அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத்
திறம்
இருக்க
இரும்புத்
தோள்கள் கொண்டு
தமிழர்
துயர் துடைக்க
ஈழ மண் விடுதலையடைய
வியர்வை
சிந்தி-தங்கள்
அயர்வை
மறந்து
இளமைக்
காலக்
கனவைத்
துறந்து
கரிகாலன்
படையில் இணைந்து
நிலை
தளராது-ஈழக்
கனவினை
மறவாது
நெஞ்சில்
உரம் இழக்காது
நம்மை
நம் நாட்டை
நலம்
பல பேணி
நாளும்
காத்து-மாற்றானுடன்
வெஞ்சமர்
புரிந்து-எதிரியை
வீழ்த்தி
தனித்
தமிழீழம் பெற
வழிகாட்டியே
சந்தனப்
பேழைகளில்
உறங்கும்
மாவீரர்களே!!!!
சாகலின்
நன்றோ அடிமையாய் வாழ்வது
என உணர்ந்து
வீறு
கொண்டெழுந்து
ஆண்டுகொண்டிருக்கும்
சிங்கள
பேரினவாதத்தின் பிடியினுள்
மாண்டு
கொண்டிருந்த
எம்
இனத்தினை
மீண்டு
கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்!
உம்முடல்
தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும்
எம்
தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே
என்று
ஆகுதியாகினீர்!
தமிழர்
நிலம் காத்தீர்
தமிழ்
மக்கள் உயிர் காத்தீர்
உம்
உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர்
எம்
இனத்திற்காய் உலர்ந்திடும் சருகாய் உதிர்ந்தீர்
எம்
இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர்
என்றும்
எங்கள்
மனங்களில்
உறவாக
உயிராக
உணர்வாக இருப்பீர்
பலித்திடும்
உங்கள் கனவு
மலர்ந்திடும்
எம் தமிழீழம்!!!!
-ஜெ.கலைவாணி.
Post a Comment