காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான, முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் சட்டத்தரணி. அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத். (BA).(LLB)அவர்கள் இன்றைய தினம் 2022.02.02 ஆம் திகதி புதன் கிழமை காலை 06:45 மணியளவில் வபாத்தானார்..அன்னாரினது ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் அஸர் தொழுகையினைத் தொடர்ந்து முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. அன்னாரினது மறுமை வாழ்வினது ஈடேற்றத்திற்காக அனைவரும்இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.காத்தான்குடி - ஆரையம்பதி எல்லைப் பகுதிகளில் தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பதட்டம் நிலவிய காலங்களில் ஆரையம்பதியைச் சேர்ந்த கனகரத்தினம் மற்றும் அண்மையில் காலமான தவராஜா ஆசிரியர்களுடன் சேர்ந்து சமாதானக் குழுவை அமைத்து காத்திரமான பணிகளை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்,முஸ்லீம் இன உறவுகளுக்காக பாடுபட்ட ஜவாத் மாஸ்டர் காலமானார்!
bythaennadu
-
0
Post a Comment