தியாக தீபம் திலீபன் 39 வது ஆண்டு நினைவு சுவிஸ் பேரன் நகரில் !

இதன்போது தமிழ் ஈழ அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும், லெப்.கேணல் திலீபன் முன்வைத்த கோரிக்கைகளை உள்ளடக்கியதுடன், மொத்தம் 32 கோரிக்கைகள் அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் முன்வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடமிருந்தும் கையொப்பங்கள் பெறப்பட்டன.

 சேகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய கோரிக்கைகள், சுவிட்சர்லாந்திலுள்ள அரச நிறுவனங்களின் மனித உரிமை அமைப்புகள் மற்றும் கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நாடுகளின் தொடர்புடைய மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அக்கினிப்பறவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

 லெப்.கேணல் திலீபனின் நினைவை முன்னிறுத்தி நடைபெறும் இந்த ஆண்டு நிகழ்வுகள், அவரது தியாகத்தை நினைவுகூருவதுடன், ஈழத் தமிழர்களின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பான கருத்துக்களையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



தியாக தீபம் திலீபன் (26.09.2026  Bern, சுவிஸ்)

வெடி குண்டுகளை நிரப்பிக்கொண்டு வெடிக்கப்போகிறோம் என்று தெரிந்த நொடியில் எதிரியின் இலக்குகள் மீது பாய்ந்து இலட்சியத்துக்காக போராடிய வேங்கைகள் பலர். சாவை அணைத்துக்கொள்ள விரும்பி சமராடிய வேங்கைகள் பலர்.

இத்தனைக்கும் மத்தியில் காந்திய நாட்டுக்குப் காந்தியத்தில் பதில் சொல்ல புறப்பட்டு  தியாகியான  திலீபனின் நாட்கள் மணித்துளிகளாக நொடி நொடியாக கரைந்து கொண்டிருந்தது. திலீபனின் இதயம்,அவனைச் சுற்றி இருந்தவர்களின் இதயங்கள் எல்லாம் தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றே துடித்துக்கொண்டிருந்தது.காந்திய நாட்டவர்களின் கடிதம் கடைசி நேரம் வரை கிடைக்கவில்லை.திலீபன் சோர்ந்து அசைவற்று தமிழீழ மண்ணில் சாய்ந்துகொண்டான்.

இந்தத்  தியாகியை நினைவு கூர்ந்து கொண்டு இருக்கிறோம் ஆண்டு தோறும்.

அந்த வகையில் இன்று சுவிஸ் அக்கினி பறவைகள் அமைப்பினரால்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இந் நிகழ்வு.

1983 ம் ஆண்டு காலப்பகுதில் இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க முன்வந்தது .

இந்தப் பயிற்சிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை  ஏற்பட்டது.

ஏனென்றால் அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின்  முழு நேர உறுப்பினர்களாக 29 பேர்கள் தான்  இருந்தனர். 

இதுவரை காலமும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்த பல்கலைக்கழக மாணவர்களையும்,  இளைஞர்களையும் உள்வாங்கி ஆட்சேர்ப்பு செய்யத்  தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு ஏற்றவாறு புலிகளின்  நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டது 

புதிய நிர்வாகம்  தமிழகம்  - .தாயகம் எனத் தற்காலிகமாக இரு பிரதான தளங்களாகப் பிரிக்கப்பட்டது.

அந்த ஒழுங்கின் படி தமிழகத்தில் தேசியத் தலைவருடன்,  பேபி அண்ணா, ,அன்ரன் மாஸ்ரர், தேவர் அண்ணா,கே.பி, ராகவன், நேசன், குண்டப்பா ஆகிய ஏழு பேரும்.

தாயகத்தில் தளப் பொறுப்பாளர்: கப்டன். பண்டிதருடன் சிறி ,ராமு, சந்தோசம், அப்பையா அண்ணண் ,.பசீர் காக்கா  ஆகிய ஐந்து   பேரும் இயங்குவதென முடிவு செய்யப்பட்டன.

