தமிழ் பௌத்தம் அறிவோம்
(1)
இலங்கையில்
உள்ள பௌத்த அடிப்படைவாதிகள் பௌத்த மதம் தங்களுக்கு மட்டுமே
உரியதென்றும் அதைக் காக்கும் பொறுப்பைக் கௌதம புத்தர் சிங்கள
இனத்திடம் ஒப்படைத்தாகவும் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.பௌத்த மதத்தைப் பேணிக்காத்து வளர்த்தவர்கள் சிங்கள பிக்குகள் மட்டுமே என்றும் பொய்யான ஒரு வரலாற்றுத்திரிப்பை
அவர்கள் செய்து வருகின்றனர்.
கௌதம
புத்தர் தனது சொந்த அனுபவத்தின்
மூலம் மாநிட விடுதலைக்கான வழியைக் கண்டறிந்தார்
அவர் தன்னைக்
கடவுள் என்றோ, கடவுளின் புதல்வர் என்றோ ,ஒரு இனத்துக்குகோ அல்லது
ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களுக்கோ மட்டும் உரித்துடையவர் என்றோ
கூறவில்லை.
தன்னுடைய போதனைகளை வழிபாட்டுக்குரிய தத்துவம் என்றும் அவர் வரையறுக்கவில்லை.
மனிதனது
மனமே அனைத்து துன்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. புத்தர்
தனது சொந்த முயற்சியினால் அந்த
மனதை ஒரு நிலைப்படுத்திச் சலனமற்ற
ஒரு நிலைக்குக் கொண்டு வந்தார்
அந்த
நிலை நிப்பாண (Nibbana) நிலை எனப்படுகிறது. இந்த
நிலை
அசைக்க
முடியா நிதானம் (Equanimity). களங்கம் இல்லா உள்ளம், அவா (greed), வெறுப்பு (hatred), அறியாமை (delusion) ஆகியவற்றிலிருந்து விடுபட்ட நிலை என்பவற்றை குறிக்கிறது.
அளவுகடந்தந்த
ஆசையை (greed), பகைமையை (ill-will), கோபத்தை (anger), துவேஷத்தை (hostility), வஞ்சனையை, பொறாமையை (jealousy), ஏமாற்றுதலை, பித்தலாட்டத்தை (fraud), பிடிவாதத்தை (obstinacy), அகந்தையை (presumption), அகம்பாவத்தை (conceit), இறுமாப்பை (arrogance), தற்பெருமையை (vanity), சோம்பலைக் (negligence) கைவிட்ட மனம் சலனமற்ற மனம்
எனப்படுகிறது.
இவற்றை
மாசக்கள் என அடையாளப்படுத்தும் புத்தர்
இந்த
மாசுகளை (கிலேசங்களை
kilesa/hinderances) எல்லாம்
கைவிட்ட மனத்தில் மிஞ்சுவது என்ன? துக்கத்தின்
முடிவு. பேரின்பம். அமைதி (Peace. ஏன்று அவர் கண்டுகொண்டாரர்.இந்த
மாசுகள் வெளியே
இல்லைஇநமதுமனத்தில் தான்
உள்ளன.
இந்த
உண்மையை அனுபவரீதியாக அறிந்த
பின்னர் சித்தார்த்தர் என்ற அவர் கௌதமர்
புத்தர் என்று அழைக்கப் பட்டார்.
புத்தர்
அந்நிலையை அடையத் தான் செய்த பயிற்சியையும்
, தொடர்ந்த பாதையையும் சமூக நலனுக்காக
எடுத்துரைத்தார். அதுவே தம்மம் (Dhamma-அறம். ) எப்படுகிறது.
காரண
காரியத் தொடர்பினால் உண்டான அனைத்தும் மாற்றத்துக்கு (அநிச்சா- நிலையின்மை)
உட்பட்டவை. ஒரு சமயத்தில் நாம்
தாயின் வயிற்றில் கருவாக இருந்தோம். மாற்றம் இல்லாதிருந்தால் பிறந்திருக்க மாட்டோம். பிறந்த இரண்டு மாதங்களில் தவழக் கூட முடிவதில்லை. மாற்றமில்லாவிட்டால்
நடக்கப் பழகி இருக்க மாட்டோம்.
