தேசியத்தலவரின்மதிப்பினைப் பெற்ற ஐயா தேனிசை செல்லப்பா.
இன்று காலை பெரும் குழப்பத்துடன்
எனக்கு
பொழுது விடிந்தது.6மணிக்கு வழக்கம்போல செறாஜெம் தெரபி எடுத்துக் கொண்டிருந்தேன்.தொலைபேசி அழைப்பொன்று வெளிநாட்டில் இருந்து வந்தது.என் இனிய நண்பர்
வரதராஜன் தொடர்பில் வந்தார்.அவர் கூறிய செய்தியைக்
கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.ஐயா தேனிசை செல்லப்பா
அவர்கள் இறந்துவிட்டார் என்று செய்தி வந்துள்ளது,அது உண்மையா? என
என்னிடம் வினவியதோடு அது பற்றி வந்த
செய்தியையும் எனக்கு அனுப்பினார்.
நான்
உடனடியாக ஐயாவின் மகன் இளங்கோவோடு தொடர்பு
கொண்டு தயங்கிய குரலில் அச்செய்தி உண்மையா என வினவினேன்.
'இல்லை
அது தவறான செய்தி.அப்பா நலமாக இருக்கிறார்' என அறியத் தந்தார்.அந்த வார்த்தைகள் என்னை
ஆறுதல் அடையச் செய்தன.
நண்பர் வரதனுக்கும்
அச்செய்தி பற்றி என்னிடம் தகவல் கேட்ட உறவுகளுக்கும் உண்மையை தெளிவு படுத்தினேன்.
இவ்வேளையில் 90 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு
என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
தேசியத்தலைவர் அவர்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு 90 மார்ச் மாதம் யாழ் திரும்பியிருந்தார்.
அதனைத்
தொடர்ந்து இயக்கத்தின் பல
கட்டுமானங்கள்
உருவாக்கப்பட்டன.அவைகளுள் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகமும்
ஒன்று.கவிஞர் புதுவை இரத்தினதுரை அதன் பொறுப்பாளராகவும் நான்
துணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டோம்.
தமிழீழ
மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தின் அவசியம் பற்றியும்,அதில் அவர்கள் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டிய தேவை பற்றியும் தெளிவு
படுத்துவதற்காக பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு
செய்தோம்.
நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்த
காலப்பகுதியில் தனது எழுச்சிப் பாடல்கள்
மூலம் தமிழீழ விடுதலைக்கு
தமிழக
மக்கள் மத்தியில் ஆதரவினை
திரட்டிக்
கொண்டிருந்தவர் தேனிசை செல்லப்பா அவர்கள்.
ஐயா
அவர்களின் தேனிசைப் பாடல்கள்
மூலம்
தமிழீழ மக்கள் மத்தியிலும்
எழுச்சியை
ஏற்படுத்த வேண்டும்என
சிந்தித்த
தலைவர் அவர்கள் ஐயாவையும் அவரது குழுவினரையும்
தமிழீழத்திற்கு
வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார்.அதற்கமைய ஐயாவும் குழுவினரும் கடல் வழியாக இயந்திரப்
படகு மூலம் தமிழீழம் வந்து சேர்ந்தனர்.
90 ஏப்ரலில்
தமிழீழத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர்கள் 90 மே 16 ஆம் நாள்வரை தமிழீழத்தின்
அனைத்துப் பகுதிகளுக்கும் பயணம் செய்து தங்கள் எழுச்சிப் பாடல்கள் நிகழ்ச்சி மூலம் தமிழீழ மக்கள் மத்தியில் பேரெழுச்சியை ஏற்படுத்தினார்கள்.மே மாத நடுப்பகுதியில்
யுத்தமேகம்சூழ்ந்து வருவதை அவதானித்த தேசியத்தலைவர் அவர்கள் ஐயாவையும்
குழுவினரையும்
பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு பணித்தார்.அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.அவர்கள்
தமிழகம்
திரும்புவதற்கு முன்பதாக
அவர்களை
நேரில் சந்தித்து பாராட்டினையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு மாத்திரமன்றி அவர்களுக்கு பரிசில்கள்
வழங்கி சிறப்பிக்கவும் விரும்பினார்.
அதற்கமைய
அப்போது சாவகச்சேரியில் செயற்பட்டு வந்த தலைமைச் செயலகத்திற்கு
அவர்கள் வரவழைக்கப்பட்டு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
அத்துடன்
ஐயாவுக்கு நினைவுப் பதக்கமும்,குழுவினருக்கு நினைவுப்
பரிசில்களும்
வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து வல்வைக்கு
அழைத்துச்
செல்லப்பட்ட ஐயாவும் குழுவினரும் வல்வை ரேவடிக் கடற்கரையில் வைத்து பாதுகாப்பாக இயந்திரப் படகின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மறக்க
முடியாத அந்த நினைவுகளை
பகிர்ந்ததோடு;
ஐயா
தேனிசை செல்லப்பா அவர்கள் சகல நலன்களோடு நீடூழி
வாழ இயற்கையை வேண்டுகின்றேன்.
Arumugam Thangavelayutham (faceboo)
Post a Comment