யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு !


இச் சம்பவம் 21.10.2021 அன்று பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு கறுத்தப்பாலம் (செங்கலடி) பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடுவாமடு பகுதியைச் சேர்ந்த மூத்ததம்பி காளிக்குட்டி (63) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

கறுத்தப்பாலப் பகுதியிலுள்ள  போதகர் தோட்டத்தில் காவல் கடமையில் ஈடுபட்ட இவர் இன்னொருவருடன் சென்ற சமயம் எதிர்பாராத விதமாக யானையின் தாக்குதலுக்குள்ளனார். கூடச் சென்ற கணபதி என்பவர் ஓடித் தப்ப தடக்கி வீழ்ந்த இவரை யானை மிதித்து கொன்றுள்ளது.மக்கள் நடமாட்டம்  அதிகமுள்ள இந்த இடத்தில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ளோர் பீதிக்குள்ளாகியுள்ளனர்.



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post