மதுபோதையுடன் ஹெலியில் சிறைக்கு சென்று தமிழ் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லோகான்!


கைத்துப்பாக்கியுடன் சிறைக்குள் புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாழிட வைத்து கொடுமைப்படுத்திய சிறைச்சாலைகள் அமைச்சர் லொகான் ரத்வத்தவை உடன் பதவி நீக்க கோரிக்கை...

கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் விடுமுறை கொண்டாட்டம் ஒன்றிற்காக நண்பர்கள் சகிதம் சென்ற சிறைச்சாலைகள் நிர்வாகம், கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பயன்படுத்தியுள்ளார். அதற்கு அனுராதபுரம்  சிறைச்சாலை அதிகாரிகளும் அனுமதி வழங்கியுள்ளனர். சிறை அறைகளில் இருந்த தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து வரப்பணித்த இராஜாங்க அமைச்சர் அதில் இரு கைதிகளை தன் முன்நிலையில் முழங்காலிட வைத்து அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியுள்ளார்.

மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகள் மீது துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய அமைச்சரையும் அவரது கூட்டத்தையும் கைதிகளை பாதுகாக்கவென நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகள் தடுக்காது அவர்களுக்கு துணைபோயுள்ளனர். இது சட்டவிரோதமானது மட்டுமல்ல நீதிமன்றையும் நீதித்துறையையும் மலினப்படுத்தும் மற்றும் மனித உரிமை மீறல் செயலாகும்.

குறித்த அமைச்சரையும் அவருக்கு துணைபோன அதிகாரிகளையும் கைதுசெய்வதோடு அமைச்சரின் பதவியினையும் நீக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் M.A Sumanthiran , கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன் ஆகியோர் உற்பட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யார் இந்த  லொஹான் ரத்வத்தே..??

முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த  ரத்வத்தேயின் மகன்.

முன்னாள் பிரதமர் சிறிமாவின் மருமகன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மைத்துனர்.

 முன்னாள் தலதா மாளிகையின் தியவதன நிலமே மற்றும் மாவன்னல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹரிஸ் லெக்கே ரத்வத்தேயின் பேரன்.

2001ஆம் ஆண்டு கண்டி உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லீம் இளைஞர்கள் படுகொலை சம்பவத்துடன் கைது செய்யப்பட்டு நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்.

 தற்போதைய அரசில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்களான இருந்தவர்.

பிந்திய செய்தி: சர்ச்சைக்குரிய பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அவரின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுள்ளார்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post