வானொலிக்
குடும்பத்தின்
மற்றோரு உறவு இன்று விடை
பெற்றது (17.08.2021)
என்ற அறிவிப்புடன் இலங்கை
வானொலியில் ஒன்றாகவே தன்னுடன் அறிவிப்பாளராக தெரிவான ஜோக்கிம் பெர்னாண்டோ அவர்களின் இழப்புப் பற்றி குறிப்பிட்டார் பிரபல அறிவிப்பாளர் B.H
அப்துல் ஹமீத்.
திரு.
ஜோக்கிம் அவர்களின்
ஆற்றல்,
பழகும் பாங்கு பற்றியெல்லாம் விபரித்த இவர்
இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிடத்
தவறவில்லை.
சகோதர
மொழி கட்டாயமாக்கப்பட்டதால் வங்கியில் வகித்த நிரந்தரப் பதவியைக்கூட உதறித் தள்ளி விட்டு இறுதிக் காலம்வரை பகுதிநேர அறிவிப்பாளராகவே பணி புரிந்தவர் ஜோக்கிம்
என்பதைச் சுட்டிக் காட்டினார்.தமிழ்த் தேசிய இனம் சிங்களத்தைக் கட்டாயமாக்கியபோது
மாவட்டங்கள்,மாகாணங்கள் கடந்து தனது உணர்வை வெளிப்படுத்தியது.பொதுவாக காசி ஆனந்தனைத்தான் முன்னர் இவ்வாறு
குறிப்பிடுவர்.தமது உணர்வை வெளிப்படுத்த
பதவியைத் துறந்த பலர் தம்மை வெளிப்படுத்தாமல்
சிரமமான வாழ்வை வாழ்ந்து முடித்தனர்.இவ்வாறான சிலரைப்பற்றி இன்று நினைத்துப் பார்ப்போம்.
27.10.1982 அன்று
நடைபெற்ற சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலின் பின்னர் கடற்படையில் பணியாற்றிய டாக்டர்சோமசுந்தரத்தின்(காந்தீயம் இராசசுந்தரத்தின் சகோதரர்) வீட்டில் ஏற்கெனவே வாடகைக்கு குடியிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இந்த
வீட்டைவாடகைக்கு எடுத்திருந்தனர் புலிகள்.
அயலவர்கள் எவருக்கும் இது தெரியாது. ஆயுதங்களை
(பொலீஸ் நிலையத் தாக்குதலில் கைப்பற்றப் பட்டவை)
இறக்கிய போதுதான் அயலவர்கள் இவர்களை இனம் கண்டனர். அந்தக்
காலத்தில் இது பெரும் சிரமத்தை
ஏற்படுத்தியது.அடுத்த ஏற்பாடுகளைச்
செய்யும்
வரை சிலர் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவேண்டிய
நிலை ஏற்பட்டது.
இதன்
பின்னர் அதே ஊரான கொக்குவிலில்
நந்தாவில் அம்மன் கோவிலடியில் நான்கு வெவ்வேறு வீடுகளில் அறை எடுத்துத் தங்கினர்.
அவ்வாறான ஒரு அறையில்தான் பிரபாகரனும்
இருந்தார்.பொட்டு இரு அறைகளில் மாறி
மாறி இருந்தார். அவற்றில் ஒரு வீட்டுக்காரர் பால்
வியாபாரம் செய்பவர். அவருக்கு எல்லாமே பெண் பிள்ளைகள்.1983 ல்
நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பான துண்டுப்
பிரசுரத்தினை பிரபாகரனே எழுதியிருந்தார். இப் பிரசுரத்தினை
பாடசாலைகளிலும் விநியோகித்தனர் புலிகள்.யாழ் வேம்படி மகளிர்
கல்லூரிக்கு பொட்டு அனுப்பிவைக்கப்பட்டார். உயர்தர வகுப்பு
மாணவிகளிடம் அவர் துண்டுப் பிரசுரத்தைக்
கொடுத்த போது "ஆ நீங்களா?" என்றொரு
குரல் கேட்டது.நிமிர்ந்து பார்த்தபோது தான் தங்கியிருக்கும் இரு
அறைகளில் ஒன்றான பால்காரரின் வீட்டுப் பெண் அவர். அந்தக்
காலத்தில் ஒரு அறையைக் கைவிடுவது
என்பது பெரிய விடயம். எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் தான் இதனை எடுத்தது.
எப்படியும்
பாடசாலை சேவையில்தானே இந்த மாணவி வருவார்
என்று எண்ணிய பொட்டு பிற்பகல் முழுவதும் திருநெல்வேலிச் சந்தியில் காத்திருந்தார்.இந்த விடயத்தை வீட்டில்
சொல்லிவிடாதீர்கள் என்று சொல்வதற்காகவே இந்தக் காத்திருப்பு. பாடசாலைச் சேவையும் வந்து போயிற்று.மாணவியைக் காணவில்லை.குழப்பத்துடன் அந்த வீட்டுக்குச் சென்றார்
பொட்டு. அங்கே அந்த மாணவி நின்றார்.
மதிய உணவு இடைவேளையுடனேயே பாடசாலையை
விட்டு வெளியேறிய அந்த மாணவி வீட்டுக்கு
வந்தவுடனேயே விடயத்தை சொல்லிவிட்டார்.
