இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிஸ்சில் நடைபெற்றது!




மட்டக்களப்பு மாவட்டத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான மாவீரர் கேணல் நாகேஸ் அவர்களின் துணைவி யான முன்னாள் போராளி கெங்கா  ஏற்றிவைத்தாரபொது மாவீரர் திருவுருவப் படத்திற்கான ஈகைச் சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு ரகுபதி  ஏற்றிவைத்தார் .


அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது .

சிறப்புரை தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப்புலி பத்திரிகை ஆசிரியர் சு.ரவி அவர்கள் ஆற்றினார்

  மாவீரர்களின் உறவினர்களுக்கான தமிழீழத் தேசியக்கொடிப் பேழையினை மாவீரர் கெங்கா அவர்களின் சகோதரர் சதீஸ்குமார், மற்றும் நந்தகுமார் , சிவகுமார் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர் .

இந்த நிகழ்வினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மற்றும் போராளிகள் கட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடாத்தி இருந்தனர் . இந் நிகழ்வில் சுவிஸ் மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் முன்னாள் போராளிகள் , செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post