ஐந்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது நமக்குக் குழந்தைத்தனமான எண்ணங்கள் இருந்தன. மாற்றம் இல்லாவிட்டால் இன்று அறிவார்ந்த எண்ணங்களோடு பொறுப்பான வேலைகளில் ஈடுபடும் மானிதர்களாக இருக்க முடியாது. மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இது ஒரு உண்மை.
வாழ்க்கையில்
துக்கம் (Dhakka) உள்ளது. இதுவும் ஒரு உண்மை. வாழ்வே
துக்கம் என்று சொல்லவில்லை. இங்கு துக்கம் என்றால் துயரம் என்பது மட்டும் இல்லை; அசௌகரியம்இ திருப்தியின்மை ஆகியவையும் துக்கத்தைச் சார்ந்தவையே. பிறப்பு துக்கம். பிறக்கும்போதே துக்கத்தை அனுபவிக்கிறோம். மூப்புஇ பிணிஇ சாக்காடும் துக்கம். விரும்புவது கிடைக்காவிட்டால் துக்கம். பிடிக்காதவற்றுடன் வாழ்வதும் துக்கம். விரும்பியது கிடைத்தாலும் அது நிலைத்திருக்காது என்பதை
நினைக்கும்போது அந்த மகிழ்ச்சியிலும் துக்கம்
கலந்து விடுகிறது. எனவே துக்கம் உள்ளது
என்பதும் ஒரு உண்மை.
மிக
வேகமாகத் தொடர்ந்து காண்பிக்கப்படும் புகைப்படங்கள் நமக்கு ஒரு தொடர்ச்சியான திரைப்
படமாகத் தெரிகிறது. உண்மையில் கணத்துக்குக் கணம் மாறும் புகைப்படங்களைத்
தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கம்பி மத்தாப்பைச் சிறுவன் ஒருவன் வேகமாகச் சுழற்றும்போது அதன் ஒளி இடைவிடாத
வட்ட வடிவில் உள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் அது வட்ட வடிவில்
இல்லை. வேகமாகச் சுழற்றுவதனால் ஏற்பட்ட மாயத் தோற்றமே அது. அது போலவே
உடலின்இ மனத்தின் நிலைகளும் வேகமாகக் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டே
இருக்கின்றன. காரண காரியத் தொடர்பினால்
உண்டாகும் இம்மாற்றங்கள் தொடர்ச்சியாக யாதொருவரின் கட்டுப்பாட்டினால் நடைபெறுவதாகவும்இ 'நான்' என்ற நிலையான ஒருவர்
இவற்றைச் செயற்படுத்துவதாகவும்இ நம் கண்களுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் ஒரு மாற்றமில்லா 'ஓட்டுனர்'
நம்மை அனைத்தையும் செய்ய வைப்பதாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் மாற்றமில்லா 'நான்' என்றோ 'தான்' என்றோ ஒன்றும் இல்லை. அப்படி நினைப்பது தவறான கருத்துஇ பிரச்சனைகளை உண்டு செய்யும் கருத்து என்று பௌத்தம் கற்பிக்கிறது (anatta,
non-self- சாரமின்மை). இதுவும் ஒரு உண்மை.
இது
போன்ற வாய்மைகளையெல்லாம் (Insights)
படித்தால் மட்டும் அல்லது கேட்டால் மட்டும் போதாது. உடலின்இ மனத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீர விசாரித்துஇ பிரதிபலித்துஇ
உள்ளப்பூர்வமாக உணர வேண்டும். பின்
எங்கு திரும்பினாலும் யாரைச் சந்தித்தாலும் இவ்வுண்மைகளைக் காணலாம். எல்லாம் தம்மமாகிவிடும்.
துக்கத்தைப்
புரிந்து கொண்டால் அது தோன்றுவதற்கான காரணத்தையும்இ
அதன் முடிவினையும்இ முடிவிற்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தையும் நாம் புரிந்து கொள்வோம்
என்கிறார் புத்தர்.
நிப்பாண
நிலையை அடைந்த மனத்தில் அசைவேதும் இருப்பதில்லை. இன்பத்தை நோக்கி ஓடுவதும் இல்லைஇ துன்பத்தை விட்டு விலக முயற்சிப்பதும் இல்லை.
