சிவா சின்னப்பொடி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்
அமெரிக்க
இராசாங்க திணைக்களம் கலந்துரையாடலுக்கு
அழைத்த சுமந்திரன் குழுவினரை புலம் பெயர் தேசங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடுமா?
அமெரிக்க
எதிர்பணியான ரசியாவும் சீனாவும் எங்களை அரவணைத்து எங்களது உரிமைகளை பெற்றுத் தந்துவிடுமா என்ன?
முட்டாள்களே!
விடுதலைப்புலிகள் மிதான தடையை மேலும் நீடித்து விடுதலைப்புலிகள் தரப்பை பேச்சுவார்த்தை மேடைகளில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்ட நீங்கள் அமெரிக்காவுக்கு அடி எடுத்து கொடுத்திருக்கிறீர்கள்.
சுமந்திரனின்
அப்புக்காத்து அரசியலில் எனக்கும் உடன்பாடில்லைத் தான்.ஆனால்இன்றைக்கு மாற்றான
ஆள் என்று கூறும் இந்த அப்புக்காத்து தலைமைகளில்
ஒருவரான கசேந்திரகுமார் என்ன செய்கிறார்?
அண்மையில்
சர்வதேச வானொலி ஒன்றில் அவரை வைத்துக்கொண்டு அரசியல்
கலந்துரையாடல் செய்யும் ஒரு பொறுக்கி கருத்து
சொல்ல வந்த ஒருவரை கீழ்சாதிக்காரன்
கீழ் சாதிப்புத்தி என்று திட்டுகிறான்.இவர் வாய் மூடி
பார்த்துக்கொண்டிருக்கிறார்.ஒரு நல்ல தலைமைக்குரிய
பண்புள்ளவராக இருந்தால் கசேந்திரகுமார் அந்த பரதேசியை கடுமையான
வார்தைகளால் கண்டித்துவிட்டு அந்த நிகழ்விலிருந்து உடனடியாக
வெளியேறிஇருக்க வேண்டும்.
எல்லாம் ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்.
நன்றி: Siva Sinnapodi( facebook)
Post a Comment