தர்மலிங்கத்தின் கொலைக்கு காரணமான செல்வத்துடன் சித்தார்த்தன் கூட்டு !


செல்வம் அடைக்கலநாதன் யார் ? தர்மலிங்கத்தின் மரணத்துக்குக் காரணம் செல்வம் அடைக்கலநாதன் . ஆனால்  தர்மலிங்கத்தின் மகனும் , செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடுகிறார்  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.

இவ்வாறு  கிளிநொச்சி ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இரா.சம்பந்தனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஜெனிவா விடயத்தைக் கையாள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது. மாவைசேனாதிராஜா ஒருவிஷப்பாம்பு . அவர் தலைமைப்பதவிக் காகவே அன்றிலிருந்து இன்றுவரை செயற்படுகின்றார் .

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில்  இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது . இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக - பாதக நிலை என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப்பதில் அளித்த அவர். இதில் ஒரு நன்மை இருக்கின்றது . இத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழிந்துவிடும் .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கதை முடிந்துவிடும் .

சிவசிதம்பரத்தின் மறைவுக்குப் பின்னர் தலைவர் பதவிக்கான தேர்வு இடம் பெற்றபோது அந்தத் தேர்வில் நானே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன் . ஆனால் , குறித்த கூட்டத்துக்கு மாவை சேனாதிராஜா மாத்திரமே சமுகமளித் திருக்கவில்லை . அவர் தலைமைப்பதவிக்காகவே அன்றிலிருந்து இன்றுவரை செயற்படுகின்றார் . அமிர்தலிங்கம் செத்தால் என்ன , ஆனந்தசங்கரி செத்தால் என்ன . அவருக்கு வேண்டியது தலைமைப் பதவியே . எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post