நினைவழியா நாட்கள் நூல் வெளியீடு!

புலிகள் அமைப்பின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவராக  விளங்கிய அவ்ரோ குலம்`என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரராஜசிங்கம் அவர்கள் இளமாறன் என்ற புனை பெயரில் எழுதிய`நினைவழியா நாட்கள்` நூலின் வெளியீட்டு நிகழ்வு  கடந்த 2022 ஒக்டோபர் 08 அன்று  பிற்பகல் 15.00 மணியளவில் சுவிஸ்சில் நடைபெற்றது.

 Hesil Halle ,Zentrum Kulthur Und Sport Zentrum Untere Hesilbach Strasse 33,8700 Kusnacht (ZH) என்னுமிடத்தில் நடைபெற்ற இந்  நிகழ்வுக்கு திரு.கார்த்திகேசு கலையழகன் (உதவி அரச அவைத் தலைவர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசு) தலைமை தாங்கினார் .

மங்கல விளக்கேற்றல் ,பொதுச் சுடரேற்றல் ,அகவணக்கம் ,வரவேற்பு நடனம்,வரவேற்புரை  `பசுமைத்தாய்நிலம்` உதவி நிறுவனத்தால்   தாயகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைவேளை அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் தொடர்ந்த நிகழ்வுகளுக்கு திரு.இரவி அருணாச்சலம் (எழுத்தாளர்) தலைமை தாங்கினார்.

தலைமையுரைச் தொடர்ந்து   டொச் மொழியில்  செல்வி மதுஷா உதயகுமார்  (அரச பட்டம்பெற்ற மேல் வகுப்பு ஆசிரியை) உரையாற்றினார்.

வெளியீட்டு உரையை  திரு.ராஜா நித்தியானந்தன் (தகவல் தொழிநுட்ப ஆலோசகர்) ஆற்றியதுடன் முதற் பிரதியினை  வழங்க திரு பொன்னையா சுப்பிரமணியம் (தமிழேந்தி அண்ணையின்உறவினர்)பெற்றுக்கொண்டார் .

வாழ்த்துரையினை  திரு வேலும்மயிலும் மனோகரன் (முன்னாள் அனைத்துலகப்  செயலகப் பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்),  மற்றும் திரு.ஞானசுந்தரம் குகநாதன் (மூத்த  ஊடகவியலாளர் ) ஆகியோர் வழங்கினார்கள்.

ஆய்வுரையினை  செல்வன் நிவேந்தன் நந்தகுமார் (ஒருங்கிணைப்பாளர் புரட்சி ஊடகம் அக்கினிப்பறவைகள்),

திருமதி விஸ்வசீதா அட்சரநாதன் (பன்முகப்படைப்பாளி)

திரு கனக ரவி (ஊடகவியலாளர்)

திரு சர்வேந்திரா தர்மலிங்கம் (சமூக அரசியல் ஆலோசகர்) ஆகியோர் வழங்கினர் .

கருத்துரையினை  திரு காந்தனும்  (ஆரம்பகாலசெயற்பாட்டாளர்),

ஏற்புரையினை  நூலாசிரியரும் வழங்கினார்கள்.

 சித்தப்பா ,சாள்ஸ் உட்பட ஆரம்பகால செயற்பாட்டாளர்கள் நூலாசிரியரினால் கௌரவிக்கப்பட்டனர்.

நன்றியுரையினை செல்வி மாலதி சிவபாதசுந்தரம் (ஏற்றுமதி இறக்குமதிதுறை வல்லுனர் உள்ளக விற்பனைப் பணி) வழங்கியதுடன்

விழா இனிதே நிறைவெய்தியது .

















0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post