தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக எனக்கு தகுதி!
தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் சுமந்திரன்
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின்
னர்
அந்தத் தலைமைப் பதவிக்கு தான் தகுதியானவர் என்று
கூட்டமைப்
பின்
பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்துள்ளார்
கொழும்பு
தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சுமந்தி ரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பிறகு பெற்றுக்கொள்ளசு மந்திரன் தகுதியானவரா என்று பேட்டியாளர் கேட்டபோது, தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன் என்று
அவர் பதிலளித்திருக்கிறார்.அவரின் பேட்டியின் சில பகுதிகளை கேள்வி
பதில் வடிவில் இங்கே தருகின்றோம்.
கேள்வி:
தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும் சுமந்திரன், சம்பந்தன்உள்ளிட்ட கூட்டமைப்பினர் உயர் மட்டத்துக்கு செல்வதற்கான
நோக்கம் என்ன?
பதில்:
அதற்கு பிரதான காரணம் நாம் முன்னர் நல்லாட்சி
அரசாங்கத்துக்கு ஆதரவளித்தோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை. அதன் காரணமாக மக்கள்
அங்கும் இங்கும் அலை மோதினர்.
கேள்வி:
அப்படி என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் சிதைவு ஏற்பட்டது?
பதில்:
அந்த சிதைவின் தாக்கம் எம்மையும் தாக்கியது.
கேள்வி
: அதற்கு பொறுப்புக்கூற வேண்டியது சுமந்திரன் அல்லவா?
பதில்:
சுமந்திரன் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதை நான் ஏற்றுக்
கொள்கின்றேன்.
கேள்வி:
சுமந்திரன் பிரச்னைகளை விற்றுப் பிழைக்கின்றாரா?
பதில்: அவ்வாறு
கூறமுடியாது. நாம்அப்படி செயற்படுவதும் இல்லை.
கேள்வி:
சுமந்திரன் தனிப்பட்டவிளையாட்டொன்றை விளையாடுகின்
றாரா?
அதாவது தான் ஒரு தேசிய
அரசி
யல்வாதி
என்ற வகையிலான தனிப்பட்ட விளையாட்டொன்றை விளையாடு
கின்றாரா?
பதில்: அதனை
நான் ஏற்றுக்கொள் ளப்போவதில்லை.
கேள்வி:
சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பின்னர் பெற்றுக்
கொள்ள
சுமந்திரன் தகுதியுடையவரா?
பதில்:
தகுதியானவரா எனக் கேட் டால்
ஆம் தகுதியானவர்.
கேள்வி:
எதற்காக இந்தியாவின் வெளிவிவகார செயாலாளர் இலங்கை
வந்தார்?
பதில்: அவர்
புதிதாக நியமிக்கப்பட்டவர். ஆகவே அயல் நாடுகளுக்கு
விஜயம்
செய்வது
சாதாரணமான விடயமாகும்.
கேள்வி:
அப்படியாயின் கதவையடைத்துக்கொண்டு நீங்கள் பேசியது
என்ன?
பதில்: நாம்
கதவை அடைத்துக் கொண்டு பேசவில்லை.
கேள்வி:
அப்படியானால் பேசியவிடயங்களை கூறினீர்களா?
பதில்: ஆம்
பேச்சு முடிந்தவுடன் நாம் பேசிய விடயங்களை
வெளியில் வந்து தெரிவித்தோம்.
கேள்வி:
கூட்டமைப்பின் தேர்தல் வாக்குளை வேறொரு இடத்தில் கொண்டு
சென்று
வைப்பதற்கான நிலை தென்படு கின்றதா?
பதில்: இல்லை
அவ்வாறானதொரு நிலை இல்லை.
கேள்வி:
தேசிய தலைவரொருவர்இல்லை?
பதில்:
ஆம் இல்லை.
கேள்வி:
எதிர்க்கட்சியென்ற ஒன்று இல்லை?
பதில்:
ஆம். இல்லை
கேள்வி:
உங்களுக்கு தென்படவில்லையா?
பதில்: இப்பொழுது
எமக்கு தென்படவில்லை. ஆகவே நாம் அதனை
உருவாக்க
வேண்டும். )
நன்றி:
ஈழ நாடு 12 ஒக்டோபர் 2021 செவ்வாய்க்கிழமை
Post a Comment