ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து விலக்கிபடவேண்டும்!


ஜனாதிபதி சட்டத்தரணி எம்.. சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து விலக்கிவிட்டு அந்தக் கட்சியோடு சேர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்- மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஏனைய கட்சிகள் விலகவே கூடாது என்றுதான் கிளப் கவுஸ் உரையாடிலில்  கூறியிருந்தேன்-

அதுவும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலாகவே அந்தக் கருத்து அமைந்திருந்தது. அமெரிக்கா இந்தியா, சீனா என்ற நாடுகளின் புவிசார் அரசியல் போட்டிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் பற்றியே  உரை அமைந்திருந்தது.

உரையையும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலையும் முழுமையாகக் கேட்காமல் சிலர் தேவையற்ற முறையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு முரண்படுகின்றனர்.

ஒருவர் கூறிய கருத்துக்கு எதிராக விமர்சிக்கலாம். ஆனால் சேறுபூசக் கூடாது-

செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பின் தலைமையை ஏற்கலாமெனக் கூறியதற்குக் காரணம் உண்டு- யாழ்ப்பாணத்தில் இருந்து தலைமை பிறிதொரு மாவட்டத்திற்கு மாற வேண்டுமென்ற நோக்கமே தவிர வேறெதுவுமில்லை.

இந்தக் கருத்தை 31-08-2021 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்  எழுதியிருந்தேன்.

இந்த உரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பற்றியும் விமர்சித்திருந்தேன்- ஆனால் முன்னணி ஆதரவாளர்கள் எவரும் சேறுபூசவில்லை-

விமர்சனங்களைத் திருத்தங்களாக அல்லது மாற்றுக் கருத்தாக ஏற்க வேண்டும்- மாறாகக் கடிவாளமிட்ட குதிரைகளாக ஆதரவாளர்கள் செயற்படக் கூடாது.

அப்படிச் செயற்பட்டால், நீங்கள் ஆதரிக்கும் அரசியல் பிரமுகரின் செயற்பாடுகளை அது கவிழ்த்துவிடும்-

சுமந்திரன் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குத் தகுதியானவர் என்றும் ஆனால் அவருடை செயற்பாடுகளே அதற்குத் தடையாக இருப்பதாகவும் மற்றொரு கேள்வி ஒன்றுக்கும் பதில் வழங்கியிருந்தேன்-

ஆகவே ஒருவர் கூறும் கருத்தின் வியாக்கியாணத்தைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கக் கூடாது-

 Amirthanayagam Nixon  (facebook)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post