பெண்களின் ஆளுமைக்கு வடிகட்டுவது யார் ?


-அவதானி

ஒரு பெண் ஆளுமையுள்ளவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் காரணி என்ன? ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லலாம்.புலிகளால் கொல்லப்பட்டிருக்கவேண்டும்; இல்லையேல் ஆளுமையில்லாதவராகக்  கணிக்கப்படுவர் என உணர்த்த முயல்கிறது பெண்கள் சந்திப்பு என்று கூறிக்கொள்ளும்  குழு.

கடந்த 25 ம்  நாள் (சனிக்கிழமை) ரஜனி திரணகம மற்றும் செல்வி ஆகியோரை நினைவு கூர்ந்து தமது நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டது இக்குழு. இந்தக் குழு மிகவும் Busy யாக இருந்ததாலோ என்னவோ நாம் குறிப்பிடும் பெண்களை நினைவு கூரமுடியவில்லை. அல்லது இதனை ஒழுங்கு பண்ணிக் கொடுத்தவர்கள் பணிக்கவில்லை.

1.பிறேமினி தனுஷ்கோடி- கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி. வட்டக்கச்சியைச் சேர்ந்தவர். தனக்கான கல்விச் செலவுச் சுமையைக்  குறைத்து பெற்றோருக்கு உதவுமுகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.இவரைப் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த சிந்துசன் என்பவர் உட்பட 11 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். பின்னர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி  பல்வேறு இடங்களில் உடல் பாகங்களை வீசினர். முழுமையாக உடல் கிடைத்தால் எதாவது தடயம் வெளிப்பட்டு விடும் என சம்பந்தப்பட்டவர்கள்  கருதியிருக்கக்கூடும். 

 மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சிக்குப் பயணமாகும் போது வாகனத்தை மறித்து இந்த பாதகத்தைப் புரிந்துள்ளது பிள்ளையான் குழு.பிறேமினி பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் ஆளுமையுள்ள பெண்ணாக விளங்க மாட்டார் என இப்பெண்கள் குழு இவரைக்  கருதியிருக்கக் கூடும். அடுத்த சந்திப்பில் பிறேமினியின் படத்தைப் பகிரங்கபடுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட  அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் என நம்புகிறோம். இப் பாதகத்தைப் பற்றி பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரையினை  பின்னிணைப்பாகத்தருகிறோம்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/15596

2. விஜி எனப்படும் அனுஷியா நல்லதம்பி - மட்டு.வின்சென்ட் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவி. இவரது மாமனார் புலிகள் இயக்கத்தில் இணைந்து மாவீரர் ஆனவர் என்பதைத் தவிர இவரது குடும்பத்தினருக்கு வேறெந்தச் சம்பந்தமும் இல்லை.மட்டுநகரில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த இந்த மாணவி விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்தாலும் இரவில் அரச ஆதரவு குழுக்களின் அடாவடிக்குப் பயந்து வேறொரு வீட்டிலேயே தங்கி வந்தார். இந்த விடயத்தை பின்னாளில் டெலோ ஆயுதக்குழு உறுப்பினர் ஒருவரைத் திருமணம் செய்த பெண்ணொருவர் அக்குழுவினருக்குத் தெரியப்படுத்தினார் என்று தகவல் உண்டு. இம் மாணவியைக் கைது செய்த குழுவினரைத் தற்போது

பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஜனா என்ற கோவிந்தன் கருணாகரமே நெறிப்படுத்தி வந்தார். விஜியைக்  கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி விட்டு நிர்வாணமாக நடு இரவில் வீதியால் நடத்திக்கொண்டுசென்று கொலை செய்து வாவியில் வீசியது இக் குழு.

விஜியின் சடலத்தை வழங்குவதாயின் அவர் ஒரு பயங்கரவாதியென குறிப்பிடப்படும் ஆவணத்தில் கையெழுத்திடவேண்டுமென அச்சுறுத்தல் விடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த உயர்தர வகுப்பு மாணவி எந்தக்காலத்திலும் ஆளுமையுள்ளவராக விளங்கியிருக்க மாட்டார் என இந்தப் பெண்கள் குழு எப்படி முடிவெடுத்தது எனப் புரியவில்லை.

