பிரான்ஸ்சில் வசிக்கும் அசுரா என்ற இலக்கிய ஆளுமையைச் சந்திக்க வீதியெல்லாம் அடைத்து நின்ற வாகனங்களை தாண்டி, புவி நிலை காட்டியின் மாபெரும் உதவியோடு சென்று சேர்ந்தேன். அவர்வீட்டில் உள்ள புத்தக அறையில்த்தான் இந்தப்புத்தகத்தை திருடினேன்.
புத்தகம்
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்று இருந்தாலும் அதைப்படித்து முடித்த பின்னர். இதன் தலைப்பு ‘’ இளைஞர்
காங்கிரஸ், யாழ்ப்பாணம் ! ‘’ என்றே வந்திருக்கவேண்டும் என தோன்றியது.
ஏனெனில்
இதை உருவாக்கியவர்கள் முழு இலங்கைக்கும் இளைஞர்
காங்கிரஸ் கிளைகள் உருவாகவேண்டும் என விரும்பினர்.
உயர்தரம்
படித்தபோது அம்பலவாணர் சிவராயாவின் ‘’ இலங்கை அரசியல்’’ என்ற நூலில் சில
வரிகளே இந்த
அமைப்புப் பற்றி வந்திருந்தது. ஆனால் அறியப்படவேண்டிய மாபெரும் அமைப்பு இது.
1920- 1935 வரை ஒட்டுமொத்த இலங்கைக்குமான சுதந்திர குரலாக செயற்பட்ட அமைப்பு. ஒரு அன்னிய விடுதையையும் தேசிய ஒன்றுபட்ட மறுமலைச்சிக்க்கான அறிவார்ந்த குரலாக, செயலாக இந்த அமைப்பு இருந்தது.
அன்றய
தேதியில் மாணவர்களாக இருந்த அற்புதமான சிந்தனாவாதிகளால் இது ‘ மாணவர் காங்கிரஸ்’ என்று உருவாகி பின்னர் இளைஞர் காங்கிரசாக உயர்ந்தது. இந்திய விடுதலையை நம்விடுதலையாக ஏற்றிருந்தது. மாகாத்மாவின்பால் அதீத ஈடுபாடும் அதன்
வழி செயற்பாடும் கொண்டிருந்தது.
இந்த அமைப்பின் உன்னத தலைவராக மிக எளிய மகனாக மிளிந்தவர் கன்டி பேரின்பநாயகம்.
1927 இல் மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்து ஒரு மாபெரும் அலையை அவர் ஏற்படுத்தினார். மகாத்மா கொழும்பில் வந்திறங்கி இலங்கை பூராவும் பயணம் செய்தாலும், தன்னை அழைத்தவர்கள் யாழ்ப்பாண காங்கிரஸ் என்பதை கூறிக்கொண்டே இருந்தார்.
1927 நவம்பர் 27 மிக முக்கியமான நாள். காந்தி யாழ்ப்பாணத்தில் உணர்ச்சிபொங்க கால்பதித்த நாள். அவர் பேசியபோது ‘’ இங்கு நான் இந்தியாவின் ஒரு பகுதியில் வந்திருப்பதைப்போலவே உணர்கிறேன். உங்கள் ஓவ்வொரு முகங்களும் ஏற்கனவே தெரிந்ததுபோலவே இருக்கிறது ‘’என்றார்.
கன்டி
பேரின்பநாயகம் இலங்கை மக்களிடமும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கிராமம், கிராமமாக சேர்த்த 100000 ரூபாயை கதர் போராட்டத்திற்காக காந்தியின்
கையில் கொடுத்த சம்பவம் இன்றைய பல இந்திய தலைவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை.
இந்த அமைப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கினாலும் சிங்களத்தலைவர்கள் பலரும் கௌரவ பேச்சாளர்களாக கலந்துகொண்டார்கள். N. M பெரேரா, பிலிப் குணவர்த்தன, கொல்வின் R. D. சில்வா, வெஸ்லி குணவர்த்தன போன்ற பிற்கால கொமினீசிய தலைவர்கள் அடிக்கடி யாய்ப்பாணம் வருகைதந்து காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார்கள். அதைவிட பிற்கால இனவாதத்தை சந்தர்ப்பவாதமாக்கிய J. R ஜெயவர்த்தனா, S. W. R. D போன்றவர்கள்கூட அரசியல் கருத்துருவாக்க கூட்டங்களுக்கு வந்தார்கள்.
சிங்களத்தலைவர் ஒருவர் கருத்துக்கூறும்போது ‘’யாழ்ப்பாணமே அரசியல் கருத்துருவாக்க மையமாக திகழ்கிறது’’ என்றார1931 இல் திரு நேரு, மகள் இந்திரா மற்றும் மனைவியோடு வருகை தந்தார். ‘’அவர் பேச்சு கடும் வெயில்க்காலத்தின்பின் பெய்த மழை என வர்ணிக்கப்பட்டது. தனது பேச்சில் ‘’யாழ்ப்பாணம் தனது மனதுக்கு
நெருக்கமாக
இருக்கிறது’’என்றார்.
சுவாமி விபுலானந்தஅடிகள் சிலகாலம் காங்கிரசின் தலைமையை ஏற்று வழிகாட்டினார்.
இந்த
நூல் படித்து முடிக்கும்போது ஒரு பெரு மூச்சுத்தான்
வெளிப்பட்டது. கன்டி பேரின்பநாயகம் மனிதர்களை உருவாக்கிய தலைவர். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்காக ஆற்றிய பணியை யாரும் அறியவில்லை. அவரால் உருவாக்கப்பட்ட சாதியம் இல்லாத சமூக வளர்ச்சி மிக்க
அறிவார்ந்த இளைஞர்களால் யாழ்ப்பாணம் வாசம் வீசியது. இப்போது
எப்படி அந்த வாசம் இருக்கிறது
என்று உங்களுக்கு தெரியும்.
இன்று
‘தமிழர்கள் பிரிவினைவாதிகள்’என்பவர்கள்,..
அவர்கள்
தேசிய ஓற்றுமைக்கும் ஒன்றுபட்ட விடுதலைக்கும் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை அறிய இந்த நூல்
ஒரு பொக்கிசம்.
1956 க்கு
பின்னர் தம் ஒன்றுபட்ட இலங்கையின்
வளம்மிக்க எதிர்காலம் சிதைந்தபோது கன்டி பேரின்பநாயகம் மனம் வெந்து இப்படிக்கூறினார்
« நாம் நல்லெண்ணமும், நல்லாசியும்
நிறைந்த நாடொன்றை கனவுகண்டு உழைத்தோம்…
»
இனம்,
மொழி, சாதி, மதம் தாண்டி மனிதம்
உருவாக்கிய கன்டி பேரின்பநாயகம் போன்ற தலைவர்கள் வென்றிருந்தால் இன்று உயர்ந்த நாட்டின் குடிமகனாக நான் இருந்திருப்பேன். அகதியாக
அல்ல !!
நாம்
தோற்றுவிட்டோம்.. ! சந்தர்ப்பவாதமும் இனவாதமும் வென்றுவிட்டது. எல்லாவற்றிலும் நாம் தோற்றுவிட்டோம் !
**
அசுராவிடம்
மீண்டும் வெக்கத்தைவிட்டு இந்தப்புத்தகத்தை திருப்பி கொடுக்கப்போகிறேன். களவெடுத்தாவது இதை யாராவது படிப்பார்கள்.
படிக்கவேண்டும்
!
Sathiaseelan Ponnuthurai (facebook)
Post a Comment