இந்தியா உளவுப் பிரிவான RAW (Research and Analyse Wing) அமைப்பின் உத்தரவின் பேரில் ஸ்ரீ சபாரதத்தினம் தலைமையிலான டெலோ அமைப்பினரால் பாராளமன்ற உறுப்பினர்கள் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டனர்
டெலோ
அமைப்பின் தலைவராக இருந்த ஸ்ரீ சபாரதத்தினம் அவர்களின்
தலைமையின் கீழ் செயல்பட்ட
பொபி என்பவரின் வழிகாட்டலில் வலன்டைன், சிட்டிபாபு,
ரஞ்சித் மற்றும் பழனிவேல் ராஜன் ஆகியோரே மேற்குறித்த கொலைகளை செய்தனர்.
தங்களின்
கட்டுப்பாட்டுக்குள் செயல்பட விரும்பாத தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை களத்தில் இருந்து அகற்றி தமது
கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்ட டெலோ
ஆயுத அமைப்புகளின் ஊடக வடக்கு கிழக்கு
பகுதியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும்
தனது
பூரணகட்டுப்பாட்டின் கீழ் செயற்பட மறுத்து
வந்த விடுதலைப்
புலிகள் அமைப்பு மீது பாராளமன்ற உறுப்பினர்களின்
கொலை பழியை சுமத்தி மக்கள் மத்தியில் இருந்து புலிகள் இயக்கத்தை அன்னியப்படுத்தும் நோக்கிலும் மேற்குறித்த கொலைகளை RAW (Research and Analyse Wing) அமைப்பு
செயற்படுத்தி இருந்தது.
சகோதர
படுகொலைகள் பற்றி பேசும் எவரும் 1980 களின் ஆரம்பத்தில் நடைபெற்ற மேற்குறித்த சம்பவங்கள் குறித்தோ , தமிழ் ஆயுத இயக்கங்களுக்கிடையான முரண்பாடுகளின் பின்னணியில்
இருந்த RAW (Research and Analyse Wing) அமைப்பு
குறித்தோ பேசுவதில்லை.
"We will be
soldiers, let India decide our politics" என்று டெலோ
அமைப்பின் தலைவரான ஸ்ரீ சபாரதத்தினம் அவர்களை
பேச வைத்த RAW (Research and Analyse Wing) அமைப்பு
டெலோ அமைப்பை பயன்படுத்தி வடக்கு கிழக்கு பகுதியில் எண்ணற்ற சதி வேலைகளில்
ஈடுபட்டது.
இதற்காக வடக்கு
கிழக்கு பகுதிகளில் RAW
(Research and Analyse Wing) அமைப்பு நேரடியாக
ஆட்களை சேர்த்து இந்தியா
அழைத்து சென்று பயிற்சியளித்து டெலோ அமைப்பில் சேர்த்த
சம்பவங்கள் 1980 களில் பதிவாகி இருக்கிறது
டெலோ
அமைப்பின் தளபதிகளில் ஒருவராக இருந்த தாஸ் அவர்கள் ஸ்ரீ
சபாரதத்தினம் தலைமை தாங்கிய அதே அமைப்பின் பொபி
என்பரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் முதல் புலிகள்
-டெலோ மோதலுக்கு வழிவகுத்த டெலோ உறுப்பினர்களால் புலிகளின்
உறுப்பினர்கள் சுந்தரம், லிங்கம் ஆகியோர் கொல்லப்பட்டு பசீர், முரளி ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவங்கள் வரையான பல சம்பவங்களின் பின்னணியில் RAW
(Research and Analyse Wing) அமைப்பின் மறைக்கரங்கள் இருந்தன
முன்னாள்
பாராளமன்ற உறுப்பினர்கள் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் படுகொலைகளை நினைவு கூறும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் மேற்குறித்த உண்மைகள் எல்லாம் தெரியும்
.
ஆனால்
இன்று வரை தமிழ் அரசியல்
தலைவர்கள் யாரும் இந்த உண்மையை பேச
முடியாத நிலையில் இருக்கின்றார்கள்
ஏன்,
இன்றுவரை பாராளமன்றத்தில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பாதீடு விவாதங்களில் வாக்களிபதா அல்லது
இல்லையா போன்ற தீர்மானங்களை கூட இந்தியா கொள்கை
வகுப்பாளர்கள் தான் எடுக்கின்றார்கள்
அதே
போல 1987 ஆம் ஆண்டில்
13 ஆம் திருத்த சட்டத்தை தமிழ் மக்கள் மீது திணித்து ஈ
பி ஆர் எல் எப் மற்றும்
ஈ என் டி எல்
எப் போன்ற இயக்கங்களுக்கு
ஆயுதங்கள் வழங்கி வழங்கி
தமிழ் தேசிய இராணுவம் என்கிற பெயரில் இராணுவ அமைப்பு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கில் நடந்த அத்துணை கொடூரங்களுக்கும் பின்னணியில்
RAW (Research and Analyse Wing) அமைப்பே
இருந்தது.
இன்றைக்கு
இடதுசாரி மற்றும் இலக்கியவாதிகள் வேஷம்
போட்டு சாதி அரசியல் பேசும்
பெருமாலோனோர் மேற்குறித்த கொடூரங்களின் பங்காளிகளாக இருந்தவர்கள் என்பதும் அவர்கள் RAW (Research and Analyse Wing) அமைப்பில்
தங்கி வாழ்ந்தவர்கள் என்பதும் யாராலும் மறைக்க முடியாத உண்மையாக இருக்கின்றது
ஆனால்
எதையும் பேச முடியாது .
எங்களுடைய
பிரச்சனைகளையும் அதற்க்கான தீர்வுகளையும் நாங்கள் தான் கேட்க வேண்டும்
. ஆனால் விரும்பியோ அல்லது விரும்பாமலோ பிரச்சனைகளை மட்டும் பேச அனுமதிகப்படுகிறோம்
எங்களுக்கான
தீர்வுகளை அவர்கள் நலன் சார்ந்து இலங்கை
கொள்கை வகுப்பாளர்களே தீர்மானிக்கின்றார்கள்.
இவ்வளவு
கேவலமாக இருக்கிறது தமிழ் அரசியல்.
Prasath TP (Facebook)
Post a Comment