3. அடுத்தவர் ரிபாயா - காத்தான்குடியைச் சேர்ந்தவர்.தனது நண்பி சுகுணாவுடன் துவிச்சக்கர வண்டியொன்றை வாங்கச்சென்றபோது .பி.ஆர்.எல்.எப் வின் மட்டக்களப்பு மண்டையன் குழுத் தலைவர் இரா.துரைரத்தினத்தால் (முன்னைநாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) கைது செய்யப்பட்டு வாவிக்கரை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த சித்திரவதைகளால் சுகுணா மயக்கமுற்றார்.ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் தவிசாளராக விளங்கிய ராம் ராஜகாரியர்  `சூத்திரம்` (www.Sooddram.com) இணையத்தில் october 10 2017 அன்று எழுதிய பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு என்ற தலைப்பின் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

"வந்த பெரு நிதியை முக்கியமானவர்கள் தமக்கும் தம் உறவுகளுக்கும் முடக்கியபின் எஞ்சியதை ஏனையவர்க்கு பகிர்கையில் பலதும் நடந்தது. காத்தான்குடி பெண்ணை இச்சைக்காக சுகித்து புலி என மண்ணுள் புதைத்து மாகாண சபைக்கு வந்தவன்"

ரிபாயா கைது காணாமற் போன விடயம் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுமானால் சாட்சியமளிக்கத் தயாரென சுகுணா தெரிவித்த போதும் எந்த அமைப்புகளும் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை.  பிறேமினி விடயத்தில் ஆதாரங்களைத் தந்தால் வழக்குத் தொடரலாம் என அரசியல் வாதியான சட்டத்தரணி மங்களா சங்கர் கடந்த தேர்தல் காலத்தில் தெரிவித்தார். அத்துடன் தனது கடமை முடிந்தது என முடிவுக்கு வந்துவிட்டார்.

அன்னை பூபதி அவர்கள் இந்திய வல்லாதிக்க அரசிடம் யுத்த நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தாரே! இதெல்லாம்  பெறுமதியில்லாத விடயங்கள் என பெண்கள் குழு முடிவெடுத்து விட்டதா?

இன்னொரு விடயம் புனை பெயரில் கதை,கட்டுரை எழுதுவது சாதாரணமான விடயம்.  பெண்கள் பெயரில் எழுதிப் பெயர் பெற்றோர் பலர் உள்ளனர்.

 தமிழகத்தில் சுஜாதா மனைவியின் பெயரிலும் இலங்கையில் இயற்கையெய்திய ஜுனைதா செரீப் தாயாரின் பெயரிலும் (காத்தான்குடி) எழுதினார்கள். ஆனால் இலங்கையில் கௌரி மனோகரி என்ற பெயரில் எழுதும் ஞானம் என்பவர் விளம்பரத்துக்கு பயன்படுத்த மொடல் அழகி ஒருவர் எடுத்த படத்தைப் போட்டு கருத்துக்களை எழுதி வருகிறார்.இந்த மோசடி பற்றி இந்தப் பெண்கள்குழு கவனமெடுக்குமா? எழுதும் விடயங்களிலும் மோசடி; தன்னை இரு மாவீரர்களின் சகோதரி யென்று குறிப்பிட்டு நிறைய பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். தாங்கள்   எந்தக் கிராமசேவை அலுவலர் பிரிவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டால் அந்தப் பிரிவிலுள்ள மாவீரர்களின் விபரங்களைத் தருகிறோம். அதில் உங்கள் சகோதரர்களின் பெயர் இருந்தால் சரி; இல்லையேல் அவர்கள் வேறு ஏதோ அமைப்பில் இருந்தவர்கள் என்று அர்த்தம் என சுட்டிக் காட்டியபின்னும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த  விடயம் உள்ளது.

இது குறித்து `திறவுகோல்` என்னும் மின்னிதழில் வெளிவந்த விடயத்தை அப்படியே தருகிறோம்


                                                                                  ***

சிலருக்கு ஒரு மனோவியாதி உண்டு எந்த விடயமானாலும் அதனை புலி எதிர்ப்பு எனும் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பது.அதனைக் கழற்றா விட்டால் நிஜத்தைக்கான இவர்களால் முடியாது. தற்கொலை தொடர்பாக கருத்து வெளியிட்டார் யோகன் கண்ணமுத்து. சிவரமணி எனும் கவிஞர் ஒருவரின் தற்கொலை தொடர்பான இவரது கருத்து என்றுமே புலி எதிர்ப்பு கண்ணாடியைக் கழற்றமாட்டார் என்று புரிகிறது.வழக்குகளில் சந்தேகம் இருந்தால் விடுதலை செய்து விடுவார்கள் நீதி மன்றில். ஆனால் சிலரது கண்ணாடி உண்மையைக் காணவிடாது.

"வீட்டிலேயும் சிக்கல்கள் நடந்திருக்கலாம். எனக்கு எந்தளவு உண்மையென்று தெரியாது. அவவுக்கு ஒரு காதல் இருந்தது.எங்களுடைய பிரண்ட்  தான் தில்லைநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருந்தவர். அவருக்கும் சிவரமணிக்கும் காதல் உறவு ஒன்று இருந்ததாகவும் வீட்டில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.ஆனால் பெரிய கொடுமையானது புலிகளின்ற நெருக்கடிதான்" என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக 1985 யில் திருப்பழுகாமம் என்ற இடத்தில் இருந்த மக்கள்  மத்தியில் பஞ்சாயத்துச் சபை நடக்கவிருக்கின்ற சமயத்தில் நவரத்தினம் என்ற புளொட் உறுப்பினர் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.அந்த நிலையிலும் புளொட் செய்த மோசடிகள்,கொலைகள் பற்றி கடகடவெனச் சொல்லி முடித்தவுடன் புளொட் ஒழிக என்று சத்தமிட்டவாறே  விழுந்து உயிரிழந்தார். தற்கொலை என்றவுடன் இவரது தொகுதிக்குள் (பட்டிருப்பு) உள்ள கிராமத்தில் இவருக்குத் தெரியாமல் இந்த விடயம் நடந்திருக்க  முடியாது. வாகரைப் பிரதேச அரசியல்ப் பணியில் ஈடுபட்ட நவம் பல இளைஞர்களை புளொட் டில் இணைத்துள்ளார். அவர்களில் பலர் தமிழகம் - ஓரத்து நாட்டில் புதைக்கப்பட்டனர். இந்த விடயம் நவத்துக்கும் புளொட்டுக்குமிடையிலான பிரச்சினையானது.இறுதியில்  நவத்தை சிவிலியனாக வாழ அனுமதிப்போம் எனப் பஞ்சாயத்தில் வைத்து இதற்கு உறுதியளிக்கிறோம்  எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் புளொட்டினர்  கூறியதையடுத்து அங்கு சென்றார்நவம்  .அவரைக் கண்டவுடன் இயக்கப் பிரச்சினையை  பஞ்சாயத்தில் விசாரிக்க முடியாது என்றனர் புளொட்டினர். இவரைக் கடத்த முயன்ற போதே அவர் தற்கொலை செய்தார்.சிவரமணி விடயத்தில் நிச்சயமாக தெரியாத ஒன்றுக்குப்  புலிகளே குற்றவாளிகள் என்று கூறும் யோகன் கண்ணமுத்து பலருக்கு மத்தியில் பகிரங்கமாக நடந்த இந்தத் தற்கொலையை மறைக்கிறார்.  இறைகுமாரன் உமைகுமாரன் விடயத்தில் புளொட்டினரே கொன்றனர் என்ற உண்மையைச் சொல்ல இவருக்கு 39 வருடம் சென்றது. நவம் விடயத்துக்கும்  அப்படித்தானோ?

எப்படியோ பெண்கள்குழு  தமது  நடவடிக்கைகளை நடுநிலையாக இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சிக்கலாம். அதே போல பெண்கள் பெயரில் மோசடியாக எழுதி மக்களை ஏமாற்ற முயலும் பேர்வழிகளை இனங்காணட்டும்.

வெற்றிச்செல்வன் "உமா மகேஸ்வரனின் பாதுகாப்பாளர் மற்றும் வாகனச்சாரதியாக இருந்த ராபினை செயலதிபர் உமா மகேஸ்வரன் சாதியைச் சொல்லித் திட்டியதால் கோபமடைந்த ராபின் செயலதிபரோடு கடும் வாக்குவாதப்பட்டு காரோடு தலைமறைவாகிவிட்டார். செயலதிபர் ஆட்சி ராஜனிடம் ராபினையும் காரையும் கண்டுபிடிக்கும்படியும் ராபினை போட்டுத்தள்ளும்படியும் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யோகன் கண்ணமுத்துவோ பாசிசப் புலிகள் என்று தொடர்ந்து எழுதுகிறார். திலீபனை நினைவு கூருவது என்ற பெயரில் கூட தனது மன அழுக்குகளை வெளிப்படுத்தியுள்ளார்.நல்லவேளை புளொட்டோடு நமக்கு தொடர்பில்லாமல் போனதால் தப்பித்தோம் இல்லாவிட்டால் வீரமோ,தியாகத்தைப் புரிந்துகொண்டும் பக்குவமாக இல்லாமல் நாங்களும் ஏதாவது தத்துவங்களை கொட்டிக்கொண்டிருப்போம்.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post