ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது "பொன்வண்டு" நூல்வெளியீடு
நிகழ்வைத் கவிஞரும்,தமிழ்ப்பள்ளி ஆசிரியையுமான திருமதி சிவதர்சினி ராகவன் தொகுத்து வழங்க 14.08.22 ஞாயிறு அன்று அகவணக்கத்துடன் 16.00 மணிக்கு ஆரம்பமானது
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபன், ஊடகவியலாளர் திருமதி. சோபியா பாஸ்கரன், நூலாசிரியர் திருமதி. ஆதிலட்சுமி, திரு. சிவகுமார் ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றிவைத்தனர்வரவேற்புரையினை தமிழர் களறி சார்பாளராக திருமதி. கார்த்திகா முரளிதரன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வாழ்த்துரை மற்றும் நல்லாசியுரையினை வழங்கினார்.
நூல் அறிமுகஉரையினை திருமதி. பிரேமினி அற்புதராசா, சுவிஸ், சியோன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ஆற்றிவைத்தார்.
தமிழர்களறியின் சார்பில் திரு. சிவகீர்த்தி தில்லையம்பலம் அவர்கள் நூல் வெளியீட்டுரை ஆற்றினார்
வெளியீடு
முதற்படியினை திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் வெளியிட தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபன் பெற்றுக்கொண்டார். நூலைப்பெற்றுக்கொண்டு திரு. பார்த்திபன் சிறப்புரை ஆற்றினார்
. லுட்சேர்ன் ஆசிரியர் பல்கலைக்கழக மாணவி செல்வி. நிதுர்சனா ரவீந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
.யேர்மன் நாட்டில் பிறங்போர்ட் நகரில் இருந்து கவிஞர், இணையவானொலி அறிவிப்பாளர், திருமதி சோபியா பாஸ்கரன் சிறப்பு படியினைப் பெற்றுக்கொண்டு, சிற்றுரை ஆற்றினார். லண்டனிலிருந்து . நூல் ஆய்வாளரும்,சமூக நீதிக்கான சட்ட ஆலோசகருமான திருமதி. கௌரி பரா அவர்கள் காணொளி வடிவில் சிறப்புரை ஆற்றினார். .
தாயத்தில்
வெளியாகிவந்த ஈழநாதம் வார இதழின் ஆசிரியர்
திரு. இந்திரகுமார் சிறிதரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
நூலாசிரியர் :திருமதி ஆதிலட்சுமி.
நன்றி உரையினை திருமதி கார்த்திகா முரளிதரன் அவர்கள் ஆற்றினார்.
Post a Comment