அம்பாறை பதில் அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்!


அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளதன் காரணமாக அவரது வெற்றிடத்துக்கு பொது நிர்வாக அமைச்சு இப்பதில் நியமனத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி  :  News Day (facebook)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post