அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரணாகவிருந்த அமரர் வேல்முருகு மாஸ்டர் ஐ எவரும் மறக்க முடியாது.இவர் மரணித்த செய்தி நான் கண்டியில் இருந்தபோது கேள்விப்பட்டேன்.இன்றும் இவரைப்பற்றி ஞாபகமூட்டும் தமிழ்தேசிய பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனே.நான் இவர் வீட்டில் இருந்து படித்தேன்.உயர்தரத்திற்கு கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரிக்கு கணேஸ் ,சுதந்திரா,சிறி,பாக்கியநாதன்,விஜயராஜா,ஈஸ்வரநாதன் உடன் 1981 இல் சென்றகாலம்.இவரின் அரசியல் பாசறை எங்களின் ஆரம்ப அரசியல் ஆர்வ காலம்.மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற காலம்.இவரின் சகோதரர் ராஜலிங்கம் பத்தர் வாங்கிக்கொடுத்த கில்மன் காரில் இவருடன் உதயசூரியன் கொடிபறக்க நானும் கணேஸ் உம் சென்ற காலம்.இவர் மாடு மூன்று கன்று போட்ட காலம் அது .மறக்க முடியாதது.
இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையிலே வளர்ந்து
தமிழ்த் தேசியம் அம்பாரை
மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இறக்கும் வரை இயங்கிய
அமரர் வேல்முருகு மாஸ்டர் தமிழ் மக்களால் என்றுமே நினைவுகூரப்படுபவராய் உள்ளார். 20.03.2021 அன்னாரது 33 ஆவது நினைவு தினமுமாகும்.எட்டிப்பார்க்கிறது 34 வது.
பஞ்சபாண்டவர்களின் வரலாற்றால் புகழ்பெற்ற
பாண்டிருப்பு – 02 கிராமத்தில் ஆறுமுகம் அன்னம்மா
தம்பதிகளின் 3 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக 15.04.1939 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆறுமுகம் கந்தையா வேல்முருகு இவரின் பெயர்.கம்பீரமான தோற்றம். விறுவிறுப்பான நடை. தனது
அரசியல் வாழ்க்கைத் துணையாக தந்தை
செல்வாவின் நாமத்தைச் சுமந்திருந்த பெண்மணி செல்வராணியை 1967 ஆம் ஆண்டு கரம்
பிடித்தார்.
உண்மை
நேர்மை ஒழுக்கம் என்னும் பண்புகள்.சிரித்த முகம்.அழகிய சிறிய
தாடி.வெள்ளை வேட்டி சேட்டுடன் ஆசிரிய சேவை. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ஆரம்பமாகிய தமிழ் பணி .மக்கள் சேவையே
மகேசன் சேவை என்பதற்கிணங்க இரவு
பகல் பாராது எப்போதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் அதிக அக்கறை. ஆற்றிய
சேவைகள் மக்களின் மனங்களிலே என்றுமே மாறாத சுவடாகவுள்ளது.
தந்தை
செல்வா மீது கொண்டிருந்த
நட்பினால் இக்குடும்பம்
தமிழ் அடிச்சுவட்டியினைப் பின்பற்றி தான்பெற்றெடுத்த மூன்று பெண் பிள்ளைகளுக்கு
முறையே தமிழ்ச்செல்வி ,தமிழ்வாணி மற்றும் தமிழினி என பெயர் சூட்டி செம்மொழியான
தமிழினை அழகு பார்த்து இல்லறத்தில்
இனிமை கண்டவர்.மூன்று பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் இவர் வாழ்க்கை என்பதை
விட தமிழ்தேசியமே
இவர் வாழ்க்கை.குடும்ப பொறுப்பை சுமந்தவர்கள் இவர் மாமி திருமதி
முத்துலிங்கம் ,பெரிய
ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ,செல்வாவே(கணேஸ்).அவரது மனைவியை மூன்று பிள்ளைகளும் அக்கா என்றும் இவரது
மாமியை அம்மா என்றும் அழைப்பார்கள்.
தமிழ்
மக்கள் மீது கொண்ட பற்றுதல்.