அத்தகைய மனம் உள்ளதை உள்ளபடி
காண்கிறது. உதாரணமாக எதிரே வரும் ஒருவரைக் காணும் சாதாரண மனம் தனது மனக்குறிப்பின்
(perception) பாதிப்பினால்
அந்த மனிதர்மீது விருப்பு அல்லது வெறுப்புக் கொள்கிறது. ஆனால் தெளிவடைந்த மனம் இப்படி இவன்
தமிழன்இ இவன் இஸ்லாமியன்இ இவன்
கிறிஸ்த்தவன்இ இவன் நல்லவன்- கெட்டவன்-
சோம்பேறிஇ அறிவாளி -பணக்காரன் -ஏழை என்றெல்லாம் கணக்குப்
போடுவதில்லை. அது இவன் மனிதன்
என்ற ஒரு உருவத்தை மட்டுமே
காண்கிறது.
கௌதம
புத்தர் நாற்பத்தைந்து
ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும்
போதித்து வந்தபோதிலும் அவர் அக்கொள்கைகளை நூல்
வடிவமாக எழுதி வைக்கவில்லை.
ஆவர் பரிநிர்வானம்
அடைந்த பின்னர் ஐந்நூறு பிக்குகள் அப்போதைய மகதநாட்டின்
தலைநகரத்துக்கு அருகில் இருந்;த மலைக்குகையில் ஒன்;று கூடி ஒரு
மகாநாட்டை கூட்டினார்கள் இதுவே பௌத்தர்களின் முதல் மாநாடாகும். இந்த மாகாநாட்டில் தான்
முதலாவது பௌத்த சங்கம் உருவாக்கப்பட்டது. புத்தரின்
முக்கிய சீடராகிய மகாகாசிபர் இந்த மகாநாட்டிற்குத் தலைமை
தாங்கினார். இம்மகாநாட்டிலே, புத்தருடைய போதனைகளின் ஒரு பகுதியை உபாலி
என்ற பிக்கு ஓதினார். இதற்கு விநயபிடகம் என்று பெயரிடப்பட்டது. மற்றொரு பிக்குவான ஆனந்தர், புத்தர் உபதேசித்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்கு தம்ம (அபிதம்ம) பிடகம் என்று பெயரிட்டப்பட்;டது. புத்தருடைய போதனைகள்
தம்ம - தர்ம என்று இரண்டு
பகுதிகளாக (பிடகங்களாகத்)
தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் தம்ம பிடகத்திலிருந்து சில
பகுதிகளைத் தனியாகப் பிரித்து அதற்குச் சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள். புத்தருடைய போதனைகள் இவ்வாறு மூன்று பிரிவாகத் தொகுக்கப்பட்டதால் அவற்றைத் திரிபிடகம் என்று பாலி மொழியில் அழைக்கப்பட்டது.
புத்தர் போதனைகள் திரிபிடகமாகத் தொகுக்கப்பட்ட பிறகும் அவை எழுதப்படாமல் இருந்தன.
அவற்றைப் புத்தருடைய சீட பரம்பரையினர் வாய்மொழியாகவே
ஓதிப் போற்றி வந்தனர். அவர்கள் வௌ;வேறு பிரிவாகப்
பிரிந்து, பிடகங்களின் வௌ;வேறு பகுதிகளைக்
குரு சிஷ்ய பரம்பரையாக ஓதி வந்தார்கள்.
விநயபிடகத்தை ஓதிய தேரர்கள் விநயதரர்
என்றும், சூத்திரபிடகத்தை ஓதிவந்தவர் சூத்ரதந்திகர் என்றும், அபிதம்மபிடகத்தை ஓதிவந்தவர் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர் .
பிற்காலத்திலே பௌத்த மதத்திலே சில பிரிவுகள் ஏற்பட்டன.
இப்பிரிவுகளைப் பழைய பிரிவினர், புதிய
பிரிவினர் என்று இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். பழைய பிரிவு தேரவாத
பௌத்தம் என்றும் புதிய பிரிவு மகாயான
பௌத்தம் என்றும் அழைக்கப்பட்டது.
Siva Sinnapodi (facebook 15.08.2022)
Post a Comment