(கனகராசா சரவணன்;)
ஒற்றுமை
வடக்கு கிழக்கு இணைப்பைற்றி மேடைகளில் பேசியவர்கள் இன்று பேசியவர்கள் ஜ.நாடுகள் சபைக்கு
4 பிரிவாக கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்களுக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா? பல கூறுகளாக பிரிந்து
கிடப்பவர்கள் மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். என பாராளுமன்ற உறுப்பினரும்
மட்டு மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
கள்ளியங்காட்டில் லங்கா சதேச மொத்த விற்பனை
நிலையம் இன்று வியாழக்கிழமை (9) திறந்துவைத்து உiராற்றிய போது
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்தேசிய
கூட்டமைப்பு சுமத்திரன் ஜரோப்பா யூனியனையும் அமெரிக்காவை திருத்திப்படுத்தவும் அதற்கு போட்டியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள்
வடமாகான முதலமைச்சர் சி;.வி விக்கினேஸ்வரன்
சிவில் அமைப்புக்கள் என பல கூறுகளாக
பிரிந்து ஜ.சநாடுகள் சபைக்கு
கடிதம் அனுப்புகின்றனர்.
இவ்வாறு
பல கூறுகளாக பிரிந்து கிடப்பவர்கள்
மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். ஆகையால் யார் முதலில் ஒன்றுபடவேண்டும்
என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும்
மற்றப்பக்கத்தில்
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை ஒருமித்த
குரலிலே ஒன்றாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது மட்டக்களப்பு மாவட்டத்திலே உரங்களையும் பதிவு செய்யப்படாத களஞ்சியசாலைகளில் வர்த்தக நோக்கிலே மறைத்து வைக்கப்பட்டிருந்தது அதனை அரசாங்கம் பரிசோதித்து
கைப்பற்றியபோது அதற்று பாராளுமன்ற உறுப்பினர் சாணிக்கியன் குரல் எழுப்பினார்.
மட்டக்களப்பு
மாவட்டத்திலே எத்தனை மூடை நெல் இருக்கின்றது
எத்தனை மூடை அரிசி இருக்கின்றது
என்பதை பார்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்க த்திருக்கின்றது திட்டமிட்ட சதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசியை 120 ரூபாவுக்கு விற்பது என்பது மிக ஒரு அடாத்தான
விடையமாக பார்க்கின்றோம்
ஆகவே
அரசியல் வாதிகள் என்பதற்காக எல்லா பிழைகளையும் நாங்கள் நியாயப்படுத்த முடியாது முடிந்தால் மில் உள்ளவர்கள் பதிவு
செய்து எங்களிடம் 20 ஆயிரம் 30 ஆயிரம் மூடை இருக்கின்றது தெரிவித்து
நெல்லை குத்தி அரிசியாக்க அரசாங்கம் தடை விதிக்கவில்லை
மில்லுகளே
இல்லாமல் தனிய களஞ்சியசாலைகளை கட்டி
நெல்லை களஞ்சியப்படுத்திவிட்டு அதனை அதிகூடிய விலைக்கு
விற்க காத்திருப் பவர்களைத்தான் நாங்கள்
சுற்றி வழைத்தோம் ஆனால் இந்த விடையத்திலே தமிழ்
தேசிய கூட்டமைப்பினர் பாமர மக்கள் விலை
ஏற்றத்தால் கஷ;டபடுகின்ற மக்கள்
பக்கத்தில் இருக்கவேண்டும்
மண்மாபியா
மண்பாபியா என்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி
உறுப்பினர் அடிக்கடி குறிப்பிட்டது காரணமாக மட்டக்களப்பில் தங்கச் சுரங்கம் இருப்பது போல தெற்கில் இருக்கின்ற
அனைத்து மண் வர்த்தகரும் இந்த
பகுதியில் வந்து வட்டமிடுவதும் இந்து பகுதியில் துண்டுகின்ற முயற்சியாக இருக்கின்றது
70 வது
80 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு கூக்குரல் இடுபவர்கள் இன்று பிள்ளையானுக்காக பாராளுமன்றத்தில் அதிகமாக பேசுவதையிட்டு
நான் கவலையடைகின்றேன். மக்களுடைய பிரச்சனைகளை பேசி மக்களுடைய பிரச்சனைகளில்
தீர்வு காணும் விடையத்திலே முயற்சி எடுக்கவேண்டும் அல்லது அவர்கள் சொல்வதுபோல மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை
மட்டக்களப்பில் டெல்டா வேரியன் 88 வீம் அதிகரித்துள்ளது எனவே
பொதுமக்கள் இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவது
வர்த்தக நிலையங்களில் கூடுவது மற்றும் அநாவசியமாக வீதிகளில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளைவிட்டு வெளியேறாது சுகாதார துறையினரின்; சுகாதாரவழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாற அவர் தெரிவித்தார்.
நன்றி:
தினக்குரல்
Post a Comment