்
ஒரு நிகழ்வுக்கு தனது அண்ணா காந்திதாசனுடன்
இவர் சென்றிருந்த புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது.சிங்கள மொழியைப் படிப்பது கட்டா யம் என்ற நிலை
வந்த போது காசி ஆனந்தன்,முதற்கொண்டு அண்மையில் காலமான இலங்கை வானொலி அறிவிப்பாளர் யோக்கிம் பெர்னாண்டோ வரை பெரும் எண்ணிக்கையிலானோர்
தமது அரச பணியைத் துறந்தனர்.
எல்லாமே மொழியுணர்வின்பாற்பட்டவையே.
இன்று
மார்க்ஸியத்தில் டாக்டர்பட்டம் பெறாமல்
போராட்டம் நடத்தப் புறப்பட்டது பிரபாகரன் செய்த மாபெரும் தவறு... அபச்சாரம் என்ற பாணியில் விளக்கமளிக்க
முற்படுகின்றார் ராகவன். அந்தக் காலத்தில் ராகவனின் கையில் ஏதாவது மார்க்ஸ்ஸியப் புத்தகம் கிடைத்திருந்தால் அதனைக் கடலைக் கடையில்தான் விற்றிருப்பார்.
தமிழரின்
ஆயுதப் போராட்டம் தொடங்கிய
பின்னர் ஒரு பொது வெளியில்
இன்னொரு இயக்கத்தவர் மீது
துப்பாக்கியால் சுட்டு மோதலை ஆரம்பித்த வரலாறு ராகவனுக்கே உண்டு."முகுந்தன் போல கிடக்கு" என்று
பிரபாகரன் சொல்லி முடிக்க முன்னரே இவர் சுட்டு விட்டார்.
இன்று எந்தக் கங்கையின்
புனித நீரைத் தன் மீது தெளித்தாரோ
தெரியவில்லை;ஏனைய இயக்கங்களை அழித்தவர்கள்
புலிகள் என்று குற்றஞ்சாட்டுகிறார்.
பொது
வெளியில் ராகவன் சுட்ட பின்னரே இன்று தமது இயக்கத்தவர்கள் என்று
பகிரங்கமாக டெலோ நினைவு கூரும்
தாஸ் மீதும் அவரது சகாக்கள்மீதும் டெலோ சுட்டது. இவர்களது
சடலங்களைத் தருமாறு கேட்ட வடமராட்சி மக்கள் மீதும் சுட்டது.நாங்கள் புலிகளுக்கு மட்டுமே நிதி கொடுப்போம் என்று
சொன்னதற்காக ஒரு அரிசி ஆலை
உரிமையாளரின் மகனை ஈ.பி.ஆர்.எல். எவ் வின்
ரீகன் சுட்டார். இச் சம்பவம் தொடர்பாக
தமது இந்திரா நகர் பணிமனைக்கு பத்மநாபாவை
வரச் சொன்ன பிரபாகரன் "இப் படுகொலைக்கு
எதிராக நீங்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறின் நாம் எடுக்க நேரிடும்"
என எச்சரித்தார்.நடவடிக்கை என்றுதான் பிரபாகரன் கூறினாரே தவிர சுடவேண்டும் என்று
அவர் கூறவில்லை.குறிப்பிட்ட உறுப்பினர் றீகனைஒழுக்காற்று நடவடிக்கையாக இயக்கத்தை விட்டு நீக்குகிறோம் என்று பத்மநாபா அறிவித்திருந்தால் பிரச்சினை முடிந்தது.ஒருவன் தொடர்ந்து போராடத் தகுதியற்றவன் என்று பகிரங்கமாக அறிவிப்பது மரண தண்டனையை விடக் கொடூரமானது.பின்னாளில் கருணா விடயத்தில் இவ்வாறான அறிவிப்பையே புலிகள் விடுத்தனர்.
இந்திய
இராணுவ காலத்தில் ஈ.பி.ஆர்.எல். எவ், டெலோ
முதலானவை கொன்றொழித்த போராளிகள், மதகுரு ,கல்வியியலாளர்கள் முதலானோரைப் பட்டியலிட்டால்
அது அனுமார் வால் போல் நீண்டது.
ஆனால்
புலிகளே
கொலைகார இயக்கமென்று நிறுவ ராகவன் போன்றோர் முயல்வது விஷமத்தனமானது.