தமிழ் பேசும் மக்களுக்காக சேவை. தமிழரசுக்
கட்சியை வளர்ப்பதற்கான ஆர்வம் போன்றவற்றால் ஈழத்
தமிழகமே இவர்
வீடுதான். இல்லத்திற்குக்
கூட செல்வாஅகம் எனப் பெயர் சூட்டி
அழகுபார்த்தவர். வடக்கினிலும் கிழக்கினிலும் உள்ள அக்கால அரசியல்
தலைவர்களுடன் பயணித்தவர்.
அம்பாரை மாவட்டத்தினிலே தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தனது கணவனின் அரசியல்
செயற்பாட்டுகளுக்காக வடக்கினிலிருந்து வரும் அரசியல் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ,அமிர்தலிங்கம்,
மங்கையற்கரசி அமிர்தலிங்கம்,சிவ சிவசிதம்பரம், யோகேஸ்வரன்,
கோவை மகேசன், மற்றும் வண்ணையானந்தன் கிழக்கினிலிருந்து வரும் தங்கத்துரை, ஆர்.சம்பந்தன்,காசியானந்தன்
மற்றும் இராஜதுரை பன்னீர்செல்வம்
ஆகியோருக்கு இரவு பகல் பாராது
அடைக்கலம் வழங்கி வந்தாரை வரவேற்கும் கிழக்கின் பண்பாட்டிற்கமைவாக உபசரித்த பெருமைகள் எல்லாம் வேல்முருகு மாஸ்டரின் மனைவி செல்வராணியை சாரும்.அந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்தான்
அருட்பிரகாசம்.
அம்பாரை
மாவட்டத்தில் தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராட்டம் உச்சம் பெற்றதனால் தமிழ்த் தலைவர்களின் இருப்புக்கள் பெரும் சவாலாகக் காணப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியலில் பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில் துணிச்சலோடு பாண்டிருப்பில் உள்ள தனது வீட்டை
தமிழர்களின் அறவளிக்கான இல்லமாக மாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சிகளின் அரசியலை முன்னோக்கி கொண்டு சென்றார்.
அம்பாரை
மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினராக தேர்தலில் தமிழர்
விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்கான
பணிகளை மேற்கொண்டு வருகையில் 09.08.1981 ஆம் ஆண்டு சென்றல்
கேம் 4 ஆம் கொலணி பிரதேசத்தில்
தமிழ் முஸ்லிம் கிராமங்களில் பிரச்சினை தோற்றம் பெற்று வீடுகளை தீவைத்து தாக்கியதனால் அவர்களை சமரசம் செய்வதற்காக 4 ஆம் கொலணி நோக்கி
தனது காரில் 3 பேருடனும் கூடவே அருட்தந்தை எல்மோ ஜோண்பிள்ளையுடன் மக்களின்
பிரச்சினைகளை விசாரிக்கச் சென்றபோது எதிரே வந்த ஆயுததாரிகள் வேல்முருகுவை
கல்முனை நோக்கிச் செல்லுமாறு பணித்ததினால் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்பு பயணம் வெற்றியளிக்காததினால் மீண்டும் வீடு திரும்பினார். அவர்
சித்திரவதை செய்யப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்படடிருந்த வேளையில் அவர் தனது ஹில்மன்
காரின் இருக்கையை விட்டு உள்ளே சுருண்டு இருந்ததனால் தாக்குதலிலிருந்து காப்பற்றப்பட்டார். இந்த நேரம் நான்
அவரது வீட்டில் இருந்தேன்.வெள்ளை சேட்டில் சப்பாத்து கால்கள்
பதிந்திருந்தன.தாடி மயிர்கள் புடுங்கப்பட்டிருந்தன.
அதன்பின்பும் கூட அவர் தமிழர்
உரிமைச் செயற்பாட்டில்
தூண்டப்பட்டு அஞ்சா நெஞ்சத்தோடு மீண்டும் அம்பாரை மாவட்டத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
அம்பாரை
மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுபாலம் இவர்.