ஏனைய உறுப்பினர்களான:  

1.பொன்னம்மான் 2.புலேந்தி அம்மான், 3.ரஞ்சன் லாலா,4.கிட்டு, 5.விக்டர்

6.லிங்கம் 7.கணேஷ்,8.ராஜேஷ்,9.அல்பேர்ட் 10.,ஞானம் 11.ரெஜி,

12 சுப்பண்ணா, 13.யோகன், 14.பொட்டு,15 .அருணா ஆகிய 15 பேரும் இந்தப்  பயிற்சிக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

திலீபனுடைய போராட்ட வரலாறு பற்றி பார்ப்போம்

முதல் திலீபனுடைய அவருடைய குடும்பம்

யாழ் ஊரெழுவைச்  சேர்ந்த ஆசிரியர்  நாகலிங்கம் இராசையா, பர்வதபத்தினி தம்பதிகளுக்கு  1963 நவம்பர் 29 நாள் பிறந்த திலீபனுக்கு மூன்று ஆண் சகோதரர்கள் இருந்தனர்.

தாயார் சிறு வயதில் காலமாகிவிட்டார். தந்தையின் அரவணைப்பிலேயே இவர்கள் வளர்ந்தனர். .

இந்த நிலையில் 1983 ஜூலையில் ஏற்பட்ட தமிழின அழிப்பின்   கோரத்தைக் கண்டு சினந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் ஒருவரான  திலீபனுக்கு  இனத்துக்காக போராட வேண்டும் என்ற  எண்ணம் மனதில் தோன்றியது.

மாணவனான பார்த்தீபன் விடுதலைப் போராளியாக  மாறியகாலம் அது.

யாழ்ப்பாணத்தில் விடுதலை இயக்கங்கள் பல தோன்றிய நிலையில் மக்களுக்கு அரசியலுக்கு அப்பால் ஒரு சரியான விடுதலை இயக்கத்தை இனங்காணும் தேவை ஏற்பட்டிருந்தது.

அந்த வகையில் திலீபனின்  தெரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக இருந்தது.

சிறந்த மேடைப் பேச்சாளரான திலீபன் சொந்த வாழ்வில் எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்பவர், தனிமனித ஒழுக்கம் ஆகிய அவரின் பண்புகளை அறிந்திருந்த புலிகள் இவருடைய  இலகு தமிழ் நடை   மக்களை தெளிவு படுத்தக்கூடியது என்பதையும் உணர்ந்து தங்களுடன்  இணைத்துக்கொண்டனர்..

இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தை எட்டு  பிரதேசங்களாக பிரித்து ஒவ்வொரு பிரதேசத்துக்கும்  தலா ஒருவர் பொறுப்பாளர் என்ற  நிர்வாக ஒழுங்கு  செய்யப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் பிரிக்கப்பட்ட பிரதேசங்களும் அதன் பொறுப்பாளர்களும்

இதில் திலீபனும் ஒருவர் அவருக்கு

1.தாவடியிலிருந்து  -  வட்டுக்கோட்டை வரையிலான பிரதேசம்  வழங்கப்பட்டது

2.உடுப்பிட்டி - ,வல்வெட்டித்துறை பிரதேசம் : செல்வம்  இவர் ஐரோப்பாவிலிருந்து தாயகத்துக்கு வந்தவர் 19.05.1984 அன்று பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது படையினரிடம் கைதாகும் நிலை ஏற்பட்டது சைனட் உட்கொண்டு ஆகுதியானவர்.

 இவர் புலிகள் இயக்கத்தில் முதன் முதல் சைனட் உட்கொண்டு ஆகுதியானவர்.

3. யாழ்ப்பாணம் பிரதேசம்: ஸ்ரிபன் இவரும் ஐரோப்பாவிலிருந்து தாயகத்துக்கு வந்தவர் ,இவர் தீவுப்பகுதியில் சிறிலங்கா பொலிசாரிடம் ஆயுதம் பறிக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட நெருக்கடியில் 29.06.1984 அன்று  சைனட் உட்கொன்டு ஆகுதியானவர்.  

