தங்க நகைக்கு ஆசைப்பட்டே கொலை செய்தேன்!


எஜமானியின் தங்க நகைக்கு ஆசைப்பட்டே கொலை செய்தேன்பரபரப்பு வாக்குமூலம்

எஜமானி அணிந்திருந்த தங்க நகைகளை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்என மட்டக்களப்பு நகர் பார்வீதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் கைதான வீட்டு பணி பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளாா்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளாா்.

இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவகையில் கைதான இருவரையும் எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் .சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டுள்ளாா்.

இந்த கொலைச் சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் நகைக்கடை வர்த்தகர் என்பதுடன் அவரது மனைவியே இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளத. இந்த கொலை சம்பவத்தின் பின்னர், குறித்த பணி பெண்ணினால் 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: Nero loga( facebook )



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post