"பொன்னியின் செல்வன்"
------------------
தமிழினம் என்பது உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும்
ஓர் இனம்..!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டில் வளர்ச்சியடைந்த வரலாற்றை கொண்ட,
தனிச் சிறப்பு வாய்ந்த இனமான தமிழினமானது பல நாடுகளுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்டது மட்டுமன்றி, பல நாடுகளை கைப்பற்றிய,
ஆட்சி செய்த பெருமை மிக்க இனமாகவும் விளங்கியமையே
ஆகும்..!
தமிழர் தன் இனத்தின், வரலாற்றின் சிறப்பையும் திறமையையும் அறியும் போதுதான், தான் யார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்..!
"ஏழாம் அறிவு" படம் திரையிடப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூர், மலேசிய வாழ் மக்களிடம் “போதிதர்மர் யார்?” என்று கேட்டபோது அவர்கள் அளித்த பதில் “இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற ஓர் உத்தம புருஷர்” என்பதாகும்..!
ஆனால், அதே கேள்வியை ஏனைய இளைய தமிழ்ச் சமூகத்தினரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பதில் “தெரியாது! யார் அவர்?” என்பதாகும்..!
தமிழர்கள் தம் இனத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளாமல், அவர்களது பரம்பரை மரபணுவில் உள்ள தனிச் சிறப்புக் குணங்களை வெளிக்கொண்டு வராமல் இருப்பதாலேயே இன்று உலகில் ஓர் அடிமை இனமாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..!
ஏழாம் அறிவு, இந்தியன் முதலிய திரைப்படங்களில் கையாளப்பட்ட
-- நோக்கு வர்மம்,
-- தட்டு வர்மம்,
-- படுவர்மம்,
-- தொடுவர்மம் போன்றவை தமிழர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த வர்மக் கலைகளாகும்..!
உலகுக்கே மருத்துவத்தை சொல்லிக் கொடுத்த இனம் தமிழினம்..!
ஆகையால், தமிழினத்தின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிந்து, இன்று உலக வல்லரசுகளின் அடிமைகளாக இல்லாமல் அதிலிருந்து வெளிவந்து சுதந்திரத் தமிழராக செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதை தமிழர்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்..!
அந்த வகையில் "பொன்னியின் செல்வன்" நாவலானது
70 வருடங்களுக்கு மேலாக மக்களின் மனதை கவர்ந்த ஒரு நாவலாக விளங்குகின்றது..!
அது 2022ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக வெளிவந்து, தமிழர் என்றால் யார் என்பதை உணர வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது..!
வரலாறுகள் உணர்வுகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்தால் மட்டுமே அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும்..!
அந்த வகையில், "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்று நாவல், பல இலட்சம் வாசகர்களின் உள்ளுணர்வைத் தூண்டிய ஒரு நாவலாகும்..!
அக்காலத்தில் வாசகர்கள் வாராந்தம்
"கல்கி" என்ற சஞ்சிகையை எதிர்பார்த்து காத்திருந்தார்களோ இல்லையோ, அது சுமந்து வந்த
"பொன்னியின் செல்வன்" நாவலுக்காக காத்திருந்தமையை அறிய முடிகின்றது..!
தனது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களினதும் தனிச்சிறப்பை வெவ்வேறு கோணங்களில் செதுக்கி வெளிப்படுத்தியுள்ளார், கதாசிரியர்..!
அவர் பல நாவல்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், "பொன்னியின் செல்வன்" நாவலே அவரை வாசகர் மத்தியில் என்றும் அழியாப் புகழை பெற்றுக் கொடுத்தது..!
நன்றி : வீரகேசரி
( கலாநிதி.கலா சந்திரமோகன்)
Post a Comment