4.கல்வியங்காடு முதல் அச்சுவேலி வரை பிரதேசம் : கிரி

5. இணுவிலிருந்து மயிலிட்டி வரை பிரதேசம்: ரஞ்சித் (கந்தையா அண்ணா) பல்கலைக்கழகம்

6.  தீவகம் பிரதேசம். நிலாந்தன் /எழிலன் (தற்போது எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்)

7. நாவற்குழி  முதல் இயக்கச்சி  வரை பிரதேசம் : சுரேன் பல்கலைக்கழகம்

8. பருத்தித்துறை  பிரதேசம் :  உதயன் பல்கலைக்கழகம்

இவர்களின் பணிக்காக  தலா ஒரு துவிச்சரவண்டி மட்டுமே வழங்கப்பட்டது.

இவர்களைவிட மேலதிகமாக சுகந்தன் ,நாதன் ,பார்த்தீபன் ,தனபால். சற்குணம், சண்ணப்பா, அலெக்ஸ்  கிருபா செல்வராஜா என  9 பேர்  அரசியல் பணிகளை மேற்கொண்டனர்.

இவர்களுடன் சமகாலத்தில் மகளிர் மத்தியில் அரசியல் பணிசெய்ய பல்கலைக்கழக மாணவிகளான சாந்தி அக்கா, ரதி,புனிதா, ஆகியோருடன் காமினி அக்காவும் பரப்புரைகளில் ஈடுபட்டனர்

இதில் குறிப்பிடப்பட்ட  நாதன் (கந்தையா பேரின்பநாதன்) என்பவர் 26.10,1996  ,அன்று .பாரிஸ் நகரில் வைத்து சிறிலங்கா அரச கூலிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் கந்தையா கஜேந்திரன் (கஜன்) என்பவரும் கொல்லப்பட்டார்

ஏனைய   மாவட்டங்களுக்கு  நியமிக்கப்பட்டவர்கள் .

9. கிளிநொச்சி: இராசநாயகம் பல்கலைக்கழகம்

10. வவுனியா :தவம் அண்ணர்

11, முல்லைத்தீவு :ஸ்ரீகந்தராஜா பல்கலைக்கழகம் 

12. மன்னார்: ராஜேஷ்

13.  திருகோணமலை:  சந்தோசம் மாஸ்டர்

14. மட் / அம்பாறை  ராமு, யோகன், டானியல், பிரான்சிஸ்

இந்த பரப்புரை, ஆட்சேர்ப்பு ஆகியவை தாயகம் முழுவதும் பழைய  போராளிகள் ஆறு பேரும்  புதியவர்களான மாணவர்கள், ஆதரவாளர்கள் 23 பேரும்  சேர்ந்து மொத்தம் 29 பேரும்  இணைந்து செயற்பட்டதால் பயிற்சிக்கு தேவையானோரை அனுப்பு முடிந்தது. 

திலீபன் பரப்புரையில்  ஈடுபடும் போது சுழிபுரப் பகுதியில்  திடீரென அங்கு வந்த பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு போலீசாரின் வாகனத்தில் ஏற்றப்பட இருந்த நிலையில்  தனது கையிலிருந்த சூட்கேஸ்சினால் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அவ்வேளை பொலிசார்மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இவர் கையில் விழுப்புண் அடைந்தார்

1985 ஜனவரி 09 அன்று தளப் பொறுப்பாளராக செயற்பட்ட கப்டன் பண்டிதர் வீரச்சாடைந்தார்.

இதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் தளப் பொறுப்பாளர் நிலை நீக்கப்பட்டு மாவட்ட  ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்ட மாவட்ட தளபதிகள் நியமிக்கப்பட்டனர்.

அவருக்கு கீழ் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் அவர் தளபதிக்கு கட்டுப்பட்டவராக இருப்பார்,

இந்த வரிசையில் யாழ். மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளராக தளபதி கேணல் ,கிட்டுவால் திலீபன் நியமிக்கபட்டார் .

இவர் அரசியல் பிரிவை பொறுப்பேற்றபின் பல்வேறு கட்டமைப்புகளையும் உருவாக்கினார்.

