யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு!


2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், இன்றைய தினம் (15), மாநகர மேயர் சட்டத்தரணி  வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக, மேயர் அணியை சேர்ந்த 10 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு   உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர் என 24 உறுப்பினர்கள்  ஆதரவாக வாக்களித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16  உறுப்பினர்களும்    அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும்  ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் என  21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இதற்கமைய, யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், 3  மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post