"இன்று கண்ணியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்."
என,
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியவர் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்.
புத்தக வெளியீட்டில்,
ஆயராக வந்தவர்,
வெறும்
ஆசியுரை
தான்
வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள்,
கத்தோலிக்க ஆயர்
தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும்
எதிர்பார்க்கவில்லை.
இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக எனது ஊடக நண்பரும் பி பி சி மட்டுநகர் நிருபருமான உதயகுமார் எனக்குத் தெரிவித்திருந்தார்.
.
அண்மையில் நியூசிலாந்து வந்திருந்த ஆயருடன் பேசுகையில்
மேற்குறித்த உரை பற்றிக் கேட்டபோது , " நான் பிறந்த காலம் முதல் தட்டி
விழுந்து
ஓடித் திரிந்த மண் அது . கண்ணியாவில்
தமிழ் தவழ்ந்தது. இன்று போய்ப்பாருங்கள். நான் புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை. நடப்பதைத்தான் அங்கு
சொன்னேன்" என்றார்.
அவருடன்
நான் பேசியபோது அவர்
சொன்னவற்றில் நான் இங்கு குறிப்பிடக்கூடியவற்றை,
சில
வசனங்களில் தருகிறேன்,
○ நம்மவர்கள் சொல்கிறார்கள் " எல்லாம் நிறைய இருக்கிறது " ..என்று. ஆனால் நம்மைச் சந்திக்கும் வெளிநாட்டவர்கள் , "இதுவே கடைசிச் சந்தர்ப்பம்...... நிறைவாய்க் கேளுங்கள்..உங்கள் பக்கம் தான் கேட்கவேண்டும்.." என்று சொல்கிறார்கள்.
● திருமலை மாவட்டத்திலிருந்து அகதிகளாகச் சென்ற பல குடும்பங்கள் தங்கள் காணி பூமிகளை விட்டுவிட்டு
இன்றும் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.
பலருக்கு இது இன்னமும் தெரியாது.
அவர்களை, அவர்களில் இயன்றவர்களை மீளவும் திருமலை மாவட்டத்திலேயே குடியேற்ற புலத்திலுள்ள வசதியானவர்கள் முன்வரவேண்டும். அவர்கள் கட்டாயம் செய்யவேண்டிய சமூகக்
காரியமாக அது அமையும்.
□ மட்டுநகர் - திருமலை மறை மாவட்டத்திலிருந்து திருமலை பிரிக்கப்பட்ட பின்னர் 15 கத்தோலிக்கப் பங்குகளை நான் நிருவகிக்கவேண்டியுள்ளது.
அதில் 4 பங்குகள் ( Parishes) தன்னிறைவானவை.
11 பங்குகளை பராமரிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. யாழ், மன்னார், மட்டக்களப்பு போன்ற வருமானமும் வசதியும் கொண்ட மறைமாவட்டம் அல்ல எனது மறைமாவட்டம்.
இதைவிட வறிய மாணவர்கள் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
எனப் பலரையும் பராமரிக்கும் பாரிய பணியும் எமது நிருவாகப் பொறுப்பாக உள்ளது.
புலத்திலுள்ள கத்தோலிக்கர்கள் உதவலாம்
ஒரு பங்கை வசதியுள்ளவர்கள் தத்தாகவும் குறித்த காலத்துக்கு ( 1 .2 வருடங்களுக்கு)
எடுக்கலாம்.
இது எனது கோரிக்கை அல்ல. ஆலோசனை மட்டுமே ! "
- என்றார் திருமலையின் புதிய
ஆயர் இம்மானுவேல்.
ஆயர் சொன்னவற்றிலுள்ள
அர்த்தங்களைப் புரியக் வேண்டியவர்கள் புரிவார்களாக.
நன்றி....!
Varathrajan Mariyampillai
Post a Comment