பட்/தொகுதி மக்கள் மாத்திரமல்ல மட்/மாவட்ட தமிழ்
பேசும் மக்கள் மாத்திரமல்ல உலகத்திலே எங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அமரர் SMR ஐயாவின் பிறந்ததினத்தை நினைவுகூறுவதை உறவுக்காரனாக மாத்திரமல்ல உங்களில் ஒருவனாக நின்று நினைவுகூறுவதையிட்டு பெருமையடைகிறேன். அமரர் SMR தந்தை செல்வா
தமிழ்பேசும் மக்களுக்காக தமிழ் அரசு கட்சியை ஆரம்பித்த
பொழுது அவருடன் கூடநின்று கிழக்குமாகாணத்திலே
கட்சியை அறிமுகம் செய்த முக்கியமான கட்சிப்பிரமுகர்களில் அமரர் SMR முக்கியமான இடத்தை
வகித்துள்ளார். தொடர்ந்து கட்சிக்காகவும் கட்சியால் நடத்தப்பட்ட முக்கியசம்பவங்கள்/போராட்டங்கள் எல்லாவற்றிலும் பங்கு பற்றிய ஒரு சிறந்த தலைவராவார். கட்சி
தலைவர் பதவியை பொறுப்பேற்று சிறப்புடன் வழிநடத்திய ஓரு மாபெரும் தலைவராவார்
அமரர் SMR அவர்கள்.
அவர் அமரத்துவமடையும் வரை தமிழ்பேசும் மக்களுக்காகவும்
கட்சிக்காகவும் அரும்பாடுபட்ட ஒரு உத்தமபுத்திரன். 1965ம் ஆண்டு மார்ச்
மாதம் 22 திகதி இலங்கையின் 6வது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைபெற்ற
தினம்,1965ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி தேர்தல்
முடிந்து நாட்கள் இரண்டு கடந்ததும் பழைய அரசாங்கம் ராஜினாமா
செய்யாத புதிய அரசாங்கம் பதவியேற்காத ஒரு பதட்டமான சூழ்நிலை. அந்த
காலகட்டத்திலே எமது தமிழ் அரசு கட்சி யாருக்கு
ஆதரவளிக்கின்றதோ அவர்கள்தான்
அரசை அமைக்க கூடியதாக
இருந்த நேரத்திலே எத்தனையோ முழு அமைச்சுக்களை
தருவதாக முக்கியமான
இரண்டு கட்சிகளும் வாக்குறுதி அளித்தது. அப்பொழுது அமரர் SMR உட்பட கட்சியின்
மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்ட பொழுது
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ்பேசும்
* மக்களின்
உரிமைகளை பெறும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்ற தமிழ் அரசு
கட்சியின் இறுக்கமான கொள்கையை கடைப்பிடித்து நின்ற முக்கிய
உறுப்பினர்களில் இலட்சியவாதி
அமரர் SMRரும்
ஒருவர்.
* அவருடைய கனவுகள் இலட்சியங்களை அடைவதற்கும் தமிழ்பேசும் மக்களை சரியான வழியில் கொண்டுசெல்ல தன்னுடைய வாரிசு கெளரவ பா.உ. கிழக்கின்
இளம் சிங்கம் சாணக்கியன் அவர்களை தந்துள்ளார் ஆகையினால் அவருடைய அத்தனை எண்ணங்களையும் நிறைவேற்ற வேண்டுமானால் நாம் அவருக்குச்செய்யும் நன்றிக்கடன் அவரின்
வாரிசுக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய தேவை எமக்குண்டு.
வாழ்க தமிழ் வெல்க தமிழரசு
Post a Comment