மாகாண சபை தேர்தல் இடம்பெற்றால், வட .கிழக்கு மாகாண சபைகளைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற முடியுமா?


யாரால், ஏன் இந்த நிலைமை?

மாகாண சபை தேர்தல் இடம்பெற்றால், வடக்கு மாகாண

சபையை எங்களால் கைப்பற்ற முடியுமா என்னும் கேள்வியிருப்ப

தாக, பாராளுமன்ற உறுப்பினர் எம். . சுமந்திரன் அண்மை

யில் தெரிவித்திருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு

எதிர்கொண்ட பின்னடைவுகளை கருத்தில் கொண்டு சிந்திக்கும்

எவராலும் இதனை ஊகிக்க முடியும். ஆனால், இந்த இடத்தில் கேட்க

வேண்டிய கேள்வி - ஏன் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்

டது?

கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பு கண்மூடித்தனமான

நம்பிக்கையுடன் ஐந்து வருடங்களை செலவிட்டிருந்தது. எதிர்க்கட்

சித் தலைவர் ஆசனத்துடன் சம்பந்தன் திருப்தியுற்றிருந்தார். பங்

காளிக் கட்சிகளும் அமைதி காத்தன. இந்தக் காலத்தில் முன்வைக்

கப்பட்ட எந்தவொரு விமர்சனத்தையும் கூட்டமைப்பின் தலைவர்கள்

கருத்தில் கொள்ளவில்லை. வரமுடியாத அரசியல் யாப்பு ஒன்றுடன்

மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர்.

இறுதியில் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரம

சிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகளின் களமாக தென்னி

லங்கை அரசியல் உருமாறியது. இந்த முரண்பாடுகளின் போதுகூட,

ரணிலை பாதுகாக்கும் முயற்சியில்தான், கூட்டமைப்பினரின் நேரம்

செலவானது. கூட்டமைப்பு ரணிலை பாதுகாக்க முற்பட்டதற்கும் தமிழ்

மக்களின் நலன்களுக்கும் ஏதாவது தொடர்புண்டா? நிச்சயமாக

இல்லை. இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவால் அவரின் கட்சியைக்

கூட காப்பாற்ற முடியாமல் போனது. ஒரு தலைமை எந்தவொரு விட

யத்தை முன்னெடுக்கும்போதும் அதனால், அவர்கள் பிரதிநிதித்து

வம் செய்யும் மக்களுக்கு நன்மை உண்டாக வேண்டும். அவ்வா

றில்லை என்றால் அந்த செயல் தவறானதுதான்.

இந்த பின்புலத்தில்தான் கூட்டமைப்பு அதன் செல்வாக்கை படிப்

படியாக இழக்க நேர்ந்தது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் கூட்ட

மைப்பின் மீதான மக்கள் அதிருப்தியை தெளிவாகப் படம்பிடித்துக்

காண்பித்தது. அதன் பின்னர்தான் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி

தொடர்பில் கூட்டமைப்பு பேச முற்பட்டது. ஆனாலும் நிலைமைகளில்

பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இதன்

தொடர்ச்சியாகவே பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு மோசமான

பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

தற்போதுள்ள நிலையில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுமா

யின், கூட்டமைப்பால் தனித்து வடக்கு மாகாண சபையில், பெரும்

பான்மை ஆசனங்களை பெறமுடியாமல் போகலாம். ஏனெனில்,

விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினரும், கஜேந்திரகுமார்

பொன்னம்பலம் தலைமையிலான அணியினரும் தனித்து போட்டி

யிட்டால், வடக்கு மாகாண சபையின் இருப்பும் கேள்விக்கு உள்ளாக

லாம். அரச ஆதரவு தமிழ் கட்சிகளின் கையோங்குவதற்கான வாய்ப்

புக்களே அதிகம் தென்படுகின்றன.

இந்த நிலைமையை எவ்வாறு மாற்றியமைக்கலாம்? முடிந்த

வரைக்கும் தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒன்றாக தேர்தலை எதிர்

கொள்வதன் ஊடாக மட்டும்தான், இந்த நிலைமையை சரிசெய்ய

முடியும். வடக்கு மாகாண சபையை பெரும்பான்மை பலத்துடன்

கைப்பற்ற முடியும். இதற்கான பொறிமுறை தொடர்பிலேயே

கூட்டமைப்பினர் இப்போது சிந்திக்க வேண்டும். நிலைமை

மோசமாக இருக்கின்றது என்று கூறிவிட்டு அமைதியாக இருப்பதால்

நிலைமைகளை மாற்றியமைக்க முடியாது. நிலைமை கூட்டமைப்

புக்கு பாதகமாக இருக்கின்றது என்றால் அதற்கு கூட்டமைப்பிலுள்ள

அனைவரும்தான் பொறுப்பு. ஒருவர்மீது விரல்நீட்டிவிட்டு மற்றவர்

கள் அமைதியடைந்துவிட முடியாது.

நன்றி:ஈழ நாடு: (25.10.2021)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post