உணர்வுடன் கூடிய உழைப்பு இவரிடம் காணாதது களைப்பு!

முத்துரூபன் அப்பாவின்....

 தேநீர்

எல்லையற்று  பரந்து கிடக்கும் அவரது அன்பிற்கும்  சுறு சுறுப்பிற்கும் பொருத்தமே இல்லாமல் மடித்துக்  கட்டிய சாறத்துடன், அரைக்  கை   சேட்டுடனும்,   ஊலாவும் ஒரு சிறிய தோற்றமுடைய அந்த உருவம் தான் . வைத்தியர்களாலும்

மருத்துவப் போராளிகளாலும், விழுப்புண்ணடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போராளிகளாலும் அன்பாக அழைக்கப்பட்ட  முத்துரூபன் அப்பா

கிளிநொச்சி கரும்பு தோட்டத்தில் இயங்கிய நீலன்  மருத்துவமனையின்( 1999) சமையற் கூடத்தில் நான் அவரை முதல் முதல் பார்த்தேன்.

அன்றிலிருந்து இறுதி  இடப்பெயர்வுகள் வரை அவரது பணி போராளிகளின் இராணுவ மருத்துவமனையில்  கழிந்தது,

ஆண் போராளிகளிலும்  பெண் போராளிகளிலும் அளவற்ற அன்பு வைத்திருந்தார் .

பிரதான சமையல் கூடத்திலிருந்து வரும் உணவுகளை பகிர்ந்து கொடுப்பது, தேநீர்  போட்டு கொடுப்பதும் தான் அவரது பணி மிகவும் நேர்மையான மனிதர் தன் பணியில் எந்த சமரசமும் இல்லாதவர்.

அவரது  தேநீரில் சுவையுடன் அவரது அன்பும் கலந்ததால் என்னமோ அது தனி சுவையாக இன்றுவரை  நாவீனில்  இருக்கின்றது. என்னைப் போல் அங்கு இருந்தவர்கள் யாரும் அவரை இலகுவில் மறந்து விட மாட்டார்கள். ஆயிரத்தில் ஒருவர் தான் அந்த இரக்க குணமுள்ள முத்துரூபன் அப்பா.

நாம் சிலவேளைகளில் பசி, தாகம் தீர்க்க அடிபட்டு தேநீரை  எடுத்துக்கொள்வோம். அப்போது அவரது முகத்தில் பிரகாசமான ஒளிபரவுவதை பார்த்திருக்கின்றேன். வேணும் என்றால் கொண்டு வாறன் நிறம்ப குடியுங்கள் என்று சொல்வார், எப்போதும் தேநீர் போடும் பொருட்கள் இல்லை என்று சொல்வது இல்லை வைச்சற்றில் மிச்சம் பிடிச்சும் வைச்சுபோடுவார்.

வேகமான நடையும்,  அவரது விவேகமான, விரைவான செயற்பாடுகளும்,  பொறுப்பாக,அன்பாக  நடந்து கொள்ளும் விதங்களும் மருத்துவமனை  பொறுப்பாளருக்கும் வைத்தியருக்கும்  பிடித்து கொள்ள அவருக்கான பணிகளும் அதிகரித்தன .

நள்ளிரவு தாண்டியும்  இயங்கிக்கொண்டிருக்கும் சத்திரசிகிட்சைக்கூடத்தில் "தேநீர்" வந்திருக்கு பிள்ளையள் குடியுங்கள்"

என்ற குரலுக்காக ஏங்காத உள்ளங்கள் இல்லையென்று சொல்லலாம்.

அதில்   அவ்வளவு  சிறப்பு இருக்கும்  விடிய விடிய இயங்கும்  சத்திரசிகிட்சை கூடத்தை இரண்டு மூண்று  தடவைகள் வந்து பார்த்து தான் போவார்.

இரவில் நித்திரை விழிப்பது அவருக்கான பணியில்லை ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் எம்முடன் சேர்ந்து கொள்வார்

தந்தைக்கே உரித்தான கண்டிப்பும் இரக்க குணமும் படைத்தவர்.

