மட்டக்களப்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி


எதிர்வரும் 27.02.2022 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் சைக்கிள் ஓட்டநிகழ்வு நடைபெறு இருக்கின்றது .நீண்ட நாட்களாக காலச்சூழலின் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஓட்டப்போட்டி புது உத்வேகத்துடன் நடைபெறவிருக்கின்றது.

இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்வதோடு மட்டுமின்றி வெற்றியைத்தமதாக்கி கொள்ளவதற்கு தீவிர பயிற்சியிகளை மேற்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்நிகழ்வு வட மாகாணத்தின் முன்னாள் சைக்கிள் ஓட்ட வீரரானஅமரர் .செல்வராஐா அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெறுகின்றது.

மாவட்ட ரீதியாக போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு இறுதிச்சுற்று நிகழ்வு குறிப்பிட்ட காலங்களின் பின்னர் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து நீண்டதூரங்களை ஓடிக்கடக்கும் திறமைக்கு சவாலானபெருநிகழ்வாக அமையும்.

SELVARAJAH CHALLENGERS CUP  இறுதிச்சுற்று நிகழ்வுக்காக வீரர்கள்

இலங்கைத்தீவில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்வியலும் அதன்பால் பெறுபேறுகளையும் பெற்று

அறிவியல் கொண்ட எதிர்காலச்சமூகம் ஒன்றை உருவாக்க தந்தை செல்வராஐா என்பவர் தன்னை செதுக்கியதன் மூலம்அவர் கொண்ட விடாமுயற்சியின் மையப்புள்ளியை நான் தொட்டு அதனை கடத்தி இன்று தாயகத்திலும் தேசம் கடந்தும் செயலாற்றிய எம் பாதைகளை தொடர்வதென்பது அவ்வளவு சாதாரணமானதாக கருதிவிடமுடியாது.

மக்கள் உலகப்பரப்பில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்கின்ற எண்ணிக்கைகள் நாளுக்குநாள் விரைகின்றது.அதனடிப்படையில்

நாம் இவ்வாறான விடயங்களில் பல ஆண்டுகளுங்கு முன்னரே கவனம்

கொண்டு வாழ்வியலின் முறையாக அவற்றைக்கடந்து கொண்டிருக்கின்றோம். வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

இணைந்திருங்கள் தோழர்களே தொடரும் எம் பயணத்தில் சரித்திரம்

உங்களுக்காகவும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தகவல்: பிரேம் +94 77 033 8519


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post