எமது பாடசாலையின் அதிபர் திரு.குமாரசாமி அருணாசலம் அவர்கள் நேற்று 06-09-2021 அன்று 39 வருடமும் 5 மாதமுமான தனது நீண்ட ஆசிரியர், அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 2013 ஆண்டு எமது பாடசாலை ஒரு இக்கட்டான நிலையிலிருந்தபோது அதனைப் பொறுப்பேற்று, பல சவால்களைத் தாண்டியும் முகம்கொடுத்தும் சிறப்பாக நிருவகித்தவர். இவரது காலப்பகுதியில் எமது பாடசாலை பாட- இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் முன்னேற்றம் கண்டதோடு பௌதீக ரீதியிலும் வளர்ச்சி கண்டது. இறுதியாக வெளிவந்த உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி 30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல துறைகளிலும் பல்கலைக் கழகம் செல்வதையும் தொழி நுட்பப் பிரிவில் மாவட்டத்தின் முதலாம் நிலை உட்பட பல முன்னணி நிலைகள் எமது பாடசாலை மாணவர்களாயிருப்பததையும் இதற்குச் சான்றாகக் கூறலாம். இறுதியாக எமது பாடசாலையினை தேசியப் பாடசாலையாக்குவதற்கு முன்னின்று உழைத்து தேசியப்பாடசாலையாகத் தரம் உயர்ந்ததும் தனது பணி ஓய்வில் செல்கின்றார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு எமது வாழ்த்துகளையும் நன்றிகலந்த பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு அவரது ஓய்வு காலம் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் அமையவேண்டும் என்று இறைவனையும் பிரார்த்திக்கிறோம். ~
செங்கலடி மத்திய மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம். (facebook)
Post a Comment