இதில் “களத்தில்” பத்திரிகையும் குறிப்பிடத்தக்கது அதன்ஆசிரியராக இவரே விளங்கினார்

திலீபன் வெவ்வேறு சம்பவங்களில் விழுப்புண் அடைந்தார்.

தொண்டைமானாற்றில் நடந்த ஒரு சமரில் வயிற்றில் விழுப்புண் அடைந்தார் .அது போல கோட்டையிலிருந்த இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலிலும் விழுப்புண் அடைந்தார்.

 இந்தக் காலகட்டத்தில்

24.07.1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில், 1987  ஜூலை 24  அன்று யாழ் .சுதுமலையிலிருந்து இந்திய விமானப்படை உலங்கு வானூர்தியில் தேசியத்  தலைவரின் அவரது துணைவியார் மதிவதனி அக்கா,குழந்தைகளான  சாள்ஸ் அன்ரனி, துவாரகா,  இவர்களுடன் தியாகதீபம் திலீபனும் பயணித்தார்

மீண்டும் தாயகம் திரும்பினார் தலைவர்

1987 ஆகஸ்ட் 02  அன்று தேசியத்தலைவர் இந்திய விமானப்படையின் விமானத்தில் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவருடன் , தளபதி கிட்டு ,தமிழீழ அரசியற்பிரிவு பொறுப்பாளர் யோகி, யாழ் மாவட்ட,அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன்,மொழி பெயர்ப்பாளர் ரஹீம், மெய்ப்பாதுகாவலர்களான ரகு,  சொர்ணம்,அஜீத்,ரோபர்ட்,தினேஷ்,கடாபி,நளன் ஆகியோருடன் தேசியத்  தலைவரின்  துணைவியார் மதிவதனி அக்கா, ,குழந்தைகளான  சாள்ஸ் அன்ரனி,  துவாரகா ஆகியோரும்  வந்தனர். 

1987 ஆகஸ்ட்  04 அன்று சுதுமலையில்  வரலாற்று சிறப்பு மிக்க தேசியத் தலைவரின் உரை இடம்பெற்றது இந்த கூட்டத்தை  திலீபனே  நெறிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து .இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி எந்த  வாக்குறுதிகளும் நிறைப்வேற்றப் படாமல் போய்க்கொண்டிருந்தது .புலிகள் ஜனநாயக. அறவழியில்   போராட்டத்தை ஆரம்பித்தனர் .

ஐந்து அம்ச கோரிக்கையை முன் வைத்து

நீர் ஆகாரம் அற்ற உண்ணா விரதம்  திலீபனால் மேற்கொள்ளப்பட்டது .திலீபன் வாகனத்திலிருந்து நல்லூர் ஆலய வடக்கு வீதியில் வந்து இறங்கியதும். ஒரு மூதாட்டி திலீபனின் நெற்றியில் விபூதி பூசி திலகம் இடுகிறார். இவர்  உண்ணா விரத மேடையில் இறுதி வரை இருந்த போராளி நவீனனின் அம்மம்மா என்பது குறிப்பிடத் தக்கது)

திலீபன் மேடைக்கு அழைத்து வரப்படுகிறார் அவருடன்  காசி அண்ணா, தேவர் அண்ணா, வாஞ்சி அண்ணா. நடேசண்ணா, பின்னாளில் யாழ் மாவடட அரசியல் பிரிவு பொறுப்பாளராக விளங்கிய ராஜன், டாக்டர் அஜந்தன், மாணவர் அமைப்பு பொறுப்பாளரும் பின்னாளில்  வீரச்சாவடைந்த மேஜர் முரளி, முதலானோர் வருகிறார்கள்.

மேடையில் வந்து அமர்ந்ததும். அடுத்து யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளராக ஏற்கனவே திலீபன் தீர்மானித்த மேஜர் பிரசாத்தினால்,  திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கைகளை  மக்கள் முன் வெளிப்படுத்பட்டன.

