இப்படியும் நடக்கிறது...!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளு டன் சேர்ந்து ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியவுடன் கூட்ட மைப்பு உடைந்துவிட்டது என்று பலர் துள்ளிக்குதிக்கிறார் கள். அதிலும் சிலர்இ ரெலோவும் புளொட்டும் தமிழ் அரசுக் கட்சியின் முதுகில் குத்திவிட்டார்கள்இ அவர்களை கூட்ட மைப்பிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற அளவிற்கு கருத்துச் சொல்லி வருகிறார்கள். உண்மைதான்இ ஒரு கூட்டு அமைப்பு என்று வந்துவிட்டால் ஒவ்வொரு விடயங்களையும் கூட்டிலுள்ள மற்றவர்களுடன் கலந்துபேசிஇ முடிவெடுத்துத்தான் செயல்படவேண்டும். இந்த சாதாரண விடயம் கூடத் தெரியாதவர்கள் கூட்டுச் சேரக் கூடாது. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ரெலோ இறங்கியபோதே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்கவில்லை. கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களில் பெரும்பான்மை யானவர்களின் தெரிவுக்குரிய பெரிய அமைப்பு. இன்றும் (கடந்த தேர்தலில் சற்று பின்னடைவைச் சந்தித் திருந்தாலும்) தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப் பையே சர்வதேசம் பார்க்கின்றது. இந்தக் கருத்தில் நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படியிருக்கஇ கூட்டமைப்பும் அனந்தியின் கட்சிக்கு நிகராக ஒரு கட்சியாக போயிருந்து பேசுவதை மாவை ஜீர ணித்தாலும் கட்சியிலுள்ள மற்றவர்களால் அதனை ஜீரணிக்க முடியாதுதான். அவையெல்லாவற்றையும் ஒருபுறத்தே வைத்துவிட்டுஇ இப்போது ரெலோவும் புளொட்டும் தனியாக சென்றுவிட் டதுஇ கூட்டமைப்பு பிளவுபட்டுவிட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தமிழ் அரசை புறம்தள்ளிஇ அந்த பங்காளிக் கட்சிகள் தனித்து கையொப்பமிட்டது தவறு என்றால்இ அவர்களின் விருப்பம் இல்லாமலும்இ அவர்களுக்கு தெரியாமலும் தமிழ் அரசுஇ அரசாங்கத்துடன் பேசுவது எந்த வகையில் கூட்டணி தர்மத்தின்பாற்பட்டது? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அரசின் பிரதிநிதிகள் கூட்டமைப்புடன் பேசுவதற்கு விரும்பினால்இ அவர்கள் நிச்சயம் சுமந்திரனைத்தான் அணுகுவார்கள் என்பது ஆய்வுக்குரியதல்ல. அதுவும்இ அமெரிக்க தூதுவரின் மத்தியஸ்தத்துடன் நடந்ததாகக் கூறப்படும் ஒரு முயற்சியை சுமந்திரனைத் தவிர அவர்கள் வேறு யாரையும் அணுகப்போவதில்லை. அவ்வாறு அணுகுகின்றபோது அவர் பேசுவதும்இ அதனை இரகசியமாக வைத்திருப்பதும் இராஜதந்திர அணுகுமுறை தான். ஆனால்இ அதுகுறித்து பல்வேறு செய்திகள் இறக்கை கட்டி பறக்கும்போது என்ன நடந்ததுஇ அது எதற்காக அவசிய மானது என்பதை பங்காளிக்கட்சிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அப்படித் தெரிவித்திருந்தால்இ ரெலோஇ அரசாங்கத்துடன் பேசுவதற்கு எதிராக அறிக்கைகளை விட்டு மூக்குடைபட் டிருக்க வேண்டி வந்திருக்காது. இவை முடிந்து தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு அண்மையில் மெய்நிகர் வழியில் கூடியபோதுஇ நடந்த பேச்சுக்கள் குறித்து சுமந்திரன் விளக்கிக் கூறினாரெனவும்இ அதனை தமிழ் அரசு ஏற்றுக்கொண்டாதாகவும் செய்திகள் வந்தன. ஆனால்இ இன்றுவரை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு அவைகுறித்து விளக்கமளித்ததாகவோ அவர்கள் ஏற்றுக்கொண்டனரெனவோ எந்த செய்தியும் இல்லை. அப்படியெனில் பேச்சு விடயத்தில் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசு தனி ஆவர்த்தனம் செய்வது சரியானது என்றால்இ புளொட்டும் ரெலோவும் மற்றவர்களுடன் சேர்ந்து கடிதம் அனுப்பியதையும் பிழையான அணுகுமுறை என்று எவரும் கைநீட்ட முடியாது. கூட்டமைப்பு எப்போது உடையும்இ அதிலிருந்து பங் காளிக்கட்சிகள் வெளியேறினால் நாங்களும் தமிழ் அரசில் தலைநிமிர்ந்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் உடைவு அவசியம்தான். ஆனால்இ தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஒன்றே அவசியமானதும் அவ சரமானதும் என்று நினைக்கின்றவர்களுக்கு அது மகிழ்ச்சி தருகின்ற செய்தி அல்ல.

 

- ஊர்க்குருவி

நன்றி ஈழ நாடு (08 செப்ரெமபர் 2021 புதன்கிழமை)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post