இலங்கை
பாராளுமன்றில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 6வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
அரச ஊழியர்கள் பிரிவினைக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது இதில் முக்கிய விடயம்.புளொட்,ஈ. பி. ஆர்
.எல். எவ் போன்றவை இதனைக்
கடுமையாக எதிர்த்தன.சிங்களம் படிப்பது கட்டாயம் என்ற சட்டத்தால் ஏராளமான இன
உணர்வாளர்கள் வேலையை விட்டதால் வாழ்க்கையை, குடும்பத்தை நடத்தச் சிரமப்பட்டனர்.தொழிற் சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை
மேற் கொண்டபோது வேலைக்குச் சமூகமளிக்காதோர்
வேலையை விட்டு விலகுவதாகக் கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டபோதும் இதன் சீரியஸ்
தன்மையை உணராமல் கணிசமானோர் வேலையை இழந்தனர். இந் நிலையில் யதார்த்தத்தை
உணராமல் அடம்பிடித்தன புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ் போன்றவை.
ஆனால் பிரபாகரன் "இந்த விடயத்தில் அரசஊழியர்கள்
தமது சுய முடிவின்படி செயற்படட்டும்
" என அறிவித்தார். இம்முடிவை அரச ஊழியர்கள் வரவேற்றனர்.ஒருவர் கூட வேலை இழந்ததாக
தெரியவில்லை. இது போல யதார்த்தத்தை
உணர்ந்து செயற்பட்டவரே
பிரபாகரன்.வெறுமனே மார்க்ஸிஸப் புத்தகங்களுக்குள் மூழ்கிக்கிடந்தவரல்லர்.
பிரபாகரன்
மீது வெறுப்பு வரவேண்டும்.என்பதற்காக சிலவிடயங்களைத் திரித்துக் கூறுகிறார்
ராகவன். தமிழாராய்ச்சி மகாநாடு கொழும்பில் நடத்தப்படவேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு
ஆதரவாக நின்றவர் துரையப்பா. இதற்கு முன்னதாகவே துரையப்பா விடயத்தில் நீண்ட பட்டியல் ஒன்று உண்டு .
தமிழாராய்ச்சி
மாநாட்டில் பொலீசாரின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படவில்லை என நிறுவ முயல்கிறார்.
மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தப்பமுடியாமல்
போயிற்று என்ற விடயத்தையும் அதனைத்
துண்டித்தவர்கள் பொலீசாரே என்பதையும் சாதுரியமாக மறைத்தார் ராகவன். நெரிசலில் மிதியுண்டு சிலர் கொல்லப்பட்டனர். ஒரு மாநாடு நடைபெறும்
போது வேண்டுமென்றே பொலிஸார் இந்தக் களேபரத்தை ஏற்படுத்தினர். அந்தக்காலத்தில் வீரகேசரி தனது ஆசிரியத் தலையங்கத்தில்
ஒரு விடயத்தைக் சுட்டிக்காட்டியது.சில மாதங்களுக்கு முன்னர்
ஜே.ஆர் சட்டமறுப்பு ஊர்வலமொன்றை
கொழும்பில் நடத்தினார்.காலி வீதியில் போக்குவரத்து
செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பகல்
முழுவதும் ஐ தே க
வினர் காலி வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதனைப் பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் நின்ற பொலீசார் தமிழாராய்ச்சி மாநாட்டில்
மட்டும் என் இப்படி நடந்து
கொண்டனர்? என வினா
எழுப்பியது. இப்படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய ASP சந்திரசேகரவுக்குப் பதவியுயர்வு
வழங்கிக் கௌரவித்தார் அப்போதைய
பிரதமர் சிறிமா. வரலாறு இப்படியிருக்க துரையப்பாவுக்கும் பொலீசாருக்கும் வெள்ளையடிக்க முயல்கிறார் ராகவன். அதுபோலவே கருணாவின் பிரச்சினை தொடர்பாகவும் கொள்கை ரீதியான விடயம் போல காட்ட முயல்கிறார்
இவர். எதிர்காலத்தில்
கருணாவின் கொள்கைப்பரப்புச் செயலராக இவர் நியமிக்கப்படக்கூடும்.கருணாவை பிரபாகரன்
சுட்டுக்கொல்வதற்காகவே
வன்னிக்கு அழைத்தார் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்ட
ஒன்றே. போராளிகளுக்கு குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களுக்கு சகல விடயங்களும் தெரியும்.
இவர் தனது காலத்தில் நடந்த
விடயங்கள் தொடர்பாக மட்டும் கருத்துத் தெரிவிக்கலாம்.
