இலங்கையில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா
வைரஸின் புதிய மரபணு மாற்றம் அடைந்த ஓமிக்ரான் பாதிப்பு இலங்கையில் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்
ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய மரபணு மாற்றம் அடைந்த ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை
தென்னாபிரிக்காவில் கண்டரியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸானது பல நாடுகளில், பரவியுள்ளதாக
உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இதன்
காரணமாக பலநாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதுடன், சர்வதேச போக்குவரத்தினையும் முடக்க
நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு
வளைகுடா நாடுகளாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் தலா
ஒருவர் மற்றும் நேற்றையதினம் இந்தியாவில் ஒமிக்ரோன்
தொற்றுடைய இருவர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment