மதம் பிடித்த கும்பலால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதன!

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீது மதநிந்தனை என்று மதம் பிடித்த கும்பல்களால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை கொடுக்கிறோம் என்று இப்படியான தாக்குதல்களும் கொலைகளும் செய்வது சாதாரண நிகழ்வு.

சுனி முஸ்லிம் அல்லாத ஒருவரோடு ஏதாவது பிணக்கு?

அல்லது அவரை ஏதோ காரணத்துக்காக வெறுக்கிறீர்கள்.

பழிவாங்குவது எளிது.

புனித நூலை, இறைத்தூதரை, அல்லது மதத்தை அவமதித்துவிட்டார் என்று பற்றவைத்தால் போதும்.

மதம் தலைக்கேறிய கும்பல்கள் ஏனையவற்றைப் பார்த்துக் கொள்ளும்.

இந்த பிரியந்த குமார தியவதன

கொழும்புக்கு வடக்கே கம்பகா மாவட்டத்தின் கணேமுல்ல எனும் ஊரைச் சேர்ந்தவர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்து சியோல்கோட் நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் முகாமையாளராக இருந்தார்.

தொழிற்சாலையில் முகமது என்ற பெயர் கொண்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. கட்டடத்தின் ஒரு பகுதியில் திருத்தவேலைகளுக்காக அந்த சுவரொட்டி அகற்றப்படும்போது கிழிந்துவிட்டது. பிரியந்த தான் சுவரொட்டியைக் கிழித்துவிட்டார் என்று கதை பரவ, மதநிந்தனை என்று ஊரவர் திரண்டுவந்து தொழிற்சாலைக்குள் நுழைந்து அவரைப் பிடித்து இழுத்துவந்து அடித்துக் கொன்று எரியூட்டினர்.

.கடந்த வாரம் பாகிஸ்தானின் வடமேற்கில் மதநிந்தனைக் குற்றஞ்சாட்டப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு மதவெறிக் கும்பல் ஒன்று கேட்டது. காவற்றுறையினர் மறுத்துவிட்டனர்.

வெறி கொண்ட கும்பல் காவல் நிலையத்தையும் காவற்றுறை வாகனங்களையும் தீக்கிரையாக்கியது.

                                                          ***

.சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவப் பெண் ஒருவர் முஸ்லிம்களின் தோட்டத்தில் வேலை செய்யும்போது, முஸ்லிம்களின் பாத்திரத்திலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டார்.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு முஸ்லிம் பெண்கள் கேட்க, இந்தப் பெண் மறுத்துவிட்டார்.

இதற்கு முன்பே அவரை மதம் மாறுமாறு கேட்டிருக்கின்றனர் அயலவர். அவர் மறுத்திருந்தார்.

அதையும் கணக்கில் வைத்து,மதநிந்தனை என்று பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்தது.

பின்னர், உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக விடுவிக்கவேண்டிய நிலை.

முஸ்லிம்கள் நாடு முழுவதும் வன்முறைப் போராட்டம் நடத்தினர். விடுவிக்கக்கூடாதாம்.

விடுதலை உறுதி என்றானதும்விடுவித்தாலும் நாட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கக்கூடாது. மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்என்றனர் அடிப்படைவாதிகள்.

(என்னைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானில் 45% அடிப்படைவாதிகள். 55% பொய் சொல்கிறார்கள்).

உச்சநீதிமன்றம் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையோடு அந்தப் பெண்ணை விடுவித்தது.

சில மாதங்களில் நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டதும் அந்தப் பெண் கனடா வந்துவிட்டார்.

அவரின் மகள் ஏற்கனவே கனடாவில் இருந்தார்.

கனடாவிலும் அந்தக் குடும்பம் இரகசிய இடத்தில் வாழ்கின்றனர்.

இங்கும் கொல்லப்படலாம்.

இப்படிப் பல கதைகள்.

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன.

பிரியந்த,

உனக்கு எம் இறுதிவணக்கம்.

தகவல் :கந்தசாமி கங்காதரன் ( facebook)


.



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post