வீட்டு
உரிமையாளர் பொட்டுவுடன் கதைத்தார்.தனக்கு எல்லாமே பெண் பிள்ளைகள் என்பதால்
தங்கியிருந்தோர் யாரென
தெரியவரும் போது தங்களுக்கு நேரப்போகும்
ஆபத்துக்கள் பற்றி பக்குவமாகச் சொன்னார்.இறுதியாக "நானும் சிங்களம் கட்டாயம்
சட்டத்தால் வேலையை விட்டவன்"என்று கூறினார்.அறை போனால் போகிறது;
ஒரு மூத்த இன உணர்வாளரை நேரில்
சந்தித்த நிறைவுடன் விடைபெற்றார்
பொட்டு.
இன்னொருவர்
ஜோசேப் பரராஜசிங்கம். இவரும் சிங்களத்தை திணிப்பதை ஏற்கமுடியாமல் அரச வேலையை துறந்தவர்.இவ்வாறான ஒருவரை போராட்டத் தலைமைக்கு எதிராக தனது சார்பாக செயற்படுமாறு
கருணா வலியுறுத்தினார்.ஆனால் "நான் தேசியத்தின் பக்கமே
நிற்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்
ஜோசப் பரராஜசிங்கம். அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடியவர்கள் எனக் கருதி வடக்கு
மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றியது கருணா ,பிள்ளையான் அணி. கருணா காற்சட்டை
போடத் தொடங்கிய காலத்திலேயே சிங்களம் சட்டத்தை எதிர்த்து பதவி துறந்த ஜோசப்
பரராஜசிங்கம் கிழக்குத் தேசியத்தின் பெயரால் தேவாலயத்தினுள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ்த்
தேசிய உணர்வுடன் செயற்பட்ட இன்னொருவரைக் குறிப்பிடவேண்டும்.மன்னம்பிட்டியை சேர்ந்த இவர் ஒரு பாடசாலை
அதிபர். பெயர் கணபதிப்பிள்ளை. தமிழரசுக் கட்சி மேற்கொண்ட பாதயாத்திரையைத் தொடர்ந்து இனித் தமிழனுக்கு
உரிமைகிடைக்கும் வரை காலில் செருப்பு
அணிவதில்லை என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர்.
1988-1989 காலப்பகுதியில்
புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவியவர். இவரது
ஒருமகன் போராட்டத்தில்
இணைந்து கொண்டார். கருணாகரன் என்ற இயக்கப்பெயருடன் இயங்கிய
கணபதிப்பிள்ளை உபேந்திரன் இவன் மட்/அம்பாறை அரசியல்த்துறை பொறுப்பாளராக விளங்கிய காலத்தில் 13.04.1994 அன்று மாவீரரானான். இவன்
படையணியில் இருந்த போது இன்னொரு முகாமில்
உள்ள நண்பனுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தை கருணா வாசித்துப் பார்த்தார். "எங்களது அடுத்த சந்திப்பு பாசறையிலா கல்லறையிலா" என அவன் அக்
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
மொழியின்
பெயரால் நடைபெற்ற சத்தியாக்கிரகம்,பாத யாத்திரை,சிங்களம்
மட்டும் சட்டத்தை ஏற்க முடியாமல் பதவி
துறப்பு முதற் கொண்டு கருணாகரன் குறிப்பிட்டது
போல் பாசறையிலும் ,கல்லறையிலும்
சங்கமித்த இவர்களுக்கான நினைவு
கூரலும் தமிழ்த் தேசியம் எனும் விருட்சத்தை வளர்த்தன.
போராட்டத்தின்
வலி தெரியாதோர் இனரீதியாக தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டதையே மறைத்து வரலாற்றைத் திரிகின்றனர்.வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களை
சிவகுமாரன்,சத்தியசீலன் போன்றோர் கலந்து கொண்ட பேரணி,கூட்டத்தில் பங்கு பற்ற ஏற்பாடு செய்தவர்
ஒருவரும் இந்த
வரலாற்றைத் திரிக்க
முயல்கின்றார். தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க எழுதுவோரும், எழுதக் களமமைத்துக் கொடுப்போரும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களைக் கொன்றொழித்த வர்களுக்கு முடி சூட்ட முனைகின்றனர்.பச்சையான அரசியல் விபச்சாரம் இது. தமிழரைப் பிரித்து
சிங்களத்துக்கு செங்கம்பளம் விரித்து வருகின்றனர்.பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளர்கள் என்று
சிலர் இருப்பர். இவர்கள் வருகை கிழக்குத் தேசிய வாதிகள். அருண் தம்பிமுத்து
போன்றோரின் சொத்துக்களை அபகரிப்பதை வழிமொழிகிறார்களா அல்லது தமது சொத்துக்களை அபகரிப்பதைத்
தடுக்க இவ்வாறு வருகை விரிவுரையாளர்களாக உள்ளனரோ தெரியவில்லை.இன்னமும் தம்மை இனங்காட்டாமல் வாழ்ந்துவரும் உண்மையான தமிழ்த் தேசிய வாதிகளின் மனதை இவர்கள் நோகடிக்கின்றார்கள்
என்பது மட்டும் நிச்சயம்.
Post a Comment