மறைந்த பிரபல ஊடகவியலாளா் பி.மாணிக்கவாசகம் எழுதிய “நினைவுகள், நிகழ்வுகள், நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்” என்ற நுால் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மாணவா்களுக்கான ஒரு உசாத்துணை நுாலாக இணைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான அறிமுக விழா நேற்று புதன்கிழமை கலைக கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
ஊடகத்துறை
விரிவுரையாளா் தினேஷ் இதற்கு தலைமை தாங்கினாா். கலைப்பீடாதிபதி பேராசிரியா் சி.ரகுராம், அரசியல்துறை
தலைவா் பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்,
ஊடகவியலாளா்களான கணபதி சா்வானந்தா, பாரதி ஆகியோா் இங்கு உரையாற்றினாா்கள்.
ஏற்புரை
நிகழ்த்திய திருமதி மாணிக்கவாசகம் நுால்களின் ஒரு தொகுதியை பல்கலைக்கழக
நுாலகத்துக்கு வழங்கினாா். பெருந்தொகையான மாணவா்களும், விரிவுரையாளா்களும், எழுத்தாளா்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தாா்கள்.
தகவல் ; மிதயா கானவி (முகநூல்)
Post a Comment