ஜனிவா விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், உண்மையில் நடந்தது என்ன என்ற விடயத்தை இலங்கைத் தமிழ்
அரசுக்
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் மகக்ளுககு; விளக்க வேண்
டும் என்று தமிழ் அரசுக் கட்சி யின் அரசியல் குழு
நேற்று அவசரமாகக் கூடி முடிவெடுத்துள்ளது. ஜெனிவாவில் நடை
பெற
விருக்கும் ஐ. நா. மனித
உரிமை கள் கூட்டத் தொடருக்குத்
தமிழ் மக்களின் சார்பில் தமது நிலைப் பாட்டை
தெளிவுபடுத்தும் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பவுள்ளது. இந்த நிலையில்
தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின்
பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியவை கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்க் கட்சிகள் தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்தச் செயல் மூலம் கூட்டமைப்பு பிளவுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது என
ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்தப் பின்புலத்தில் நடந்த விட யங்களை இலங்கை
தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் இன்று ஒன்றுகூடி, இது விடயத் தில்
உண்மையில் நடந்தவை என்ன என்பதை தமிழ்
மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் எனத் தமிழ் அரசுக்
கட்சியின் அரசியல்குழு தீர்மானித்துள் ளது. குறுகிய ஓரிரு
மணி நேர முன்னறி வித்தலில்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றுக் காலை
10 மணி முதல் இரண்டு மணி நேரம் அவசரமாக
மெய்நிகர் வழியில் கூடியது. கட்சித் தலைவர் மாவை சேனாதி ராசா
தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சி. வீ. கே.
சிவஞானம், பொன். செல்வராசா, மருத்துவர் சத்திய லிங்கம், எம். ஏ. சுமந்திரன்,
சி. சிறிதரன், சே. குலநாயகம், த.
கலையரசன், கி. துரைராஜசிங்கம் ஆகிய
ஒன்பது பேர் பங்குபற்றினர். இரா.சம்பந்தனும், சட்டத்தரணி கே. வி. தவராசாவும்
கலந்துகொள்ளவில்லை. உண்மையில் நடந்தவை என்னவென்பதை தமிழ் அரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்கள் கொழும்பில்
இன்று ஒன்றுகூடி ஆராய்ந்து, எழுத்து வடிவத்தில் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி:
ஈழ நாடு
Post a Comment