`மேதகு`
படம் எடுத்தவர்களையும் அவர்கள் அதனைத் தயாரித்த நோக்கத்தினையும் கொச்சைப்படுத்துகிறார். ஆயுதப் போராட்டத்தை நோக்கித்
தமிழர்கள் தள்ளப்பட்டதற்கான காரணங்களை அது தெளிவாகவே
கூறுகிறது. எனினும் ஒரு இந்தியரின் நிலைப்பாடும்
இலங்கையரின் நிலைப்பாடும் சில விடயங்களால் மாறுபாடானவை.சிவகுமாரன் போராட்டத் தேவைக்காக வங்கியைக் கொள்ளையடிக்கும் நோக்கில் போனபோதே பொலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதனைப் பார்ப்பவர்கள் சிவகுமாரனைக் கொள்ளைக்காரனாக
நோக்குவார்களே எனத் தயாரிப்பாளர்கள் நினைத்தனர்.
இலங்கையரின் நிலை இவ்வாறில்லை. போராட்டத் தேவைக்காக
அரச வங்கிகளைக் கொள்ளையிடுவது
தவறல்ல என்பது அந்தக்கால நிலைப்பாடு.(இன்று போல் புலம்பெயர் மக்கள்
பெருமளவில் வெளிநாடுகளில் இருந்ததில்லை) இதே போல ஒழுக்கம்
என்ற வகையில் அதனை உயர்வாகவே பார்ப்பார்கள்
இலங்கையர்கள். குறிப்பாக தமக்குத் தலைமை தாங்குபவர்கள் தம்மால் பின்பற்றக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.அதனால்தான் 36 இயக்கங்கள்
தோன்றியபோதும் புலிகளையே தேர்ந்தெடுத்தனர்.
இலங்கையில்
தலைமைக்கு வாழ்க்கைத்துணை
ஒன்று மட்டுமே இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். மனைவி - துணைவி
என்ற வியாக்கியானம் இங்கே எடுபடாது. ஆனால் தமிழகத்தில் அது சாதாரணம். (அதனை
ஆண்மையின் அடையாளமென ஏற்கிறார்களோ தெரியாது) ராகவனின் நிலைக்கு அது ஏற்கத்தக்கது.
கலைஞர்
பற்றிக் குறிப்பிட்டார். முதல்வர் எம்.ஜி.ஆர்
தமிழரல்ல என்பதால்தான் ஈழத் தமிழரின் பக்கம்
அவர் நிற்பதில்லை என்று அர்த்தப்படும் வகையில் சில வார்த்தைகளை கலைஞர்
குறிப்பிடுவது உண்டு. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த
எம்.ஜி. ஆர் "குட்டிமணியை
இலங்கை அரசிடம் கையளித்தவர் தானே கருணாநிதி" என்று
கேட்டார். இந்த கேள்வி கலைஞரை உலுப்பிவிட்டது. அப்படி நடக்க வில்லையென மறுக்கவும் முடியாது.எனவே குட்டிமணி குழுவினரைத்
தொடர்பு கொண்டு ஒரு அறிக்கையைத்
தனக்குச் சாதகமாக
விட ஏற்பாடு செய்தார்.
இதனைத்
தொடர்ந்து ஸ்ரீ
சபாரத்தினம் தன்னை செயலதிபராகப் பிரகடனப்படுத்தி
அறிக்கை ஒன்றை வெளியிட்டார். முதன்
முதலாக தமிழீழ விடுதலை இயக்கம் என தமது இயக்கத்தின்
பெயரைக் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் "வேறு ஒரு
விடயத்தில் கைதான குட்டிமணி அவர்களை இலங்கை அரசிடம் கருணாநிதி தலைமையிலான அரசு கையளித்தது உண்மைதான்;
எனினும் அவர் ஒரு போராளி
என்ற விடயம் கலைஞருக்குத் தெரியாது" எனக் குறிப்பிட்டார். இதன்
மூலம் கலைஞர் தவறிழைக்கவில்லையென குட்டிமணி சார்ந்த இயக்கமே குறிப்பிட்டது .
இச்
சம்பவத்தின்மூலம் கலைஞருக்கும் ஸ்ரீ சபாரத்தினத்துக்கும் இடையில் நெருக்கம்
ஏற்பட்டது. இதன்
பின்னர் இலங்கைத் தமிழ் போராளிக்குழுக்கள் விடயத்தில் டெலோவைச் சார்ந்து கலைஞர் முடிவுகளை எடுத்தார். தான் சிறையில் இருந்த
போது கதை வசனம் எழுதிய திரைப்படத்தின்
ஒரு கதாபாத்திரத்துக்குச் சபாரத்தினம் எனப் பெயரிட்டார்.
