வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந் உற்சவம் கொவிட் நிலைமை காரணமாக இம்முறை இடம்பெறாது.
ஆலய
உற்சவம் தொடர்பான கூட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்
தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் முன்னிலையில்
நடைபெற்றது.
இதன்போது
ஆலய நிருவாக சபையினர், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி, கலாசார திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அம்மனுக்கு மாணிக்கபிள்ளையார்
ஆலயத்திலேயே அபிஷேக பூசை நடத்துவதுடன்
திரௌபதை அம்மன் ஆலயத்தில் எந்த வெளிச்சடங்குகளும் நடாத்துவதில்லை
எனவும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆலய உற்சவம் எதிர்வரும்
ஏழாம் திகதி ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
நன்றி கல்முனை
Net .
Post a Comment