இவர் 1988 பெப்ரவரி 05.அன்று  யாழ் .பணிப்புலத்தில் வைத்து இந்திய படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை சைனட் உட்கொண்டு ஆகுதியானார்.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை  .

1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் , தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.

5.தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

முதல் நாள் இரவு தேசியத் தலைவர் வந்து சந்தித்தார்.

அதன் பின்னர் பல தடவைகள் வந்து சந்தித்திருந்தார்.

சமகாலத்தில் திலீபனுக்கு ஆதரவாக  மட்டக்களப்பில் மதனும், முல்லைத்தீவில் திருச்செல்வமும் திருகோணமலையில் கிருபாவும்    உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம்  12 நாட்கள் தொடர்ந்தன.

மேடையில் புதுவை அண்ணா உட்பட புகழ் பூத்த உணர்ச்சிக்  கவிஞர்களேல்லாம் கவிதைகளைத் தெறிக்க விட்டனர். இவற்றில் சில இசைப் பாடல்களாகவும் வெளிவந்தன.

பின்னாளில் மாவீரரான கஸ்தூரியும் தன்னை அடையாளம் காட்டினார்.

தனக்கான இரங்கற் கவிதைகளை தானே கேட்கும் பாக்கியம் உனக்குத்தான் கிடைத்திருக்கிறது என்றும் ஒருவர் குறிப்பிட்டார்.

அதே நாட்களில்  "ஓ மரணித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா!

உன் பாதணிகளை எனக்குத்தா!

உன் ஆயுதங்களை எனக்குத்தா! என்ற பாடல் கேட்போர் நெஞ்சங்களை அதிர வைத்தது. இது இன்னொரு தேசிய விடுதலைப் பாடல் உணர்வும்,யதார்த்தமும் ஒன்றாக இருந்ததால் அது தேசங்களைக் கடந்து எமது நெஞ்சங்களில் பற்றி எரிந்தது. "உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத்தா. உற்றார்கள்  மத்தியிலே உன்னைப் பற்றிச்  சொல்லுவதற்கு..." என்ற வரிகள் காலப் போக்கில் நியமாகும் என்றே தோன்றுகிறது.

24 மணி நேரமும் திலீபனைச் சூழவே மக்கள் இருந்தனர். மக்கள் பணிகளில் பெண் போராளிகள் ஈடு பட்டனர்.

அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், துணைவியார் சகிதம் வந்து சந்தித்தார். இவர்களுடன் அன்றைய தமிழீழ அரசியற்பிரிவு பொறுப்பாளர்  யோகியும்  வந்திருந்தார்

கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மா வந்து உண்ணாவிரத மேடையில் வைத்து திலீபனை வணங்கினார்..!

வணக்கத்துக்குரிய சிங்கராஜர் 16.09.1987 வந்து பார்வையிட்டார்.

அன்றைய  ஈரோஸ் (ஈழப் புரட்சிகர அமைப்பு) தலைவர் பாலகுமார் தங்கள் இயக்க முக்கியஸ்தர்களுடன் வந்து சந்தித்தனர்   -

தென்னிலங்கையிலிருந்து நவ சம சமாஜி கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் வந்து சந்தித்தனர்

அமெரிக்கா, ஜப்பான்,நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதரக அதிகாரிகள்  வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.

அறப்போரின் உச்சமான உண்ணாவிரத போராட்டம் 11 நாள் 25.09.1987 அன்று இரவு திலீபனுக்கு தேசியத் தலைவருக்குமான இறுதி சந்திப்பு இது என்பதை இருவரின் உள்ளுணர்வுகளும்  வெளிப்படுத்தின.

திலீபனின் நெஞ்சுரம்கொண்ட உறுதியை எண்ணி வியந்து நிற்கிறார் தலைவர்.

வாஞ்சையோடு தலையை தடவி கோதிவிடுகின்றார். அவரது கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டான் திலீபன்.

வார்த்தைகளுக்கு இடமோ நேரமோ இல்லாத அந்தச் சந்திப்பு. சூழ இருந்தவர்களுக்கும் தவிர்ப்பை ஏற்படுத்தியது. 

