சுவிஸில் நேற்று 17.05.2023 நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !


சுவிஸின் தலைநகரான பெர்ன் நகரில் WAISENHAUSPLATZ 1, 3011 BERN எனும் இடத்தில் 14 வது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு 17.05.2023  நடைபெற்றது . அறிவிப்பாளர் கவிதரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது அதை டொச் மொழி செல்வி நிதுர்சனா வழங்கினார். சுவிஸ் நாட்டு தேசியக்கொடி செல்வன் நிதுர்சன் ஏற்றிவைக்க ,(தமிழ் இளையோர் அமைப்பு ), தமிழீழ தேசியக் கொடி முன்னாள் போராளி குமார் (சூரிச் மாநிலப் பொறுப்பாளர் ஏற்றினார் .பொதுச் சின்னத்துக்கு மலர்மாலை  போராளி மணிமொழி அணிவித்தார்  தொடர்ந்து 

டொச் (Deutsch )மொழியில் தஸ்மியா(தமிழ் இளையோர் அமைப்பு) , பிரஞ்சி (franch) மொழியில் ஜினோதன் (பொறுப்பாளர் தமிழ் இளையோர் அமைப்பு), இத்தாலி மொழியிலும் உரையாற்றப்பட்டது.

இந்நிகழ்வை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது இதில் 300 மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர்.













0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post