எப்போதாவது ஒரு நாள் சுடு தண்ணீர்ப் போத்தலில் தேநீர் மிச்சமிருந்தால் "ஏன்னம்மா இன்று நல்லாயில்லையா என்று திருப்பி திருப்பி கேட்பார்"

இரவுநேரத்தில்  காயமடைந்த போராளிகள் வந்தால் ஒருக்கால் வந்து  காயத்தை எட்டிப் பார்த்து  விட்டு விட்டு போனார் என்றால்  அவருக்கு தெரியும் இன்று  அதிகாலை ஆகிவிடும்  சத்திரசிகிச்சை முடிய ,

எப்படியும் இரண்டு தடவை தேநீர் கொடுக்க வேண்டும் என்று அதனால் மெதுவாக வந்து

சுடு தண்ணீர்ப் போத்தல்களையும் எடுத்து கொண்டு போய் இராப்பறவையைப் போல் அங்கும் இங்குமாய் திரிவார்.

"காயங்களை செய்து முடித்து மருத்துவர்கள் ஓய்வுக்கு போன பின்னரும் மருத்துவ தாதிகளின் பணி முடிவதில்லை

 இருள்கள் முடிந்து விடியல்கள் வந்தாலும் பல வேளைகளில் தாதிகளின் பணி தொடரும்..

 அதனால்  மூத்துரூபன் அப்பா 

அடிக்கடி ஓடி வருவார்" பிள்ளைகள் வேலை முடிச்சிட்சிட்டிங்களா ? ஏதாவது குடிக்க வேணுமா "என்று ..

 .முத்துரூபன் அப்பா விடுமுறையில் வீட்டிற்கு செல்வது குறைவு எப்பாவது இருந்திட்டு தான் போவார் போனாலும் புலிகளின் குரலில் செய்திகளில் எங்கயாவது சண்டை நடப்பதாக சொன்னால் அல்லது தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டால்  லீவு முடிய முன்பே ஓடி  வந்திடுவார் .

ஏன் அப்பா நேற்று தானே போனீங்க அதுக்கிடையில வந்திட்டிங்கள் என்றால் "இரவு முழுவதும் ஒரே வெடிச் சத்தம் காயக்காரர் நிறைய வந்தா சமாளிக்க மாட்டாங்க பொடியல் "

 ஓம்  அப்பா நீங்க இல்லை என்று நேற்று வந்த  வயிற்று  காயம்  எல்லாம் செய்யவில்லை  என்று பகிடியாக சொன்னா வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டேசுவரில் மறைந்து கொண்டு  "இல்லை தம்பி  ,தேத்தண்ணீர் ,சாப்பாடு உங்களிற்கு என்பார் .

தனக்கான பணியை செய்யவும். நோயாளருக்கான  உணவு பங்கீட்டில் அவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம்.

 சில போராளி நோயாளர்களிற்கு என்று சிறப்பு உணவுகள் வரும் போது அதையும் அவர்களிடமே  சேர்த்து விடுவார் .

எப்பவும் என்ன உதவி கேட்டாலும்

எங்களைக்  காத்திருக்க விட்ட தேயில்லை  ஓடி வந்து என்ன எது என்று கேட்பார்.

அவர் நடக்கிறாரா ஓடுகின்றாரா என்று சில வேளை எமக்கு சந்தேகமாக இருக்கும் அவ்வளவு வேகம்  .

 பொறுப்பு  வைத்தியரை அழைக்க வேண்டும் என்றாலும் அல்லது ஆண் போராளிகளை அழைக்க வேண்டும் என்றாலும் எந்த நேரத்திலும் நாங்கள்  அவரிம் சொன்னால் சரி

உடனே எந்த மறுப்பும் இன்றி தகவலை சரியாக சொல்லி விடுவார்.

 இவர்கள் வெறும் பணியாளர்கள் இல்லை  எத்தனையோ துன்பங்களிலும்  எம் முடன் சேர்ந்து ஒன்றாக உழைத்த மனிதர்கள்.

இராணுவ மருத்துவமனைகளில் வேலை செய்யும் போது  எப்போதும் தமக்கு உயிராபத்து வரலாம் என்று தெரிந்தும்.

மானசீடமாக அர்பணிப்புடன் பணிபுரிந்தவர்கள்.

 இவரைப் போல் பல மனிதர்கள் அந்த மண்ணில் வாழ்ந்தார்கள்  முழுமனதாய் உழைத்தார்கள்.

இவர்களையும் நாம் மறந்து விட முடியாது  .

வாழும் காலத்திலேயே அவர்களை மீள நினைப்போம் 

.பணிகளை போற்றுவோம்.

சர்வ தேச தேநீர் தினம் 21.05

மிதயா கானவி

என் எழுதப்படாத நாட் குறிப்பிலிருந்து

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post