மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 9 ஆம் திகதி இன்றைய நாளில் மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவற்றில்
பிள்ளைகள்,பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி
கொலை செய்யப்பட்டனர்.
இன்றுவரை
அந்த படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை அந்த
அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Post a Comment