பேசமுடியாத நிலையில்

தலைவரும் தீலிபனும் இலட்சிய வேட்கையுடன் சோகத்தின் வாசலில் விடைபெறுகின்றனர்.

இந்தவேளையில்  ஒவ்வொரு நாளும் திலீபனின் உடல்  பரிசோதனை செய்யப்படுவது வழக்கமாக  இருந்தது.

12ம் நாள் திலீபனைப்  பரிசோதித்த யாழ். போதனா வைத்தியசாலை  வைத்தியர் சிவகுமார் திலீபனின் கால் மாட்டில் வீழ்ந்து கும்பிட்டு விட்டு அலைகடலென திரண்டிருந்த மக்கள் முன்  வீரச்சாவடைந்து விட்டார் என்பதை உறுதி செய்யும் போது 

மக்கள் மத்தியிலிருந்து எழுந்த ஒலி ஓங்கி ஒலித்தது.  தன்னை வருத்தி, தன்னை இழந்து, தமிழ் மக்களின் விடுதலை, உரிமை, உணர்வு என்பதன் வெளிப்பாடான, உயிர் ஒன்று 1987 செப்டெம்பர் 26 சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு இவ்வுலகிலிருந்து விடைபெற்றிருந்தது.

உயிர் உடலை விட்டு வெளியேறிய அந்த வேளை கூடியிருந்த மக்களின் அழுகை ஒலி நிட்சயம் அனைத்து மனித இன மக்களையும் அசைத்திருக்க வேண்டும்.

நேற்றிரவு 25.09.1987 அன்று  திலீபனைச் சந்தித்தலிருந்து, அவர்  மனதில் ஏற்றிய சுமையுடன்

அடுத்த நாள் 26.09.1987 அன்று   இந்தியப் படையினருடன் பலாலியில் நடந்த சந்திப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டி இருந்தது.

அவ்வேளையிலே திலீபனின் இழப்புப் பற்றிய செய்தி அவருக்கு எட்டியது.

பேச்சின் முடிவில் நிர்பந்திக்கப்பட்ட உடன்பாடுகள் பற்றிய படிவத்தில் கையெழுத்திட விரும்பாத தலைவர் அதில் கையொப்பம் இடுமாறு மாத்தையாவை பணித்தார்.

இதனால் சினமுற்ற இந்தியத் தூதுவர் டிக்சித் தனக்குப் பதிலாக தூதரக அதிகாரியான பூரியைக் கையெழுத்திட பணித்தார்,

தனது முடிவுகளைக்  வெளிப்படுத்திய அந்த ஆவணத்தில் தமிழீழ தேசியத் தலைவரைக்  கையெழுத்திட  வைக்க முடியவில்லை என்ற ஆத்திரமும் ஏமாற்றமும் அவரது மரணம் வரை நீடித்தது.

 தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் உலகத்தில் இடம் பெற்ற போதெல்லாம், இன அழிவுக்கு மத்தியில் இரக்கம் காட்டிய நாடுகள், எமது மக்களின் அழிவில் இன்னும் நீதியை வழங்காத நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன் எமது மண்ணில் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தற்கொடையாளன் திலீபன் அவர்களின் நினைவேந்தலில்  தமிழ் மக்கள் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு நிற்கின்றன.

-காந்தன் 


தமிழீழ வான்புலிகள் படை சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களின்

25வது ஆண்டு நினைவும்  26.09.2026

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தொழில்நுட்ப அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் இயக்கத்தின் பல்வேறு கட்டமைப்புகளோடு இணைத்த முக்கியமான பெயர்களில் ஒன்று கேணல் சங்கர் அண்ணா

1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி, ஆறு ஆண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்த சங்கரின் ஆரம்ப வாழ்க்கை வவுனியாவில் தொடங்கியது.

பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில்  கல்வி கற்ற அவர், படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் மற்றும் தடகளப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் சென்னை சென்ற அவர், வானூர்திப் பராமரிப்பு மற்றும் விமானத் தொழில்நுட்பம் தொடர்பான கல்வியைப் பயின்றார். பின்னர் கனடாவின் மொன்றியால் நகருக்குச் சென்று விமானத் துறையில் பணியாற்றினார்.

