நேற்று (20.11. 2021)மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் சுமுகமாக நடந்தது. ஆனால் இறுதி நேரத்தில் எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்த சிலர் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.
கூட்டத்தில்
அரை மணித்தியாலம் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். அவருக்கு
பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
அவையோர்
எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக்
குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம்.
Post a Comment