அயல்கிராமங்களான மருதமுனை,
நற்பட்டிமுனை ,கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது போன்ற முஸ்லிம் கிராமங்கள் உள்ள நிலையில்
தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இன முரன்பாடுகள் வரும்போது
தமிழர்கள் முஸ்லிம்கள் என
வேறுபடுத்திப் பார்க்காமல் நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள் என எல்லா இளைஞர்களிடத்திலும்
நட்புடன் பேசி பரஸ்பரம் புரிந்துணர்வை
ஏற்படுத்தி பகைமையை
வளர்க்காது உறவைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டினார்.
முஸ்லிம்
தலைவர்களான மசூர் மௌலானா,சம்சுதீன், அகமட் வெல்வை, அஸ்ரப் ,கனகரட்ணம் போன்றோருடன் எல்லைப்புறங்களில்
பிரச்சினைகள் வரும்போது சந்தித்து
அஞ்சாத நெஞ்சோடு அவ்விடத்திற்குச் சென்று பிணக்குகளை சமரசம் செய்வதில் அரும் பாடு பட்டதனால் முஸ்லிம்
மக்கள் மத்தியிலும் மிகவும் மதிப்பு மிக்கவராகத் திகழ்ந்தார். இறுதிக்கிரியையில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட் அஞ்சலி செலுத்தியதானது அவரது தமிழ்த் தேசிய இன உறவின் மேம்பாட்டைக்
காண்பித்தது. தமிழ் மக்களின் உரிமைக்காக வடக்கு கிழக்கு தெற்கு எங்கும் ஓயாது குரல் கொடுத்தமையானது அரசியலில் அவர் கொண்டிருந்த புலமையையும்
பற்றுதலையும் பறைசாற்றிக் காண்பித்தது. அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார
சமூக கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பெறும்போது அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களையெல்லாம் துணிச்சலோடு வெளியுலகிற்கு எல்லாம் கொண்டு சென்றார்.
இல்லத்தின் அருகில் உள்ள பாண்டிருப்பு திரௌபதை
அம்மன் ஆலய முன்றலில் அம்பாரை
மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் விடுதலையை வலியுறுத்தி நாகேந்திரன் எனும் போராளி உண்ணா நோன்பிருந்தார். அவரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வேல்முருகு மாஸ்டரும் பூரண ஆதரவினை வழங்கி
நாள்முழுவதும் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.
தனது
49 ஆவது அகவையில் 20.03.1988 அன்று அவர் கடத்தப்பட்டு கல்முனை
எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ தரவைப்பிள்ளையார் ஆலயத்தின்
அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதாக வந்த செய்தியானது தமிழ்த்
தேசியத்துக்கு வலுச்சேர்த்த அத்தனை உள்ளங்களிலும் வேல்பாய்சிய வலியை தோற்றுவித்திருந்தது. அப்பிரதேசமெல்லாம் சோகமயம்.
அவரது
நினைவாக பாண்டிருப்பு-02 ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலயத்தின் அருகில்
உள்ள அரங்கிற்க வேல்முருகு அரங்கு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2016 ஆம்
அண்டு அம்பாரை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனினால் ருபாய்
40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில்; பாண்டிருப்பில்
வேல்முருகு சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு திறந்து
வைக்கப்பட்டது.பின்னர் 2018 ம்
ஆண்டு தமிழ்த் தேசிய விரோதிகளால் சேதமாக்கப்பட்டது. தற்போது அது மீண்டும் புனர்நிர்மாணம்
செய்யப்பட்டு மீண்டும் பாவனையில் உள்ளது.உங்கள் வீட்டில் என்னை நீங்களும் உங்கள் குடும்பமும் கவனித்த விதமானது இன்றும்
என் ஞாபகத்தில்.ஒவ்வொரு எதிரியும் எய்யும் அரசியல்
அம்புகளை எடுத்து பல்குத்திக்கொள்ள இன்று
நீங்கள் இல்லை.மறைந்தாலும் உங்கள் புகழ் வீசும்.உங்கள் புதல்விகள் மூவரும் மருமகன் பொறியியலாளர் சுசியும் மைத்துனர்
கணேஸ் அனைவரும் லண்டனில் உங்கள்
மனம்போல் அவர்கள் வாழ்க்கை
.உங்கள் மூத்தமகள் செல்வியின் மகன் கிட்டத்தட்ட நீங்கள்தான்.
தகவல் : facebook Samythamby
Raviinthiran
Post a Comment