முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு.கிண்னையடி கிராமத்தில் பிறந்தவாழ்க்கை வரலாற்றின் வெற்றி நாயகன்மதிவாணன்.

ஒரு நிமிடம் இதனை வாசித்து பாருங்கள் உங்களது வாழ்க்கைக்கும் இதில் இருந்து ஏதோ ஒன்று பயன் உள்ளதாக அமையலாம்இவர் செய்த சாதனை உலகில் முதல் பணக்காரனும் ஆகவில்லை. கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறவில்லை ஓர் சாதாரண மனிதன் எவ்வாறு உழைத்து முன்னேற முடியும் என்பதற்கு ஓர் உதாரணம்

இவர் ceylinco life insurance கம்பெனியில் வாழைச்சேனை கிளையில்துப்பரவு செய்யும் ஓர் ஊழியராக இவரது பயணம் தொடங்கியது. ஆங்கில மொழி மற்றும் சிங்கள மொழி அறிவோ அன்றைய பொழுது அவரிடம் இருந்ததில்லை. என்னால் துப்புரவு பணி மட்டுமே செய்ய முடியும் என்று அவர் அன்று எண்ணியதில்லை.முயற்சித்து பார்ப்போம் என்று அவரது முயற்சி அன்று தொடங்கியது

பேச்சு திறமையாளும் நேர்மை விடாமுயற்சியாளும் sales consultant ஆக கம்பெனிக்குல் ஈர்க்கப்பட்டார் பின்பு விடாமுயற்சித்து team leader ஆக பதவி உயர்ந்தார். என்னால் முடியும் என்று ஆங்கில மற்றும் சிங்கள மொழியையும் கற்று அதில் வெற்றியும் கண்டார்.

பதவி ஆசைக்காக அவருடன் பணியாற்றிய எவருக்கும் முதுகில் குத்தியதில்லை.உண்மையில் அவரது அயராத உழைப்பும் இனிமையான பேச்சும் அவரை எந்த கிளையின் துப்புரவு ஊழியராக வந்தாரோ அதே கிளையின் முகாமையாளராக(manager) பதவி உயர்வடைந்தார்.

பின்பு பல கம்பெனி அவரிடம் ஊதியம் உயர்த்தி தருகின்றோம் பல சலுகைகள் தருகின்றோம் என்று கோரிக்கையிட்ட போதும் அனைத்தையும் மறுத்து அவரை வளத்த கம்பெனிக்கு விசுவாசமாக இருந்தார்.

இன்று விடுமுறை நாள் அலுவலக வேலையை நாளை பார்ப்போம் என்று இருந்ததும் இல்லை அதேபோல் வேலை மட்டும்தான் என்று குடும்ப பாசத்தை மறுத்ததும் அல்ல  இறை பக்தி, நேர்மை, விடாமுயற்சி, சிறப்பான திட்டமிடல், அனைவரையும் ஆதரிக்கும் ஆற்றல், சிறந்த பயிற்சியாளர், நேர்மையான பேச்சு, customer உடன் பழகும் ஆற்றல், உழைப்பு இவற்றால் இன்று அவர் ARSM ஆக பதவி உயர்ந்துள்ளார்.

5000ரூபாய் மாத வருமானமாக தொடங்கிய பயணம் வீடு கார் லட்சம் தோடும் மாத வருமானம் என மாறியது அவரின் நேர்மையான மற்றும் கடின உழைப்பால் மட்டுமே.

இவை அனைத்தையும் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் அடையவில்லை 15ஆண்டுகளாக மிக பொறுமையாகவும் நேர்த்தியான உழைப்பாலும் அடைந்துள்ளார்

சாதனை என்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதோ இவ் உலகம் நம்மை கொண்டாடுவதோ மட்டும் அல்ல  பூச்சியத்தில் ஆரம்பித்து நூற்றையடைந்தவனும் சாதனையாளர் தான்

தகவல்: S.V.Karan  (facebook)


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post