செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதி ராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சுயநல அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற முயற்சிகள், மற்றும் கடும் எதிரப்புக் களின் மத்தியில் அவர்களிள் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில். வல்வெட்டித்துறை மக்களுக்காக வல்வைப் பிரஜைகள் குழுவினூடாக அளப்பரிய சமுக சேவைகளைச் செய்து வந்ததுடன் தமிழ் தேசியத்திற்காக அர்ப்பணிப் புடன் செயற்பட்டு. வல்வை மக்களின் தேசியப் பிரச்சினை களுக்கும் முகம் கொடுத்து மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்துள்ள பட்டயக் கணக்காளர் சபாரத்தினம் செல்வேந்திரா அவர்கள் இன்று 22.09.2021.-. வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் தெரிவில் “நகரபிதா வாகத்” தெரிவு செய்யப்பட் டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில்.தமது சொந்த மக்களையே அழித்து விட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகளின் மத்தியில் செல்வேந்திரா இந்த மண்ணிலேயே இருந்து மக்களுக்காகப் போராடிய வரலாறுகள் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்......
கடந்த மூன்று வருடங்களாக சிவாஜிலிங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டு வந்த வல்வெட்டித் துறை நகராட்சி மன்றம் தவிசாளர் கோ.கருணானந் தராசாவின் மறைவை அடுத்து இடம் பெற்ற தேர்தலின் முடிவு வல்வெட்டித் துறை மண்ணுக்குக் கிடைத்த
ஒரு நல்ல அறிகுறியென வல்வை மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஆயினும் கடுமையான அரசியல் அச்சுறுத்தல்கள் மத்தியில் துணிச்ச லுடன் இந்தத் தேர்தலில் முகம் கொடுத்து திரு.ச.செல்வேந்திராவைத் தவிசாளராக்கிய தமிழரசுக் கட்சி.ரெலோ.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சி களினதும் நகராட்சிமன்ற உறுப்பினர் களுக்கும் வல்வெட்டித்துறை மக்களின் சார்பிலும், வல்வெட்டித்
துறை மண்ணை நேசிக்கும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்…!
அதேவேளை அரசியல் கட்சியின் செயற்பாட்டிற்கு அப்பால் கொள்கை ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் கட்சி சாராது முரண்பாடுகளை மறந்து
வல்வெட்டித் துறையின் அபிவிருத்தியைக்
கருத்தில் கொண்டு தமது உறுப்பினர் களையும் திரு.செல்வேந்திராவுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய டக்ளஸ் தேவானந்தா.அங்கஜன் இராமநாதன். சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கும்
நன்றியைத் தெரிவிக்கின்றோம்….!
உள்ளூராட்சி மன்றங்கள் கட்சி சார் பற்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட்டாலேயே அபிவிருதியை முன்னெடுக்கலாம்.. என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட்டு திரு.செல்வேந்திராவின் ஆட்சியைப் பலப்படுத்த வேண்டும் என வாழ்த்துகின்றோம்..!
Post a Comment