சங்கர் அண்ணாவுக்கும், தேசிய தலைவருக்கும்  வவுனியா காலத்திலிருந்தே அறிமுகம் இருந்தது. காலப்போக்கில் அந்தத் தொடர்பு மீண்டும் வலுப்பெற்றது.

1983ஆம் ஆண்டு கறுப்பு  ஜூலைக்குப் பின்னர், கனடாவில் இருந்த தனது வாழ்க்கையை விட்டு இந்தியாவுக்கு வந்த சொர்ணலிங்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முழுநேரமாக இணைந்து “சங்கர்”  பெயருடன் செயல்படத் தொடங்கினார்.

அவருடைய தொழில்நுட்ப அறிவும் வெளிநாட்டு அனுபவமும் பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்பட்டன. தகவல் தொடர்பு சாதனங்கள், கப்பல்கள், ரேடார் உள்ளிட்ட உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வெளிநாட்டு வலையமைப்பை உருவாக்குவதிலும் அவர் பங்கேற்றார்.

கடல் நடவடிக்கைகளின் ஆரம்ப வளர்ச்சியிலும் சங்கர் அண்ணாவின்  பங்களிப்பு இருந்தது. ஆரம்பகால கப்பல் மற்றும் Radar (ரேடார்) முயற்சிகளிலும், “கடற்புறா” என அழைக்கப்பட்ட கப்பலின் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் அவர் ஈடுபட்டார். பின்னாளில் வளர்ந்த கடற்புலிகள் அமைப்பின் ஆரம்ப கட்டமைப்புகளோடும் அவரது பெயர் இணைந்தது.

வன்னியின் காடுகள், பாதைகள் மற்றும் முக்கிய இடங்களை வரைபடமாக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டார்.

ஆனால் சங்கர் அண்ணாவின்  பெயருடன் மிகவும் நெருக்கமாக இணைந்தது விடுதலைப் புலிகளின் வான்படை முயற்சியாகும்.

சென்னையில் பெற்ற விமானத் தொழில்நுட்பக் கல்வியும், கனடாவில் பெற்ற அனுபவமும் இந்த முயற்சிக்கு அடித்தளமாக அமைந்தன. வான் எதிர்ப்பு அமைப்புகள், ஆரம்பகால விமானப் பயிற்சிகள், ஓடுதள முயற்சிகள் போன்றவற்றிலும் அவர் பங்காற்றினார்.

தொழில்நுட்பப் பணிகளுக்கு அப்பாலும் சங்கர் அண்ணாவின்  முக்கிய பொறுப்புகள் இருந்தன. 2000ஆம் ஆண்டு நோர்வேயின் சமாதான முயற்சிகளின் போது எரிக் சோல்ஹெய்ம் மற்றும் தேசிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் பங்கேற்றார்.

இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த வேளையில் தலைவருக்கும் , சங்கர் அண்ணாவுக்குமான உரையாடலில் போது

முதலாம் உலகப்போரின்போது போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் மரியாதை பற்றி தலைவருக்கு சுட்டிகாட்டினார் சங்கர் அண்ணா  அவர் தட்டிய அந்தப் பொறி தான் எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய போராளிகளுக்கும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற சிந்தனை தலைவர் மனதில் உருவானது. அந்தவகையிலேயே புலிகளின் முதல் மாவீரரான சங்கரின்

(சத்தியநாதன் ) நினைவு நாளை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார்

இவ்வேளையில்தான் அந்த துயர் சம்பவம் நிகழ்ந்தது

2001 செப்டம்பர் 26 நாள் காலை, ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் சங்கர் அண்ணா வீரச்சாவடைந்தார்

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் அமைப்புக் கட்டமைப்புகளின் வளர்ச்சியைப் பதிவு செய்யும் வரலாற்றில், அவரது பெயரும் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது.

காயத்திரி



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post