வெண் பிரம்பு நாளில் சங்கக் கட்டிடம் திறப்பு !


உலக வெண்பிரம்பு நாளான இன்று (15.10.2021) வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் (வடக்குகிழக்கு) ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கான அனுசரணையைக்  கிளி.மாவட்ட லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர்.

கிளிநொச்சி  விவேகானந்த நகர் பகுதியில் நடை பெற்ற இந் நிகழ்வுக்குச் சங்கத்தலைவர் பேரம்பலம் ஞானகுமார் தலைமைதாங்கினார். மங்கள விளக்கேற்றல் அகவணக்கத்தைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பெற்ற கட்டடத்தின் பணிமனைக்கான பெயர்ப் பலகையினை கரைச்சி பிரதேசத்சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் திறந்து வைத்தார்.இக் கட்டிட அமைப்புக்கான நிதியுதவியினை வழங்கிய லண்டன் வாழ் புலம்பெயர் உறவுகளுக்கு முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பதினாறு பயனாளிகளுக்கு தலா ஐந்து லட்சம்  ரூபா நிரந்தர வைப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்த சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

உலக வெண் பிரம்பு நாளின் நோக்கம், அதன் பிரகடனம் தொடர்பான விடயங்களைச் சமூகத் தொண்டர் விவேகானந்தன் பிரேம்குமார் விபரமாக எடுத்துரைத்தார்.இந் நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் கிளி.மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் ஜெயானந்தராஜா,பரந்தன் கிராமசேவை அலுவலர்நந்தகுமார்,கிளிநொச்சி  வர்த்தக சங்கத்தலைவர் குமரகுருபரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவகுமார்  நன்றி உரை வழங்கினார்.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post