தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் 05.09.2021 இன்று காலமானார்.
1936ஆம்
ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார்.
பின்னர்
1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார்.
இலங்கை
அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி
பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின்
போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம்
மாதம் 04 ஆம் திகதி அவருக்கு
எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
அன்றைய
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் தொடர்பான
தீர்ப்பினை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
: Bala Murali Balasudarampllai (facebook)
Post a Comment