(பாலைவன ரோஜாக்கள்)
தன்னைச்
சந்திப்பதற்குப் புலிகளுக்கு
நாள் நேரம் ஒதுக்கினார் எம்.ஜி.ஆர்.
அதற்கு முதல் நாள் தன்னைச்
சந்திக்குமாறு புலிகள்,டெலோ,ஈ.பி.ஆர்.எல் . எவ்,ஈரோஸ் ஆகிய குழுக்களை வேண்டினார்
கலைஞர். தமிழக அரசியலுக்குள் இழுபடுவதை விரும்பாத பிரபாகரன் ஏற்கெனவே திட்டமிட்டவாறு முதல்வர் எம்.ஜி.ஆரைச்
சந்தித்த பின்னர் வேறுறொரு நாளில் சந்திப்பதாகத் தகவல் அனுப்பினார்.இதனால் விசனமடைந்த கருணாநிதி ஏற்கெனவே தமிழகத்தில் திரட்டப்பட்ட நிதியில்
புலிகளுக்கு வழங்குவதாக இருந்த 25,000 ரூபாவை அப்படியே மேலதிக நிதியாக டெலோவுக்கு வழங்கினார். (மொத்தம் 50.000 ரூபா) ஏனைய
இரு இயக்கங்களுக்கும் தலா
25,000 ரூபா கிடைத்தது.
சகல
கட்சிகளிலும் புலிகளுக்கு
சார்பானவர்கள் இருந்தனர்.(தி.மு.க
வில் வைகோ,சுப்புலட்சுமி ஜெகதீசன்உட்பட)
டெலோவுடனான மோதலைப்
புலிகள் ஆரம்பிக்கவில்லை. இரு போராளிகளைக் கடத்தியதன்
மூலம் பிரச்சினையை ஆரம்பித்தது டெலோவே. இந்த இருவரில் ஒருவர்
ஆறு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற
திருமணத்துக்கு முன்னதாக ஸ்ரீ சபா ரத்தினத்துக்கு
அழைப்பு விடுத்திருந்தார். தான் பிடிபட்டதை டெலோ
உறுப்பினர்கள் மூலம் ஸ்ரீ சபாரத்தினத்துக்கு அறிவித்தார். ஸ்ரீசபாரத்தினத்திடமிருந்து
இவர் பற்றிய தகவல் வந்த பின்னரே தாக்குதலுக்கு
உள்ளானார் அவர். எனவே இயக்கமோதல் என்பதற்கு
கலைஞரின் பரிபூரண ஆதரவு பெற்ற டெலோவே பொறுப்பு.இதனை நன்கு தெரிந்தும்
ராகவன் விடயத்தைத் திரிவுபடுத்துகிறார். டெலோவுக்குள் ஏற்கெனவே மோதல் வெடித்தபோது அதனை நிறுத்துமாறு கலைஞர்
தெரிவித்ததாக செய்திகள் வெளியாகவில்லை.புலிகள்மீதான வெறுப்பு தி.மு.க
வில் பலரிடமும் இருந்தது.இறுதிப் போரின்
பின்னர் தி.மு.க.
எம்.பி. டி.ஆர்.பாலு உங்களுக்கும் தலைவர்
கலைஞர்தான் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்" என்று போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் நின்று திமிருடன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டிபஜாரில்
பிரபாகரன் - ராகவன் ஆகியோர் கைதான போது இருவருமே பொலிஸாரின்
தாக்குதலுக்குள்ளானார்கள்.
பிரபாகரனுக்கு அடி விழும்போது "அவருக்கு
அடிக்காதீர்கள்; எனக்கு அடியுங்கள்" என்று
ராகவன் கூறிய வரலாறு உண்டு.
1980ல் இயக்கத்தினுள்
பிளவு ஏற்பட்ட போது மட்டக்களப்பிலிருந்து வந்த போராளிகள்
கோண்டாவிலுள்ள குமணன் வீட்டில் தங்கியிருந்தனர். பிரபாகரனுக்கு சார்பான நிலைப்பாடு எடுத்திருந்த ராகவன் அவர்களைச் சந்திப்பதற்கு சென்றிருந்தார்.மறுதரப்பினரும் அங்கே வந்திருந்தனர். அப்போது
முரண்பாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாகராஜா
வாத்தி " இரண்டு
பேரும்
சுட்டுப்பார்ப்போமா?
