தமிழ்த் தேசம், மக்கள் மீது மாறா பற்றுக்கொண்ட ஹம்சாயினி! நோர்வே எம். பி யாக தெரிவானதற்கு மட்டு முதல்வர் வாழ்த்து!


தமிழர் தேசத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் என்றும் மாறா பற்றுக் கொண்ட ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரட்ணம் அவர்கள் நோர்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

ஒஸ்லோ நகரின் பிரதி முதல்வராக மிக இளம் வயதில் தெரிவாகி தனது திறமையாலும், ஆளுமை மிக்க செயற்பாடுகளினாலும் இன்று ஓர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு  தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தில் ஒஸ்லோ மாநகரத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையை மேம்படுத்துவது தொடர்பிலும் எம்மோடு நட்புறவுடன் கலந்துரையாடியிருந்தார்.

அந்தவகையில் தற்போது நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினை இட்டு நாம் பெருமிதமடைவதோடு அவருக்கு நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.




































0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post