எம். ஆர். ராதா (ஏப்ரல் 14, 1907 – செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.
எம்.ஆர்.ராதா 1907 ஆம்
ஆண்டு ஏப்ரல் 14 இல் சென்னையில் பிறந்தார்.
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா.
இவா் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தாா்.
இவா் தந்தை ராஜகோபாலன் ரஷ்யா நாட்டில் ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு
ஜே.ஆர்.நாயுடு என்னும்
ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா
என்னும் தம்பியும் இருந்தனர்.
சிறுவயதில்
தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல்
பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஃபோர்டர் (பாரம் சுமக்கும் பணியாளர்) ஆக வேலை செய்து
வந்தார். அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ராதா மூன்று கனமான
சூட்கேஸை ஒரே நேரத்தில் தூக்கி
கொண்டு செல்லும் அழகை கண்டு தனது
நாடக கம்பெனியில் இணையும்படி ராதாவிடம் கூறினார் பின்பு அந்த நாடக கம்பெனியில்
இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.
ராதா
நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் ராதாவை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார்.
அதன்பிறகு 1942 வரை சந்தனதேவன், பம்பாய்
மெயில், சத்யவாணி, சோகாமேளர். ஆகிய படங்களில் நடித்தாா்.
இதில்
சந்தனதேவன், பம்பாய் மெயில் ஆகிய இருபடங்களும் சேலம்
மாா்டன் தியேட்டாில் தாயாாிக்கபட்ட படம் இதில் ராதா
நடித்து கொண்டு இருக்கும் போது அந்த படத்தில்
துணை கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்த பி.எஸ்.ஞானம்
என்பவரை கடத்தி கொண்டு போய் காதல் திருமணம்
செய்து கொள்ள நினைத்தபோது அந்த படத்தின் இயக்குனரும்
மாா்டன் தியேட்டா்ஸ் உாிமையாளரும் ஆன டி. ஆர்.
சுந்தரம் அவா்கள் எம்.ஆா்.ராதாவை
அங்கிருந்து வெளியேற்றினாா். ராதா அதன்பிறகு சினிமாவிற்கு
முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
#Mahi
பிறகு
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் [8] என்ற வெற்றி நாடகத்தை
திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம்
திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும்
வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள்
நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது இழந்தகாதல் என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.
#Mahi
இவர்
நடிகனாகவும், நகைச்சுவையாகவும், வில்லனாகவும் பல குணசித்திர வேடங்களில்
நடிப்பதை கண்டும் அதில் திராவிட கொள்கையின் கருத்துகளை தைாியமாக நடிப்பாற்றலால் அந்த கருத்துகளை திரைப்படங்களில்
வசனமாக பேசி சமுதாயத்தில் மக்களிடையே
கூா்மையான நடிப்பால் காட்டியதால் அவருக்கு அன்றைய திராவிட கொள்கை பரப்பு செயளாலா் ஆன பட்டுகோட்டை அழகிாிசாமி
அவா்கள் எம். ஆர். இராதா
அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு)
கூா்மையான (வேல்) கருத்துகளை கூறுவதால் #நடிகவேள் என்ற பட்டத்தை கொடுத்தாா்.
அவரது
நினைவு நாளில் அவரை வணங்குவோம்🙏🙏🙏
நன்றி
இணையதளம்
#mahi
Post a Comment