மாவை அண்ணாவுக்கு தேவர் அண்ணாவின் பிறந்த நாள் வாழ்த்து!


இன்று மாவை அண்ணாவின் 79 வது பிறந்தநாள்!அண்ணா முதலில் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!நான,உங்களைவிட ஐந்து ஆறு வயது இளையவனாக இருக்கலாம்.உங்களைவிட அரசியல் ஞானம் எனக்கு குறைவாகவும், இருக்கலாம்,ஆனாலும், 80 மேநாள்,வரைஉங்களோடு நீங்கள் சார்ந்திருக்கும் அணியில் தீவிரமாக செயற்பட்டவன்.அந்தநாள் ஞாபகங்கள் பல என் மனத்திரையில் வந்து மோதிச்சென்றன செல்கின்றன.காசி அண்ணா,நீங்கள் மற்றும் வண்ணைஆனந்தன் ஆகியோர் தமிழீழ விடுதலை பற்றி வீராவேசமாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைத் தூண்,டிவிட்டதையும் எப்படி மறக்க முடியும்?அன்று நீங்கள் மூவரும் விடுதலைப்பாதைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்லும் மும்மூர்த்திகளாக வலம் வந்தீர்கள்கள்.இன்று சம்பந்தன்,நீங்கள்,மற்றும் சிங்களவனால் களமிறக்கப்பட்டிருக்கும் நேற்று வந்துசேர்ந்த சுமந்திரனும் மும்மூர்த்திகளாக துரோகத்தின் பாதையில் அடியெடுத்துவைத்து தமிழினத்தை சிங்கள இனத்திற்கு காலம் காலமாக அடிமைகளாக வாழவைக்கும் அவலநிலைக்கு கொண்டுசெல்லும் துரோகிகளாக உங்களைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.ஐம்பது வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவம் உள்ள உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை தவறானது,அது உங்கள் பெயரையும,துரோகிகளின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இல்லை.அண்ணா நீங்கள் துரோகங்களுக்கு துணை போனது போதும்.இன்றிலிருந்து புதிதாய் பிறப்பெடுங்கள்.தமிழீழ இலட்சியத்தோடு களமாடுங்கள.உங்களின் பின்னால் அணிதிரண்டுவர இளைஞர்கள் காத்திருக்கின்றார்கள்!

ஆறுமுகம்  தங்கவேலாயுதம்

(தேவர் அண்ணா)


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post