" என ராகவனுக்கு சவால் விட்டார்.(ஏற்கெனவே போட்டிக்குச் சுடும் போது நாகராஜா வாத்தியிடம்
தோற்றுப்போனவர் ராகவன்) அப்போது அங்கிருந்த மதி என்ற
உறுப்பினர் இவர்களுடன் கதைக்க வேண்டியிருந்தால் வெளியில் கூட்டிக்கொண்டு போய்க் கதையுங்கள் என்றார். உடனே எழுந்து வெளியில் போய்க் கேற்றில் (gate) நின்றபடி batti (மட்டக்களப்பு) ஆட்கள் இருக்கிறார்கள். இல்லையெனில்
எல்லோரையும் போட்டுத் தள்ளியிருப்பேன்.என்று கூறியதும் உண்டு.
அப்படி
அது நடந்திருந்தால் சக போராளிகளை சுட்டுக்கொன்றது
டெலோ பொபி குழுவுக்கு முதல்
இவராகத்தான் இருந்திருக்கும். இப்படியான
எண்ணங்களுடன் வாழ்ந்த இவர் இப்போ போதனை
செய்கிறார் .
இவர்
இயக்கத்திலிருந்து வெளியேறிய பின்னர் புதிதாக சேர்ந்த போராளிகள் (பரப்புரை,புத்தக விற்பனைக்கு சென்றவர்கள்) சிலரை ராகவன் சந்தித்தார். தான்தான் ராகவன் என்றார்.அவர்களுக்கு இவரைத் தெரியாது.அவர்கள் பிரபாகரனிடம் போய் ராகவன் என்ற
ஒருவரைச் சந்தித்ததாகச் சொன்னார்கள்.அதற்கு அவர் "நீங்கள் என்னைப்பற்றித் தவறாக ஏதும் சொல்லியிருந்தால் உங்கள் குரல்வளையைக் கடித்தே கொன்றிருப்பான் ராகவன்" என்று சொன்னார். ராகவன்
விலகிச் சென்ற பின்பும் இவர் மீது அவர்
என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதற்கு இது
ஒரு உதாரணம்.
மேதகு
படத்தின் கதாநாயகன் "ஒரு உன்னதமான உயரிய
தலைவனின் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். எனவே எதிர்காலத்தில்
எவ்வளவு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் கவனமாக
இருக்கிறேன்" என்றார். இந்த விடயம் ராகவனுக்கு
உறைத்திருக்கிறது போல உள்ளது.பிரபாகரன்
மீதான வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் அவரின் மனதில் உள்ள நெருப்புக்கு இந்த
நடிகர் எண்ணெய் ஊற்றிவிட்டார். அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி
ராகவன் கூறிய வார்த்தைகளுக்கு இந்த நடிகரின் நிலைப்பாடும்
ஒரு காரணம்.
துணிச்சலுக்கும்
ரௌடியிசத்துக்கும் வித்தியாசம்
உண்டு. கன்னாட்டி (முருங்கன்) பண்ணைக்கு
வந்து புலிகளை கைது செய்து கொண்டு
போக முயற்சித்த இன்ஸ்பெக்ட்டர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான குழுவினரைச் சாதுரியத்துடனும் துணிச்சலுடனும் செல்லக்கிளி அம்மான் தலைமையில் ராகவன் முதலானோர் அழித்த நிகழ்வு வரலாற்றில் பதியப்படும். இதற்காக ரௌடியிசத்தையெல்லாம் மாக்ஸிச நெறியின்படி நடப்பதாக எண்ணுவது புரியாத்தனம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. பல சாட்சிகளும் உண்டு
இறுதியாக சென்னையில் போக்குவரத்துத் தொடர்பான முரண்பாடு ஒன்றில் இந்திய இராணுவ மேஜர் ஒருவரின் வாகனத்தை மறித்து அவரைத் தாக்கினார் ராகவன். இந்த விடயம் பொலீ
சாரின் கவனத்துக்கு சென்றதை அடுத்து இவரை வீட்டுக்காவலில் வைக்க
உத்தரவிட்டார் பிரபாகரன். இந்த விடயத்தை
கௌரவப் பிரச்சினையாக கருதியதும் ராகவன் வெளியேறிச் சென்றதற்கான காரணங்களில் ஒன்று .
ராகவன்
காலத்துக்கு காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்த பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்தார் என ஐயர் "ஈழப்
போராட்டத்தில் எனது
பதிவுகள்" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது . (பக்கம் 86)
Post a Comment